நமது சகோதரத்துவ வீழ்ச்சிக்கான காரணங்களும் தீர்வும். தொடர் - 04
تقوى எனும் இறையச்சத்தில் காணப்படும் பலவீனம்.
அல்லாஹ் கூறுகின்றான்:
ஈமான் கொண்டோர்களே! நீங்கள் தக்வா உடயவர்களாக ஆகுவதற்காக உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு விதிக்கப்பட்டுள்ளது (அல்-குர்ஆன் :2 : 183)
இஸ்லாமிய கல்வியில் ஏற்பட்ட அந்தப் பாதிப்பு நமது ஈமான் எனும் இறை விசுவாசத்தில் எந்த அளவு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதோ அவ்வாறே எமது அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்து காணப்பட வேண்டிய தக்வா எனும் இறையச்சத்திலும் மிகப் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதை உணரக்க்கூடியதாகவுள்ளது.
تقوى எனும் அரபுப் பதத்திற்கு நாம் இலகுவாக இறையச்சம் என்று மொழியாக்கம் செய்த போதும் அது அதையும்விட அதிகூடிய பொருற்ச் செறிவு மிக்க ஒரு வாhத்தையாகும். அதன் பொருளை அதற்கே உரிய அதன் மூல மொழியிலேயே அன்றி விளங்குதல் மிகக் கடினமாகும். என்றாலும் குறைந்த அளவு தக்காத்துக் கொள்ளல் தடுத்துக் கொள்ளல் வரம்பை மீறாதிருத்தல் போன்ற பொருட்க்களைக் கொடுக்கலாம்.
அதாவது தீமைகளைத் தவிர்த்துக் கொள்வதன் ஊடாக அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தன்னைத் தக்காத்துக் கொள்ளுதல் அல்லது தீமைகளைத் தவிர்த்திருத்தல் அல்லது எல்லைக் கோட்டைத் தாண்டாதிருத்தல் என்று பொருள் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நிச்சயமாக அனுமதிக்கப்பட்டவை (ஹலால்) மிகத்தெளிவானது. அவ்வாறே நிச்சயமாக தடுக்கப்பட்டவையும் (ஹராம்) மிகத்தெளிவானதே. இவ்விரண்டிற்குமிடையே இவை ஹலாலானவையாää அல்லது ஹராமானவையா என்ற சந்தேகத்திற்கிடமான விடயங்களும் காணப்படும். அவற்றை மனிதர்களில் அநேகர் அறிந்து கொள்ள மாட்டார்கள். எனவே எவர் அத்தகைய சந்தேகத்திற்கிடமானவற்றில்; (வீழ்ந்து விடாதவாறு தன்னைத்) தற்க்காத்துக் கொள்கின்றாரோää அவர் தனது மார்க்கத்தையும்ää கண்ணியத்தையும்ää பாதுகாத்துக் கொண்டவராவார். மேலும் எவர் அத்தகைய சந்தேகத்திற்கிடமானவற்றில் வீழ்ந்து விடுகிறாரோ அவர் தடுக்கப்படவற்றி (ஹராமி) ல் வீழ்ந்து விட்டவராவார். தடுக்கப்பட்ட வேலியைச் சூழ தனது கால்நடைகளை - அவை அதில் மேய்ந்து விடக் கூடிய விதத்தில் மேய்த்துக் கொண்டிருக்கும் ஓர் இடயனைப் போல். ஒவ்வோர் அரசனுக்கும் ஒரு எல்லைக் கோடு உண்டு. அல்லாஹ்வுக்குகுரிய எல்லைக் கோடு அவனால் தடுக்கப்பட்ட (ஹராமான) வைகளாகும்.
அறிந்து கொள்ளுங்கள் உடலில் ஒரு சதைப் பகுதி உண்டு. அது சீராகி விடுமானால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர்கெட்டு விடுமானால்; உடல் முழுவதும் சீர்கெட்டு விடும். அதுவன்றோ இதயம்.
மேற்படி நபி மொழியில் யார் ஒருவர் சந்தேகத்திற்கிடமானவற்றில்; (வீழ்ந்து விடாதவாறு தன்னைத்) தற்க்காத்துக் கொள்கின்றாரோ என்பதற்கு ومن اتقى எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது இது تقوى எனும் மூலச் சொல்லிலிருந்து பிறந்ததாகும் எனவே இந்த இடத்தில் மேற்ச்சொல்லப்பட்ட அத்தனை பொருளையும் அது ஏற்றுக் கொளளும்.
அதாவது யார் ஒருவர் சந்தேகத்திற்கிடமானவற்றில்; (வீழ்ந்து விடாதவாறு தன்னைத்) தற்க்காத்துக் கொள்கின்றாரோ என்றும் அல்லது யார் ஒருவர் சந்தேகத்திற்கிடமானவற்றில்; (வீழ்ந்து விடாதவாறு தன்னைத்) தடுத்துக் கொள்கின்றாரோ என்றும் அல்லது யார் ஒருவர் சந்தேகத்திற் கிடமானவற்றில்; (வீழ்ந்து விடாதவாறு) வரம்பை மீறாதிருக்கின்றாரோ என்று எந்தப் பொருளைக் கொடுத்தாலும் பிழையல்ல. என்றாலு நாம் பிற மொழிகளில் எந்த அளவு பொருள் கொடுத்தாலும் அவை அத்தனையும் குறைவானதே. இது வேறு எந்தவொரு மொழிக்கும் இல்லாதவாறு அரபு மொழிக்கே உரிய சிறப்பம்சமாகும்.
இதனை நாம் இன்னுமொரு வகையில் விளங்கிக் கொள்ளலாம் அதாவது تقوى என்ற அரபுச் சொல்லின் எதிர்கருத்துச் சொல் طغىان என்பதாகும் இதன் பொருள் வரம்பு மீறுதலாகும். அப்படியாயின் வரம்பு மீறுதலுக்கு எதிர்கருத்து வரம்பு மீறாதிருத்தலாகும்.
ஆகவே تقوى என்ற சொலலுக்குரிய சரியான பொருள் இஸ்லாத்தின் தடைகளை மீறாதிருத்தலாகும் என்ற முடிவுக்கள் நாம் வரலாம்.
அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோää குடிபாணத்தையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும். (அல்-குர்ஆன் :78: 21-26)
மேற்படி வசனங்களில் வரம்பு மீறியவர்களைக் குறிக்க طغى என்ற சொல் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது.
அவ்வாறே அதே அத்தியயாத்தில் தொடர்ந்து வரம்பு மீறாதவர்களைக் குறிக்க تقوى எனும் மூலத்திலிருந்து பெறப்படும் متقين என்ற சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது.
அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு (முத்தகீன்) வெற்றிப் பாக்கியம் இருக்கிறது. தோட்டங்களும்ää திராட்சைப் பழங்களும். ஒரே வயதுள்ள கன்னிகளும். பானம் நிறைந்த கிண்ணங்களும் (இருக்கின்றன). (அல்-குர்ஆன் :78: 31- 34)
எனவே மேற்படி விளக்கத்தின் அடிப்படையில் تقوى என்பது அல்லாஹ்வுடைய மற்றும் அவனின் தூதருடைய தடையானைகளை மீறாது நடந்து கொள்தலாகும் இந்த இடத்தில் எமது வாழ்க்கையை ஒரு கணம் திரும்பிப் பார்ப்போம் நாம் எந்த அளவுக்கு அல்லாஹ்வுடைய மற்றும் அவனின் தூதருடைய தடையானைகளை மீறாது நம்மைத் தற்க்காத்து நடந்து கொள்கின்றோம்.
எந்த அளவு அல்லாஹ்வுடையவும் அவன் தூதருடையவும் கட்டளைகளுக்கு மதிப்பளிக்கின்றோம்.
சந்தேகத்திற்கு இடம்பாடானவற்றை செய்யக்கூடிய ஒருவனே தக்வாவை இழந்து ஹராத்தில் வீழ்ந்து விடுகின்றான் எனும் போது தெளிவாக ஹராம் என்று தெரிந்நிருந்தும் அந்த ஹராத்தைச் சிறிதும் தயக்கமின்றி பகிரங்கமாகச் செய்வது நம் தக்வாவின் பலவீனத்தின் அடையாளமன்றோ.
நபி (ஸல்) அவாகள் கூறினாhகள் :
என்னுடைய உம்மத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மன்னிக்கப்படக் கூடியவர்களேää யார் பாவங்களை வெளிப்படையாகச் செய்கின்றார்களோ அவர்களைத் தவிரää உதாரணமாகää ஒரு மனிதன் இரவில் செய்ததைää அல்லாஹ் மறைத்து விடுகின்றான்ää காலையானதும் (பாவம் செய்த) அவன் ஓ! இன்ன மனிதனேää நான் இன்ன இன்னதைச் செய்தேன் என்று மற்ற மனிதர்களிடம் கூறி விடுகின்றான். இரவு முழுவதும் அவனது பாவத்தை அவனது இறைவன் மறைத்தான்ää ஆனால் இறைவன் மறைத்ததை இவன் வெளிப்படுத்தி விடுகின்றான். (புகாரி)
இத்தகைய தீயச் செயற்களிலிருந்து விடுபட முடியாமைக்கான பிரதான காரணம் தன்னைத் தற்க்காத்து கொள்ள முடியாத அளவு تقوي பலமிளந்து போய் உள்ளதேயாகும். தக்வா என்பது அன்டி வைரஸ் போன்றதாகும் எந்த உள்ளத்தில் இந்த தக்வா எனும் அன்டி வைரஸ் நிறுவப்பட்டு இல்லையோ அத்தகைய உள்ளத்தில் தீமைகள் எனும் வைரஸ் ஊடுருவி உள்ளம் எனும் ஹார்ட் டிஸ்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஈமான் இஹ்ஸான் அஹ்லாக் போன்ற மென்பொருற்களில் பாதிப்பை ஏற்ப்படுத்தி விடும் அல்லது முற்றாகவே அழித்தும் விடும்.
அடுத்து இன்று நம் சமூகத்தில் கனிசமான அளவு மக்கள் அல்-குர்ஆனை ஓரளவேனும் கற்று விளங்கி வருகின்றார்கள் என்றாலும் அதன்படி நேர் வழியில் நடக்குகின்றார்களா? என்றால் இல்லை என்பதுதான் அதிகமான பதிலாக இருக்கும் காரணம் அவர்கள் எந்த அளவு அல்குர்ஆனைக் கற்று விளங்கிய போதிலும் அவர்களிடம் தக்வா எனும் தற்க்காப்பு ஆயுதமாகிய அன்;டி வைரஸ் இல்லாத வரை அவர்கள் யாரும் நேர் வழி பெற இயலாது.
ஏனெனில் ஒரு கணனியில் நமது பதிவேற்றங்கள் மற்றும் மென்பொருட்களைப் பாதுகாத்துக் கொள்ள அன்டி வைரஸ் நிருவப்படுதல் எந்த அளவுக்கு முக்கியமோ அவ்வாறே அல்-குர்ஆன் மூலம் எமது உள்ளங்களில் பதிவேற்றப்படுகின்ற ஹிதாயத் எனும் அந்த நன்நெறியினைப் பாதுகாத்துக் கொள்ள தக்வா நிறுவப்பட்டிருத்தல் அவசியமாகும் ஆதலால்தான் அல்குர்ஆன் தக்வாவைத் தன்னகத்தே கொண்டுள்ளவ ர்களுக்கத்தான் வழிகாட்டும் என்று அதன் ஆரம்ப வரிகளிலேயே மிகத்தெளிவாக கூறிக்கொண்டிருக்கின்றது.
அல்லாஹ் கூறுகின்றான்:
இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;ää இதில் எத்தகைய சந்தேகமும் இல்லைää இது தக்வாவை உடையோருக்கு நேர்வழிகாட்டும். (அல்-குர்ஆன் :2 :2)
மனிதர்கள் நேர்வழி பெறுவதற்க்காக வேண்டி அல்-குர்ஆனை இறக்கியருளிய அல்லாஹ் அந்த நேர்வழியைப் பெற்றுத்தரும் தக்வாவை அடைந்து கொள்ளும் வழிமுறையாகிய நோன்பையும் அல்-குர்ஆன் அருளப்பட்ட அதே மாதத்தில் எமக்கக் கடமையாக்கிள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர் வழி காட்டியாகவும்ää தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்-குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவேää உங்களில் எவர் அம்மாதத்தை அடைகின்றாரோää அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்;. (அல்-குர்ஆன் :2 : 185)
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
இப்படிக்கு
முனாப் நுபார்தீன்
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
28-04-2014 திங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக