بسم الله الرحمن الرحيم
الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه اجمعين
விமர்சகர்கள் அனைவருக்கம் ஒரே பதில்
”உலமா சபையின் அறிக்கைக்கு கருத்துக்கள் தெரிவித்த மற்றும் தெரிவிக்க இருக்கும் அனைவருக்கும்” எனுளும் தலைப்பில் நாம் சமூகத்திடம் முன்வைத்த வேண்டுகோலுக்கு அதிகமானோர் மதிப்பளித்திருந்தனர் அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். 18-04-2014 ம் திகதி பதிவிடப்பட்ட எமது வேண்டுகோலுக்கு 19-04-2014 ம் திகதியாகிய இன்று அதாவது ஒரு நாள் அவகாசத்திற்குள் சுமார் 1139 சகோதரர்கள் மூக நூலிலும் 1143 சகோதரர்கள் ஏனைய சமூகத் தளங்களிலும் இதனைப் பகிர்ந்திருந்தனர் அந்த அனைத்து சகோதரர்களுக்கும் எமது நிறைவான நன்றியினை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதே நேரம் சமூக சிந்தனையோ தூர நோக்கோ மாhக்கத்தில் போதிய அறிவோ அடையப் பெறாத மிகச் சிறுபாண்மையான சிலர் மட்டும் அதாவது சுமார் ஏழு நபர்கள் மட்டும் இதனையும் விமர்சித்திருந்தார்கள் அவர்களுக்கும் சில சகோதரர்கள் தகுந்த பதில் அழித்திருந்தார்கள் அவ்வாறு நம் சமூகத்துக்காக முன் வந்து பதிலழித்த சகோதரர்களுக்கும் எமது பூரணமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளோம்
அத்துடன் விமர்சகர்கள் அனைவருக்கும் அவர்களின் விமர்சனங்கள் ஒரே வகையானதாக இருப்பதனால் அவர்கள் அனைவருக்கும் ஒரே பதிலாக இதனை எழுதுகின்றோம்.
உலமா சபை அல்-குர்ஆன் மற்றும் அல்-ஹதீஸைத்தான் யாப்பாக கொண்டு இயங்குகின்றது என்பதை நீங்கள் அல்-குர்ஆன் மற்றும் அல்-ஹதீஸ் பற்றிய போதிய அறிவு பெற்றிந்திருந்தால் அவர்களின் அனுகு முறைகள் மூலமே அதனை அறிந்திருப்பீர்கள். இதனை நாம் அல-குர்ஆனில் இடம் பெற்றுள்ள நபி மூஸா ( அலை) அவர்களின் ஒரு சம்பவத்தின் மூலம் தெளிவுபடத்தலாம் என நம்புகின்றோம்.
நபி மூஸா ( அலை) அவர்கள் இல்லாத போது நபி ஹாறூன் (அலை) அவர்கள் பனீ இஸ்ராயீல் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கினார்கள் அவ்வேளையில் சாமிரி என்ற ஒருவன் மண்ணிலிருந்து ஒரு மாட்டைச் செய்து மக்களை அதற்கு வழிபடச் செய்து வழிகெடுத்திருந்தான். ஆப்போது செய்தியறிந்து அங்கு விரைந்து வந்த நபி மூஸா (அலை) அவர்கள் மக்களை வழிகெடுத்த சாமிரிய்யைத் தண்டிப்பதை விட்டு விட்டு மக்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கிய நபி ஹாறூன் ( அலை) அவர்களின் தலை முடியையும் தாடியையும் பிடித்து குலுக்கியவராக ஆத்திரத்துடன் நடந்து கொண்ட விதம் பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்
''ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்.(அல்-குர்ஆன் : 20: 92)
அதற்கு நபி ஹாறூன் ( அலை) அவர்கள்:
''என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; 'பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!" என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்"" என்று கூறினார். .(அல்-குர்ஆன் : 20: 94) என்று பதில் கூறினார்கள் என்றும்
அதே நேரம் சாமிரிய்யிடம் சென்று மிகவும் மிருதுவான முறையில் : ''ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?"" என்று மூஸா அவனிடம் கேட்டார். (அல்-குர்ஆன் : 20: 95) என்றும் அல்-குர்ஆன் குறிப்பிடுவதுடன் மூஸா அலை) அவர்கள் அவனைத் தண்டிக்கும் வகையில் ''நீ இங்கிருந்து போய் விடு நிச்சயமாக இந்த வாழ்க்கையில் (எவரைக் கண்டாலும்ää என்னைத்) ''தீண்டாதீர்கள்"" என்று சொல்(லித் திரி)வது தான் உனக்குள்ளதுää (மறுமையில்) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையும் உண்டு அதை விட்டும் நீ தப்பமாட்டாய்; மேலும்; நீ தரிபட்டு ஆராதனை செய்து கொண்டிருந்தாயே அந்த ''நாயனைப்"" பார்; நிச்சயமாக அதனைச் சுட்டெரித்துப் பின்னர் (சாம்பலாக்கி) அதைக் கடலில் பரத்திவிடுவோம்"" (அல்-குர்ஆன் : 20: 97) என்று மட்டுமேதான் கூறினார்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
இவ்வாறான சம்பவங்களில் எமக்குப் பலதரப்பட்ட படிப்பினைகள் இருப்பதாகக் வல்ல அல்லாஹ் அல்-குர்ஆனில் பல்வேறு இடங்களில் கூறுகின்றான் எனவே இந்த இடத்தில் நாம் பெறும் படிப்பினை என்ன ? அதில் எமக்குள்ள வழிகாட்டல்தான் என்ன என்று சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.
நிரபராதியான ஹாறூன் ( அலை) அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட நபி மூஸா (அலை) அவர்கள் குற்றவாழியாகிய மக்களை வழிகெடுத்த சாமிரிய்யிடம் மிகவும் மிருதுவாக நடந்து கொண்டதற்கான மர்மம் மற்றும் காரணமதான்; என்ன?
இன்று உலமா சபையின் சானக்கியத்தை கோளைத்தனம் என்று விமர்சிக்கும் இவர்கள் போன்றோர்கள் அன்று இருந்திருந்தால் அல்லாஹ் பாதுகாப்பானாக நபி மூஸா (அலை) அவர்களும் ஒரு கோளை என்றே குற்றம் சுமத்தி இருரூப்பார்கள்.
நபி மூஸா (அலை) அவர்களின் மேற்படி சம்பவத்தைப் ஒன்றுக்குப் பல முறைகள் படியுங்கள் சிந்தியுங்கள் இதில் எமக்குப் பல படிப்பனைகள் இருக்கின்றன.
அல்-குர்ஆன் மற்றும் அல்-ஹதீஸை நீங்கள் சரியான முறையில் படித்திருந்தால் இவ்வாறான விமர்சனங்கள் செய்ய மாட்டீர்கள் எனவே நுனிப் புல் மேய்ந்து விட்டு நாமும் மார்க்க மேதைகளாகி விட்டோம் என்று பெருமை கொள்ளாது அல்-குர்ஆன் மற்றும் அல்-ஹதீஸை சரியான முறையில் படித்து விட்டு பேசுங்கள் என்று வேண்டிக் கொள்கின்றோம்.
ஏல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் மாhக்கத்தில் பூரண அறிவையும் விளக்கத்தையும் தந்தருள்வானாக.
والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه اجمعين و الحمد لله ربالعالمين
இப்படிக்கு:
முனாப் நுபார்தீன்
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக