ஒரே வகையான இரண்டு குற்றங்களும் இரு வேறுபட்டத் தீர்ப்புக்களும்
சுமார் கடந்த ஒரு வருடத்திற்க்கு முன் சிறீ லங்கா தௌவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்களால் நிகழ்தப்பட்ட ஒரு உரையில் பௌத்த மதத்தை நிந்தித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2014 -04-26 ம் திகதி ஹெலஉருமய எனும் கட்ச்சியினரால் ஒரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அவ்வாறே பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் கடந்த 2014-04-12 ம் திகதி கொம்பனி வீதி காவல் நிலைத்திற்க்கு அருகாமையில் வைத்து ஊடகங்களுக்கு முன்னால் புனித அல்-குரு;ஆனை பகிரங்கமாக மனமுறண்டாக அவமதித்துப் பேசினார் இது தொடர்பாக முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த 12 நபர்களைக் கொண்ட குழுவொன்று கொம்பனி வீதி காவல் நிலைத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்தார்கள்.
சிறீ லங்கா தௌவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்களுக்கு எதிரான வழக்கின் முதற்கட்ட விசாரனை கடந்த 06-05-2014 ம் திகதியன்று எடுத்துக் கொள்பட்டது
விசாரனை மிகவும் கடுமையாகக் கையாளப்பட்டிருந்ததுடன் பின்வரும்
1. பத்தாயிரம் ரூபா ரொக்கப் பிணை செலுத்தல் வேண்டும்
2. தலா பத்து இலட்ச்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பினைகள் நிறுத்தப்படல் வேண்டும்
3. பிரதி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காவல் நிலையத்திற்க்குச் சென்று கையொப்பம் வைத்தல் வேண்டும்
4. அத்துடன் அவரதுக் கடவுச் சீட்டு நீதி மன்றத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்
எனும் நிபந்தனைகளின் பேரில் கண்டித்து விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது நாம் அறிந்ததே
அதே நேரம் பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு எதிரான வழக்கின் முதற்கட்ட விசாரனை கடந்த 05-05-2014 ம் திகதியன்று எடுத்துக் கொள்பட்டது.
என்றாலும் இந்த வழக்கு பற்றி பல்வேறுபட்ட ஊடகங்கள் ஒன்றுக்கொன்று முறன்பட்ட தெளிவில்லாத இருவிதமான தகவல்களை வெளியிட்டிருந்தன.
சில உடகங்கள் அது பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு எதிராhக ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்பது போன்ற கருத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
இன்னும் சில ஊடகங்கள் ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களின் முறைப்பாடு மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த 12 நபர்களைக் கொண்ட குழுவினரால் செய்யப்பட்ட முறைப்பாடு ஆகிய இரண்டு முறைப்பாடுகள் தொடர்பானது என்பது போன்ற கருத்திலும் செய்திகள் வெளியிட்டிருந்தன.
எது எப்படி இருந்தாலும் பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரனை எவ்வித காரசாரமும்; இல்லாது கையாளப்பட்டதுடன்; இரண்டு பிக்குகள் உட்பட மொத்தம் அறுவர் வெறும் ஒரு இலட்ச்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்; என்பதிலிருந்து அது ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களின் முறைப்பாட்டுடன் மாத்திரம் தொடர்புடைய வழக்காகத்தான் இருக்க முடியும் என்றே கருத வேண்டியுள்ளது.
அவ்வாறின்றின்றி ஜாதிக பள சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் அவர்களின் முறைப்பாடு மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த 12 நபர்களைக் கொண்ட குழுவினரால் செய்யப்பட்ட முறைப்பாடு ஆகிய இரண்டு முறைப்பாடுகளும்; குறித் ஒரே சம்பவத்துடன் தொடர்புடையதாக இருப்பதனால் அவையிரண்டு முறைப்பாடுகளும் ஒரே வழக்காகக் கோர்வைச் செய்யப்பட்டது என்றிருந்தால் வழங்கப்பட்டத் தீர்ப்புக்களில் ஏன் இந்த விதியாசம்? ஏன் இந்த பாகுபாடு?
சிறீ லஹ்கா தௌவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளைவிட அதிகப்படியான நிபந்தனைகள் அல்லவா பொது பள சேனா அமைப்பின் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஏனெனில் சிறீ லங்கா தௌவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்கள் பௌத்த மதத்தை நிந்திக்க வேண்டும் என்ற மனோ நிலையில் அவ்வாறு உரை நிகழ்த்தவுமில்லை அது தவறுதலாக தடுமாற்றமாக நிகழ்ந்த ஒரு தவறு என்று கூறி சுமார் ஒரு வருடத்திற்க்கு முன்னதாகவே அதற்காக மன்னிப்பும் கோரியதாகத் தெரித்திருந்தார்.
அவ்வாறு எதிர்பாராவிதமாக நிகழ்ந்த மன்னிப்புக் கேட்க்கப்பட்டத் தவறுக்கே இந்த அளவு கடுமையான நிபந்தனைகள் என்றால்.
வேண்டும் என்று மனமுறண்டாக இஸ்லாத்தை அவமதிக்க வேண்டும் முஸ்லிம்களின் உணர்ச்சிகளைத் தூண்ட வேண்டும் அதன் மூலம் ஒரு இனக்கலவரத்தை உண்டுபன்னி அந்த இனவாதத் தீயில் குளிர்காய வேண்டும் என்ற மனோ நிலையில் கடந்த சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக பல் வேறு பாத்திரங்களில் பல்வேறு இடங்களில் ஊடகங்கள் காவல் துறையினர்களின் கண் எதிரே பகிரங்கமாகவும் மிகத் தெளிவாகவும் மிகக்கீழ்தரமாகவும் இனவாதத்தீயை மூட்டி வரும் பொது பள சேனா அமைப்புக்கும் மற்றும் அதன் செயலாளர் களபொட அத்தே ஞானசார தேரர் அவர்களுக்கும் எந்த அளவு அதிகபட்ச்ச நிபந்தனைகள் விதித்தாலும் அது குறைவானதே.
அத்துடன் ஜாதிக பள சேனாவின் நிப்பொன் ஹோட்டல் சம்பவத்தில் பொது பள சேனா அரசியல் யாப்பின் தெ;தியாயம் இரண்டின் 14 வது சரத்தில் கூறப்பட்டுள்ள பேச்சுச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் ஒன்று கூடுவதற்க்கான சுதந்திரம் போன்ற பல சரத்துக்களை மீறப்பட்டுள்ளது என்பதுவும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும்.
இவைகளைக் கேட்ப்பதற்க்கு நம் சமூகத்தில் யாரும் இல்லையா? அல்லது சிறீ லங்கா தௌவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் நம் சமூகத்தை விட்டும் வேறானவர்கள் எனும் மனோ நிலையா? ஏன் இந்த குறிகியப் பார்வை?
இன்று அவர்களுக்கு நாளை நமக்கு என்பதை மறந்து விடாதிரப்போம்.
முனாப் நுபார்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக