பூனைக்கு மணி கட்டுவது யார்?.
ஒரு இடத்தில் ஒரு தொகை எலி வசித்து வந்தது அவ்வாறான வேளையில் ஒரு பூனை தினமும் ஒரு சில எலிகளைக் கொன்று சாப்பிடுவதன் மூலம் எலிகளின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தது. இந்நிலையில் எலிகள் அனைத்தும் ஒரு நாள் ஒன்று கூடி குறித்த பூனையிடமிருந்து தம்மையும் தம் சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ள வழி என்ன என்று கவலைப்பட்டு ஆலோசனை நடாத்தியது.
அதன் போது ஒவ்வொரு எலியும் ஒவ்வொருவிதமான ஆலோசனையை முன் வைத்தது அதில் ஒரு எலி கூறியது நாம் எல்லோரு சேர்ந்து பூனைக்கு ஒரு மனியைக் கட்டி விட்டால் பூனை வரும் போது மனியோசை கேட்க்கும் அப்போது நாம் எங்காவது ஒளிந்து பூனையிடமிருந்துத் தப்பித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று தனது ஆலோசனையை முன்வைத்தது. இறுதியில் இந்த ஆலோசனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு முடிவு செய்யப்பட்டது.
இந்த சமூகக் கவலை என்பது நியாயமானதே
அது தொடர்பாக ஆலோசனை நடாத்தியதிலும் தவறில்லை
எடுக்கப்பட்ட தீர்மானமும் மிகச்சரியானதே
என்றாலும்…
என்றாலும் பிரச்சினை அந்தப் பொறுப்பை யார் செய்வது பூனைக்கு மனி கட்டுவது யார் யாருக்கு இந்த அசாதாரண துணிச்சல் வரும் என்பதுதான்.
ஒரு எலி பூனைக்கு மணி கட்டுவதென்பது நடக்கக்கூடிய ஒரு கருமம் அல்ல.
இவ்வாறுதான் இன்றைய நம் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலையும் காணப்படுகின்றது.
சமூகத்தைப் பற்றிக் கவலைப் படுகின்றோம்
அதற்க்காக பல்வேறு மட்டங்களில் ஆலோசனைகளைச் செய்கின்றோம்.
தீர்;மானங்களை நிறைவேற்றுகின்றோம்
என்றாலும்…
அதனை யார் நடைமுறைப்படுத்துவது என்பதுவே பதில் காண முடியாதக் கேள்வியாகக் தேங்கிக் கிடக்கின்றது.
ஏன் இந்தத் தயக்கம்? ஏன் இந்தத் தாமதம்?
இன்றய இலங்கை முஸ்லிம்களின் நிலையைப் பற்றி சிந்திக்கின்ற அனைவரதும் ஆதங்கம் நம் சமூகத்தை அச்சமற்ற நம்பிக்கை மிக்கப் பலமானதொரு சக்தியாகக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதுவேயாகும். அதற்க்காக என்ன விலை கொடுத்தேனும் நம் சமூகத்தின் ஒற்றுமையை உறுதி செய்து பொதுவானதொருத் தலைமைத்துவத்தினை ஏற்படுத்தியாக வேண்டும் என்பதில் இன்றய நம் சமூகம் கருத்தொருமித்தேக் காணப்படுகின்றது.
இந்த பாரிய பொறுப்பினை நமது சமூகம் பின்வரும் நான்கு வர்க்கத்தினர்களிடமிருந்தே பொதுவாக எதிர்பார்குகின்றது.
1. அரசியல் தலைவர்கள் அல்லது அரசியல் பிரமுகர்கள்
2. சமூக அல்லது சமயத் தலைவர்கள்
3. தொழிலதிபர்கள் அல்லது செல்வந்தர்கள்
4. கல்விமான்கள் அல்லது புத்திஜீவிகள்
உண்மையில் மேற்படி இந்த நான்கு வகுப்பார்களும்தான் அதற்க்குத் தகுதியானவர்கள் அதுமட்டுமின்றி பொறுப்புக் கூறவேண்டியவர்களும் அவர்களே என்றாலும் அதனைப் பொறுப்பேற்பதற்கோ அல்லது நடைமுறைப் படுத்துவதற்க்கோ அவர்களில் யாரும் இன்றுவரை முன் வந்ததாகத் தெரியவில்லை இந்நிலையில் ஏன் இந்தத் தயக்கம் ஏன் இந்தத் தாமதம் என்று யாராலும் இனம் புறிந்து கொள்ள இயலாத ஒரு நிலைதான் நீண்டு கொண்டு செல்கின்றது.
இதற்க்கான காரணங்கள் என்ன என்று சிந்திக்கின்றபோது பின்வரும் சில தீர்மானங்களுக்க எம்மால் வர முடிகின்றது.
1. யார் அந்தப் பொதுவானத் தலைவர் என்பதை இனங்காண்பதில் ஏற்ப்பட்டுள்ள தெளிவிண்மை
2. அனைவரிடமும் ஏதோ ஒரு குற்ற உணர்வு காணப்படுகின்றமை.
3. சமூகத்தின் அனைத்துத் தரப்பினர்களும் அங்கிகரிப்பார்களா எனும் ஒரு தாழ்வு மனோ நிலை.
4. பெரும்பாண்மை சமூகத்திடம் தமக்கு இருக்கும் எச்ச சொச்ச செல்வாக்கையும் இழக்க வேண்டி ஏற்படலாம் எனும் அச்ச உணர்வு.
5. தனது பொருளாதாரம் செல்வாக்குப் போன்றவைகளை இழக்க வேண்டி வருமோ எனும் அச்சம்.
6. தனக்கும் தனது மணைவி மக்களுக்கு இதனால் பல்வேறுப் பிரச்சினைகளும் பாதிப்புகளும்; ஏற்ப்படலாம் எனும் அச்ச உணர்வு.
இத்தியாதி காரணங்கள்தான் அனைவரையும் இதற்க்கு முன்வர விடாதுத் தடுத்துக் கொண்டிருக்கின்றது என்றே கூற வேண்டியுள்ளது.
இப்படியான இழப்புக்களைச் சந்திக்கத் துணிவு இல்லாத போது நிச்சயமாக நமது சமூகச் சிந்தனை என்பதும் சமூகத்தின் மீதான நமது கரிசனை என்பது உண்மையில் போலியானதும் நயவஞ்சகத்தனமானதுமேயாகும்.
முஸலிம்களாகிய நாம் அல்லாஹ்வின் ஏற்ப்பாட்டின் மீது ஆழமான நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அவன் நாடியதைத் தவிர வேறு எதுவும் நமது வாழ்வில் நடக்காது என்பதை உறுதியாக நம்புபவர்கள்.
அல்லாஹ் கூறுகின்றான் : பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹ{ல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.
உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்-குர்ஆன் : 57:22-23)
மேற்ப்படி வசனங்களிரண்டும் சில முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டுகின்றன.
அவையாவன :
1. உலகில் நிகழ்ந்து முடிந்த நிகழ்ந்து கொண்டிருக்கின்ற இன்னும் நிகழவிருக்கின்ற அத்தனையும் இந்த உலகம் படைக்கப்படுவதற்க்கு முன்னரே படைப்பாளனாகிய அல்லாஹ்வால் திட்டமிடப்பட்டு முடிவு செய்யப்பட்டு விட்டன.
2. இந்த அல்லாஹ்வின் ஏற்ப்பாட்டில் எந்தவொரு மாற்றத்தையும் யாராலும் கொண்டுவர முடியாது.
3. எமக்கு ஏற்ப்படுகின்ற இழப்பக்களும் அவனில் விதிக்குட்ப்பட்டதே எனவே அதுபற்றி நாம் கைசேதப்பட இடமில்லை.
4. அவ்வாறே எமக்கு ஏற்ப்படுகின்ற நன்மைகளும் அவனின் ஏற்ப்பாட்டிற்க்குட்ப்பட்டதே ஆகவே அவைபற்றி நாம் பெருமைப் படுவதற்க்கும் இல்லை.
5. அவ்வாறு அல்லாஹ்வின் விதியை மறந்து பெருமை கொள்வோர் அல்லாஹ்வின் அன்பிலிருந்து தூரமாக்கப்படுவர்.
எனவே நமது பணியெல்லாம் அல்லாஹ் சொனதன் பிரகாரம் செயற்ப்படுவதுதான் அதன் அனுகூலம் அல்லது பிரதிகூலம் அல்லாஹ்வின் ஏற்ப்பாட்டில் எவ்வாறு இருக்கின்றதோ அவ்வாறுதான் அமையும் என்பதை உறுதியாக நம்பி காலத்திற்க்கு ஏற்ற செயற்ப்பாடடை முன்னெடுப்பதில் தாமதமோ தயக்கமோ காட்டாது நடைமுறைப் படுத்துவதற்க்குத் தயாராகுதல் வேண்டும்.
தலைமைத்துவத்திற்ககு இருக்க வேண்டியத் தகுதிகாண் பண்புகள்
அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை. அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும். (அல்-குர்ஆன் : 3:159-160)
மேற்படி இரண்டு வசனங்களில் முதல் வசனம் தலைமைத்துவத்திற்க்குத் தகுதியானவரிடம் இருக்க வேண்டிய சில முக்கியமான பண்புகள் பற்றி கூறுகின்றது.
அவையாவன:
1. தலைவர் என்பவர் பொதுமக்களுடன் மென்மையாகவும் மிருதுவாகவும் நடந்து கொள்ளுதல் வேண்டும்.
2. கடுகடுப்பாகவும் கடினசித்தம் கொண்டவராகவும் இருத்தல் கூடாது.
3. சாதாரன பொதுமக்களால் பிழைகள் ஏற்ப்பட வாய்ப்புகள் உண்டு என்பதை புறிந்துக் கொள்ளுதல் வேண்டும்.
4. அந்தப் பிழைகளைக் கணக்கில் கொள்ளாது விட்டுவிடல் வேண்டும்.
5. அவ்வாறே அவர்களின் அந்தப் பிழைகளுக்கு அல்லாஹ்விடம் அவர்களுக்காக மன்னிப்புக் கேட்க்க வேண்டும்.
6. அனைத்து விடயங்களிலும் அவர்களைக் கலந்தாலோசனை செய்தல் வேண்டும்.
7. ஆலோசனையின் போது எடுக்கப்படம்; தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் அல்லாஹ்வின் மீது பொறுப்புச் சாட்டுதல் வேண்டும்.
இன்றய இந்த சூழலில் இத்தகையபப் பண்புகளைக் கொண்ட ஒருவரால்தான் நிச்சயமாக நம் சமூகத்தை ஓரணி சேர்க்க முடியும்.
அத்துடன் மேற்ப்படி இரண்டு வசனங்களுள் இரண்டாம் வசனம் முதல் வசனத்தில் கூறப்பட்டதன் அடிப்படையைக் கொண்ட ஒரு சமூக அமைப்புக்கு அல்லாஹ்வின் உதவி நிச்சயம் கிடைக்கும் என்பதை மறைமுகமாக விளக்குகின்றது. அவ்வாறே அல்லாஹ்வின் உதவிக் கிடைக்கப் பெற்றால் வேறு எவ்வளவு பெரிய சக்திகளாலும் நாம்மை எதுவும் செய்து விட முடியாது என்றும் அல்லாஹ்வின் உதவி கிடைக்காத போது எவ்வளவு பெரிய சக்திகளை நாம் கொண்டிருந்த போதும் அவை எவ்வித பலனையும் தரப் போவதில்லை என்பதனையும் விளக்குகின்றது.
எனவே விசுவாசிகளாகிய நாம் எதற்க்கும் அஞ்சாது எமது சமூகத்தை ஓரணித்திரட்டும் கடமையை உடனடியாகச் செய்வதற்க்குத் தயாராகுதல் வேண்டும்.
முனாப் நுபார்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக