தேர்தல்கள் ஆணையாளரின் ஞானசூண்யம்
முகம்மது நபிதான் வந்தாலும் இந்நாட்டில் 100 வீதம் நியாயமான தேர்தலை நடாத்த முடியாது
தேர்தல்கள் ஆணையாளர் பதவிக்கு புத்தபெருமானையோஇ இயோசு நாதரையோ அல்லது முஹம்மது நபியையோ கொண்டு வந்து உட்கார வைத்தாலும் தற்போதுள்ள தேர்தல் முறைமையின் ஊடாக நூற்றுக்கு நூறு வீதம் நியாயமானஇ நீதியானதொரு தேர்தலை நடாத்த முடியாதென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த உண்மை ஊவாவுக்கும் விதிவிலக்கல்ல. இந்த நாட்டிலுள்ள அரசியல் கலாசாரம் மாறும் வரையில் இந்த வன்முறை அரசியலை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. தேர்தல்கள் திணைக்களம் எடுக்க வேண்டிய உச்ச அளவு நடவடிக்கையை எடுத்தாலும் நலவு சொல்வோர் யாரும் இல்லை என்பதை கவலையுடன் தெரிவிக்க வேண்டியுள்ளதாகவும் ஆணையாளர் இன்றைய சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். (மு)
மேற்படி அறிக்கை நேற்று ( 07-09-2014 ) ஞாயிற்றுக் கிழமை டெய்லி சிலோன் எனும் இணையதளத்தில் பிரசுரமாகி இருந்தது. இது நமது நாட்டின் மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவியாகிய தேர்தல்கள் ஆணையாளர் பதவி வகிப்பவரின் கருத்தாகும்ää இதிலிருந்து அவரின் ஞானசூண்யம் தெளிவாகத் தெரிகின்றது.
அவர் உதாரணம் காட்டியுள்ள மேற்படி மூன்று தீர்க்கதரிசிகளில் முகம்மது நபி (ஸல்) மற்றும் (இயேசு) ஈசா நபி (அலை) ஆகிய இருவரும் சந்தேகத்திற்கிடமின்றி இறைவனின் திருத்தூதர்கள் ஆவார்கள் என்பது முஸ்லிம்களாகிய எமது ஆணித்தரமான நம்பிக்கையாகும். அவ்வாறே புத்தபெருமானும் நிச்சயமாக ஒரு இறைத்தூதராகவே இருக்க வேண்டும் என்றே நாம் உறுதியாக நம்புகின்றோம்.
ஆகவே தனது இயலாமையையும் பலவீனத்தினையும் மறைப்பதற்காக நீதி நழுவாது தூய வாழ்க்கை வாழ்ந்து காட்டி உலகை நீதியால் நிரப்பிச் சென்ற செம்மல்களான இறைத் தூதர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதென்பது மிகவும் கீழ்தரமான இழிச் செயலாகும் இவரின் இந்த அறிக்கையை நாம் வண்மையாகக் கண்டிக்கின்றோம்.
அத்துடன் அவரின் மேற்ப அறிக்கைக்கு தனது கவலையைத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத் தக்கது என்றாலும் அதிலும் தீர்க்கத்தரிசிகளான இறைத்தூதர்களை சமயத்தலைவர்கள் என்று சாதாரணமாகக் குறிப்பிட்டிருப்பதும் கண்டணத்திற்குரியதே.
எனவே இலங்கை வாழ் அனைத்து இன மக்களும் தேர்தல்கள் ஆணையாளரின் இத்தகைய அறிவற்ற அறிக்கைகளுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
முனாப் நுபார்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக