செவ்வாய், 6 மே, 2014

நமது சகோதரத்துவ வீழ்ச்சிக்கான காரணங்களும் தீர்வும். தொடர் - 06

நமது சகோதரத்துவ வீழ்ச்சிக்கான காரணங்களும் தீர்வும். தொடர் - 06

தீர்வுகள் : 
தீர்வு - 01

அவர் (நிராகரிப்பவர்) களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு சக்திகளையும் திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தம் செய்து கொள்ளுங்கள்; இவைகளின் மூலம் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும் உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும்  (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (அல்-குர்ஆன்:8:60)

மேற்படி வசனத்தில் நாம் நமது பகைவர்களான இறை மறுப்பாளர்களை அச்சமடையச் செய்யும் வகையில் எமது சக்திகளை எந்நேரமும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அந்த சக்திகளுள் இலௌகீக அடிப்படையிலான சக்திதிகளைத் தயார்படுத்துவதற்க்கு முன்னதாக நாம் ஆயத்தம் செய்ய வேண்டிய சக்திகள் முறையே علم  எனும் மார்க்கக் கல்வி إيمان  எனும் இறை விசுவாசம் تقوى  எனும் இறையச்சம் أخوة  எனும் சகோதரத்துவமாகும். இந்த சக்திகள் வலுவிழந்து காணப்படும் பட்ச்சத்தில் ஏனைய சக்திகள் எந்த அளவு காணப்பட்டாலும் அது வெற்றியளிக்க போதுமானதல்ல.

இவற்றுள் முதலாவதாக நாம் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கிய விடயம் மார்க்கக் கல்வியாகும் இன்று எமக்கு மத்தியில் காணப்படுகின்ற இந்த சீரற்ற சடவாதக் கல்விக் கொள்கை உடனடியாக மாற்றபடுதல் அல்லது திருத்தி அமைக்கப்படுதல் அவசியமாகும் இந்த முறையற்ற உலகாதாய நோக்கத்தின் அடிப்படையில் திட்டமிடப்பட்டுள்ள கற்பித்தல் கலாச்சாரம்தான் இன்றைய நமது சகோதரத்துவ வீழ்ச்சிக்கும் கருத்து முறண்பாடுகளுக்கும் பிரிவினைவாதங்களுக்கும் வித்திட்ட முதற்காரணமாகும்.

நாம் கற்கின்ற மற்றும் கற்றுக் கொடுக்கின்ற இந்த கல்வி ஒரு பலமிக்கதும் உறுதியானதுமான ஈமானிய சமூகக் கட்டமைப்பை உத்தரவாதப்படுத்தும் கல்வியாக இருக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் :  ''யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்"" (அல-குர்ஆன் :19 : 2)

இதன் பொருள் வேதத்தைத் தெளிவாகக் கற்று அதில் உறுதியாக இருத்தல் வேண்டும் என்பதாகும்

மார்க்கக் கல்வி பின்வரும் நான்கு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பது அவசியமாகும்.

1. அல்லாஹ் அவனது தூதர் அவனது மார்க்கம் ஆகிய முக்கியமான மூன்று அடிப்படைகள் பற்றிய அறியாமையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதன் ஊடாக அறிவார்த்தரீதியாக மற்றும் உறுதியாக விசுவாசித்தல்.

2. தான் கற்றதை முதலில் தனது வாழ்வில் நடைமுறைப்புடுத்துதல்

3. அதனைப் பிறருக்குக் கற்றுக் கொடுத்தல் அதாவது ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதல் அல்லது அதனைப் பிரச்சாரம் செய்தல்.

4. கல்வியைக் கற்றல் அதன்படி அமல் செய்தல் மற்றும் அதனைப் பிறருடன் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற முதல் மூன்று நோக்கங்களையும் நடைமுறைப் படுத்துவதில் ஏற்படுகின்ற அசௌகரியங்களின் பொது சளைத்து விடாது பொறுமையைக் கடைப்பிடிப்பதோடு அதனை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பிரச்சாரம் செய்தல்

இத்தகய கல்வியைத் தேடிக்கற்றுக் கொள்வது ஒவ்வொரு இஸ்லாமியன் மீதும் தவிர்க்க முடியாத கட்டாயக் கடமையாகும்

நபி (ஸல்) அவாகள் கூறினார்கள் : மார்க்கக் கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும். (நூல்: அஹ்மத்)

மேற்கூறப்பட்ட நான்கு அடிப்படை கொள்கைகளை இலக்காகக் கொண்டுதான் இஸ்லாமிய கல்விக் கொள்கை நகர்த்தப்படுதல் வேண்டும். இவற்றைக் கருத்தில் கொள்ளப்படாதக் கல்விக் கொள்கை மனிதனை நிச்சயமாக அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

அல்லாஹ் கூறுகின்றான் : காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும்.

1. எவர்கள் ஈமான் கொண்டு 
2. ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்துää 
3. சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துää 
4. மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர  (அல்-குர்ஆன் : 103: 1- 3.)

கல்வியினுடைய முதலாவது நோக்கம் அல்லாஹ் அவனது மார்க்கம் மற்றும் அவனது  தூதர்  பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ளுதல். இதனை أصول الثلاثة அதாவது மூன்று அடிப்படைகள் என்று கூறப்படும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் மண்ணறையில் வைக்கப்பட்டால் அவனிடம் இரண்டு வானவர்கள் வந்து அவனை எழுப்பி அமரச்செய்து அவனிடம் உனது இறைவன் யார்? உனது மார்கம் என்ன? உனது நபி யார் என்று வினவப்படும். (நூல் : அப- தாவ=த்)

அல்லாஹ்வைப் பற்றி அறிதல்

அல்லாஹ் கூறுகின்றான் :  ஆகவே  நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக (அல்-குர்ஆன் : 47: 19)

அவர் நெருப்பின் அருகே வந்த போது பாக்கியம் பெற்ற அப்பள்ளத்தாக்கிலுள்ள ஓடையின் வலப்பக்கத்தில் (ஒரு) மரத்திலிருந்து ''மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்!"" என்று அழைக்கப்பட்டார். (அல்-குர்ஆன் : 28: 30)

''நிச்சயமாக நான் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை ஆகவே என்னையே நீர் வணங்கும் என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. (அல்-குர்ஆன் : 28: 30)

மார்க்கத்தைப் பற்றி அறிதல்

அல்லாஹ் கூறுகின்றான் : நிச்சயமாக  இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்;. (அல்-குர்ஆன் : 3: 19)

இன்னும் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல்-குர்ஆன் : 3: 85)

நபியைப் பற்றி அறிதல்

முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்;. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்;. அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது. அன்றியும்ää அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான். (அல்-குர்ஆன் : 3: 44)

முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் (அல்-குர்ஆன் : 33: 40)

முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள் காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள் தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும்  ஸ{ஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸ{ஜூதுடைய அடையாளமிருக்கும்; (அல்-குர்ஆன் : 48: 29)

இன்ஷா அல்லாஹ் தொடரும்… 

இப்படிக்கு

முனாப் நுபார்தீன்
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
06-05-2014

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...