உழவன் காவல் வைத்து விட்டான்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையும் கழுத காவல் முறைமையும்.
நமது நாட்டின் நிலையைப் பார்க்கும் போது நாம் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்ற போது பாட புத்தகத்தில் உழவன் காவல் வைத்து விட்டான். எனும் தலைப்பில் ஒரு பாடம் படித்தது ஞாபகத்திற்கு வருகின்றது.
ஒரு ஊரில் ஒரு உழவன் இருந்தான் அவனது விவசாய நிலத்தை பறவைகள் பாழ்படுத்துவதை அவதானித்த அவன் அவற்றுக்கு காவல் செய்ய எண்ணினால் ஆதலால் பறவைகளை விரட்ட வேண்டுமானால் பெரும் சத்தம் எழுப்பப்பட வேண்டும் என்று அவனுக்கத் தோன்றியது எனவே ஒரு கழுதையை வாங்கி தோட்டத்தில் விட்டால் அது எழுப்பும் பெரும் சத்தம் பறவைகளை விரட்டி விடக்கூடும் என்றென்னி கழுதையொன்றை வாங்கி தோட்டத்திற்குக் காவல் செய்ய விட்டான். காலையும் மாலையும் அதிகமான பறவைகள் தனது எஜமானனின் தோட்டத்தை அபகரிப்பதனைக் கண்ட கழுதையோ சத்தம் போட்டால் பறவைகளை கைதாக்க முடியாமல் போய் விடும் என்றென்னி எவ்வித சத்தமுமின்றி அங்கும் இங்குமாகத் தோட்டத்திற்குள் ஓடி ஓடி பறவைகளை கைதாக்க என்னியது.
கழுதையின் நோக்கத்தினைப் புரிந்து கொண்ட பறவைகளும் அங்கும் இங்குமாகப் பறந்து பறந்து கழுதையை ஓடவைத்தன. மறுநாள் காலையில் தோட்டங்காரன் வந்து பார்த்தபோது தோட்டம் முழுவதும் அழிக்கப்பட்டிருந்ததைக் கண்டு சினம் கொண்ட தோட்டக்காரன் அந்த கழுதையை அடித்துத் துரத்தி விட்டான்.
இந்த கதைக்கு ஒப்பானதாகத்தான் நம் நாட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையும் காணப்படுகின்றன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போது இது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் குறிப்பாக சிறுபாண்மை சமூகங்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பிரயோகித்து நம் உரிமைகளைப் பாதுகாப்பார் என்றே பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் இன்று ஜனாதிபதியின் மௌனம் கழுதை காவல் காத்த கதையாகத்தான் உள்ளது.
எப்பொழுதுதான் இந்த உழவர்கூட்டம் இந்தக் கழுதையை நைய்யப் புடைத்துத் துரத்தப்போகின்றதோ?
முனாப் நுபார்தீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக