செவ்வாய், 13 மே, 2014


நமது சகோதரத்துவ வீழ்ச்சிக்கான காரணங்களும் தீர்வும். தொடர் - 07

மார்க்கக் கல்வியின் முதலாவது இலக்கு அல்லாஹ் ரசூல் மற்றும் மார்கம் பற்றி அறிந்து கொள்ளுதல் என்று பார்த்தோம் இப்படியான இந்த  அறிவு கொடுக்கப் பெற்றோர் அளவில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராவர்

அல்லாஹ் கூறுகின்றான் : தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோää அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. (அல்-குர்ஆன் : 2: 269)

இந்த மார்க்க ஞானம் கொடுக்கப் பெற்றொர்கள்; பின் வரும் இலக்கணங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும்

1. ஈமாண்கொண்டோர்களுக்கு மத்தியில் கல்வி மான்கள் பிரத்தியேகமானவர்களாக் காட்ச்சியளித்தல் வேண்டும். ஏனெனில் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் விசுவாசிகளைப் பற்றிக் குறிப்பிடுவதற்க்கு முன் கல்விமான்களைப் பற்றிப் பிரத்தியேகமாகக் குறிப்பிடுகின்றான். 

அல்லாஹ் கூறுகின்றான் :  எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்;. இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜக்காத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம். (அல்-குர்ஆன்: 4: 162)

2. அத்துடன் மார்கக்க அறிவு பெற்றவர் அறிவற்றவருக்கு சமமாக நடக்க மாட்டார் அவரிடம் மறுமை பற்றிய அச்சம் மேலோங்கிக் காணப்படும் மற்றும் நபிலான கடமையான அத்தனை வணக்கங்களிலும் பேனுதலாக இருப்பார்

அல்லாஹ் கூறுகின்றான் : எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸ{ஜூது  செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்; ''அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்."" (அல்-குர்ஆன் : 39: 9)

3. அத்தகையோர் சைத்தானுக்கு வழிப்படுவதிலிருந்து முழுமையாக விலகி அல்குர்ஆனின் பிரகாரம் வாழ்பவர்களாக இருப்பார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான் : எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம்; ஆகவே (என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக! அவர்கள் சொல்லை - நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகைய வர்களைத் தாம்; இவர்கள் தாம் நல்லறிவுடையோர். (அல்-குர்ஆன் : 39: 9)

4. மார்க்க அறிவு ஈமானை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் : உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். (அல்-குர்ஆன் : 8: 2)

இன்னும் அல்லாஹ் கூறுகின்றான் : ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், ''இது உங்களில் யாருடைய ஈமானை (நம்பிக்கையை) அதிகப்படுத்தி விட்டது?"" என்று கேட்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர்; யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை இது (மெய்யாகவே) அதிகப்படுத்திவிட்டது இன்னும் அவர்கள் (இது குறித்து) மகிழ்ச்சி அடைகிறார்கள். (அல்-குர்ஆன் : 9: 124)

5. மார்க்க அறிவு இறையச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் :  இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்-குர்ஆன் : 35: 28)

6. மார்க்க அறிவு சிந்தனையைத் தூண்ட வேண்டும்

அல்லாஹ் கூறுகின்றான் :   அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்). நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் - இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் - ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர்களாகிய அறிஞர்களைத் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். (அல்-குர்ஆன் : 29:41 - 43. )

7. மார்க்க அறிவு கருத்து வேறுபாட்டைப் போக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் :  அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள். (அல்-குர்ஆன் : 3: 7)

8. மார்க்க அறிவு நீதியை நிலைநாட்டச் செய்ய வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் :  அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிஞர்களும்; (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அவன் மிகைத்தவன்ää ஞானமிக்கவன். (அல்-குர்ஆன் : 3: 18)

மேற்படி இந்த பண்புகள்தான் கல்விமான்களின் அனிகலனாக இருக்க வேண்டும். இந்த தன்மைகளை ஏற்படுத்தாத கல்வி கல்வியே அல்ல. அவ்வாறே இந்த பண்புகளுக்கு அப்பாற்பட்ட கல்வியியலாளர்களை இஸ்லாம் அறிஞர்களாக அங்கிகரிப்பதும் இல்லை.

அல்லாஹ் கூறுகின்றான் : (அதற்கு) அவர் ''என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ,  அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்"" என்று (பிரார்த்தித்தவராக) கூறினார். (அல்-குர்ஆன்: 12: 33)

அவ்வாறே கல்வியைக் கற்று அதன்படி செயல்படாதவர்களை அல்லாஹ் பின்வருமாறு மிகக்கடுமையான உதாரணங்கள் மூலம் கண்டிக்கின்றான்.

1. அவர்களின் உதாரணம் பொதி சுமந்த கழுதையைப் போன்றது.

அல்லாஹ் கூறுகின்றான் : எவர்கள் தவ்றாத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும், எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (அல்-குர்ஆன்: 62: 05)

2. அவர்களின்  உதாரணம் நாயைப் போன்றது.

இன்னும் அல்லாஹ் கூறுகின்றான் : நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை  மதித்து அதிலேயே மூழ்கிவிட்டான், தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது - (அல்-குர்ஆன்: 7: 176)

3. அவர்களின்  உதாரணம் கால்நடைகளைப்; போன்றது.

இன்னும் அல்லாஹ் கூறுகின்றான் : தன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா? அல்லது, நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம் உபதேசத்தைக்) கேட்கிறார்கள்; அல்லது அறிந்துணர்கிறார்கள் என்று நீர் நினைக்கின்றீரா? அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை (அவற்றை விடவும்) அவர்கள், மிகவும் வழி கெட்டவர்கள். (அல்-குர்ஆன்: 25: 23,24)

இன்ஷா அல்லாஹ் தொடரும்… 

இப்படிக்கு

முனாப் நுபார்தீன்
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
13-05-2014

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...