முனாப் நுபார்தீன்- ஜே.பி.
பணிப்பாளர்.
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
ஈமானின் பலவீனங்கள் பற்றி பார்ப்பதற்கு முன் இஸ்லாத்தின் படித்தரங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம் இஸ்லாத்தின் படித்தரங்கள் மூன்று
1. இஹ்ஸான் (முஹ்ஸின்) இதுவே மிகவும் உயர்ந்த நிலையாகும்.
2. ஈமான் (முஃமின்) இது நடுநிலையானது.
3. இஸ்லாம் (முஸ்லிம்) இது கடைசிப் படித்தரம் இதற்கப்பால் ஒரு நிலை கிடையாது.
இந்த மூன்று படித்தரங்களையும் பற்றி பின் வரும் நபிவழிச் செய்தி விளக்குகின்றது.
உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
ஒரு நாள் நாங்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்து கொண்டிருந்தோம்ää அப்பொழுது ஒரு மனிதர் மிகத் தூய்மையான வெண்மை நிறம் கொண்ட ஆடை அணிந்தவராகவும்ää கருமை நிறம்கொண்ட தலை முடியைக் கொண்டவராகவும் எங்கள் முன் தோன்றினார். அவர் ஒரு பயணியைப் போன்றும் தோற்றமளிக்கவில்லை. இருந்த போதிலும்ää எங்களில் அவரை எவரும் புரிந்து கொள்ள இயலவில்லை. வந்த அந்த மனிதர் முஹம்மது (ஸல்) அவர்களை நோக்கி உட்காந்தார். அவரது இரண்டு முழங்கால்களும் முஹம்மது (ஸல்) அவர்களுடைய முழங்கால்களுடன் ஒட்டிக் கொண்டிருந்தனää மேலும்ää அவரது இரண்டு கைகளையும் அவரின்; தொடையின் மேல் வைத்துக் கொண்டு இவ்வாறு கேட்டார். முஹம்மது அவர்களே! இஸ்லாம் என்றால் என்ன? என்று எனக்கு சொல்லுங்கள் என்றார். இஸ்லாம் என்பதுää அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும்ää முஹம்மது அவர்கள் அந்த அல்லாஹ்வின் இறுதித் தூதர் என்றும் சான்று பகர்ந்துää தொழுகைää ஜகாத்ää ரமளான் மாதத்தில் நோன்பு இருப்பதுää இயலுமானால் அல்லாஹ்வின் இல்லமான மக்காவுக்குச் சென்று ஹஜ்ஜுச் செய்வது ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு நீர் உண்மையையே கூறினீர் என்று அந்த மனிதர் கூறினார். அவர் அவ்வாறு வினவியது குறித்தும்ää அவரே உண்மைப்படுத்தியது குறித்தும் நாங்கள் ஆச்சரியமடைந்தோம்.
மேலும் அந்த மனிதர் கேட்டார் : ஈமான் என்றால் என்ன? என்று எனக்குச் சொல்லுங்கள். அதற்குää அல்லாஹ்வை (இறைவனாக) நம்பி ஏற்றுக் கொண்டுää மேலும்ää அவனது மலக்குமார்கள் (வானவர்கள்)ää அவனது வேதங்கள்ää அவனது தூதர்கள்ää மற்றும் மறுமை நாளையும் நம்பிää மற்றும் நன்மையும்ää தீமையும் இறைவனின் நாட்டத்தின் பால் அமைந்தவை என்பதையும் (களா கத்ர்) நம்பி (அதில் உறுதியாக) இருப்பது என்று கூறியவுடன்ää கேள்வி கேட்ட அந்த மனிதர்ää (முகம்மதே) நீர் உண்மையையே சொன்னீர் என்று கூறினார். மேலும் அவர்ää இஹ்ஸான் என்றால் என்ன? என்று எனக்குச் சொல்லுங்கள் என்றார். அதற்குää நீ அள்ளாஹ்வைப் பார்ப்பதாக எண்ணிக் கொண்டு அவனுக்கு இபாதத் (வணக்கம்;) செய்வது நீர் அல்லாஹ்வைப் பார்க்கா விட்டாலும் மெய்யாகவே அவன் உன்னை; பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று கூறினார்கள்.
மேலும்ää அந்த மனிதர் இறுதி நாள் எப்பொழுது என்பது குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்று கூறினார். இதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் இந்தக் கேள்வி கேட்கப்படுபவர் கேட்பவரை விட அதிகமாக அறிந்தவர் அல்லர் என்றார்கள். (அல்லாஹ் அதை அறிவான் என்பது கருத்து). பின்னர் அவர் அதன் அடையாளங்கள் குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்றார். பெருமானார் (ஸல்) சொன்னதாவது: அடிமைப்பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள். அப்போது காலணிகளில்லாதää ஆடைகளற்றää ஆதரவற்ற கூட்டத்தினர் ஆடம்பரமான கட்டிடங்களை கட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதை பார்ப்பீர்கள். பிறகு அவர் போய் விட்டார். நான் அங்கேயே தாமதித்தேன். பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள்ää உமரே கேள்விகளைக் கேட்டவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? எனக் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்றாக அறிவார்கள் என்றேன் நான். பெருமானார் (ஸல்) அவர்கள்ää அவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். அவர் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுக் தருவதற்காக வந்தார்கள் என்று கூறினார்கள். - முஸ்லிம்.
மேலே நாம் பார்த்த அந்த ஹதீஸானதுää இஸ்லாமிய மார்க்கத்தில் தீனில் மூன்று படித்தரங்கள் அல்லது நிலைகள் இருப்பதை நமக்கு அறிவிக்கின்றது. அவையாவன : இஸ்லாம்ää ஈமான்ää இஹ்ஸான் ஆகியவைகளாகும். ஒவ்வொரு நிலையும் அவற்றிற்கே உரிய தனித்தனி கொள்கைகள் அல்லது விதிமுறைகள் அல்லது பிரிவுகளைக் கொண்டுள்ளன.
இவற்றுள் முதலாவது படித்தரம் மிக உயர்ந்த நிலையான இஹ்ஸான் எனும் நிலையாகும் மனிதர்களுள் இந்நிலையை அடைபவர்கள் மிகவும் அரிதே இந்நிலையை அடைந்த மக்கள்தான முஹ்ஸின் என்று அழைக்கப்படுவார்கள் இவர்களுடன்தான் வல்ல அல்லாஹ் இருப்பதாகக் கூறுகின்றான்.
நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோää அவர்களுடனும் எவர்கள் முஹ்ஸின்களாக நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான். (அல்-குர்ஆன்: 16:128)
இந்த இஹ்ஸான் என்ற நிலையை ஒரு மனிதன் அடைந்து விட்டான் என்பதற்கான அடையாளம் பற்றி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ஒரு மனிதனுடைய இஸ்லாத்தின் இஹ்ஸான் எனும் உயர் நிலையானது அவன் தனக்குத் தகாதவைகளைத் தவிர்ந்திருப்பதிலேயே இருக்கின்றது. (அறிவிப்பவர்: அபூ ஹ{ரைரா (ரழி) நூல்: ஸஹீஹ் இபுனு ஹிப்பான்)
எனவே இந்த உச்சகட்ட நிலையை அடைந்த ஒரு மனிதன் அவனுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் பயன் இல்லாத எந்த ஒரு சிறு விடயத்திலும் தனது காலத்தை வீனாகக் கழிக்க மாட்டான். இறைவன் தன்னை எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் எள்ற சிந்தனையுடனேயே சதா வாழ்பவானாக அவனைக் காண முடியும்.
இன்ஷா அல்லாஹ் இரண்டாம் நிலையாகிய ஈமான் பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.
தொடர் 01 யைப் படிக்க இதன் கீழ் தரப்பட்டுள்ள தலைப்பை சொடுக்கவும்
SRILANKA ISLAMIC GUIDANCE CENTRE :
உலகளாவிய முஸ்லீம்களின் இன்றைய அவல நிலைக்கான..
(தொடர் 01)
aslislamguide.blogspot.com
தொடர் 01 யைப் படிக்க இதன் கீழ் தரப்பட்டுள்ள தலைப்பை சொடுக்கவும்
SRILANKA ISLAMIC GUIDANCE CENTRE :
உலகளாவிய முஸ்லீம்களின் இன்றைய அவல நிலைக்கான..
(தொடர் 01)
aslislamguide.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக