ஞாயிறு, 8 ஜூன், 2014

தராவிஹ் தொழகையின் ரக்கஅத்துக்கள் எத்தனை?

அளவில்லா அருளும் நிகரில்லா அன்பும் கொண்ட அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தராவிஹ் தொழகையின் ரக்கஅத்துக்கள் எத்தனை?
தராவிஹ் தொழுகை பற்றி முன்னய எமது ரமழான் கால ,ரவு வணக்கம் எனும் லைபில் விழக்கி இருநதோம் எனவே எமது இந்த ஆக்கத்தில் அதன் ரக்கஅத்துக்களின் எண்ணிக்கை பற்றி பார்ப்போம்.
தராவிஹ் தொழுகையின் ரகாஅத்துக்கள் பற்றி முன்னோர்கள் பின்னோர்கள் அகிய அனைவர்களிடமும் பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன சிலர் 8 என்றும் இன்னும் சிலர் 20 மற்றும் சிலர் 36 என்றும் கறுதுகின்றனர். என்றாலும் எத்தனைதான் என்று ஒர் குறிப்பிட்ட எண்ணிக்கை கிடையாது என்பதுவே மிகச் சரியான கருத்தாகும். எனினும் நபி É அவர்கள் அத்தொழுகைக்கு ஒரு அளவினை நிர்னயிக்காது 'யார் ரமழானில் நிண்டு வணங்குகின்றாரோ' என்றுதான் கூறியுள்ளார்கள் அத்துடன் இராத் தொழுகை பற்றி கேட்கப்பட்ட போது நபி É இரண்டு இரண்டு ரக்கஅத்துக்கள் தொழ வேண்டு அப்போது சுபஹ் உடைய நேரம் வந்து விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டால் தான் தொழுத தொழுகையை ஒற்றையாக்கி முடித்துக் கொள்ள வேண்டும் என்று விளக்கம் கொடுத்தார்கள்.
நபி É அவர்கள் கூறினார்கள் - இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரகஅத்தாக தொழப்படும் உங்களில் ஒருவர் சுபஹ் உடைய நேரம் வந்து விடுவதைப் பயந்தால் அவர் ஒரு ரகஅத்துத் தொழுது தான் தொழுத தொழுகையை ஒற்றையாக்கிக் கொள்ளட்டும் (நூல்:-புஹாரி- முஸ்லிம் )
மேற்படி அறிவிப்பில் சுபஹ் வந்துவிட்டதோ என்று அஞ்சினால் தான் தொழுத தொழுகையை ஒற்றையாக்கி முடித்துக் கொள்ளுமாறு நபி É அவர்கள் கூறினார்களே தவிர இத்தனை ரகஅத் தொழுது முடித்தால் ஒற்றையாக்கி முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறவில்லை இதிலிருந்தே தராவீஹ் தொழுகையின் ரகஅத்துகக்களுக்கு ஒரு எல்லை கிடையாது என்பதனை நாம் புரிந்து கொள்ள முடியும் அவ்வாறு ஒரு குறிப்பிடப்பட்ட அளவுடையதாக இருந்திருந்தால் அது பற்றி விளங்கப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான அவசியமான இடம் இதுவேயாகும்.
என்றாலும் நபி É அப்படி எந்தவொரு எல்லையையும் நிர்ணயித்துக் குறிப்பிடாது சுபஹ் வந்து விட்டதோ என்று பயந்தால் என்றுதான் கூறினார்கள் இதுவே இரவுத் தொழுகை எத்தனை ரக்கஅத்களும் தொழலாம் என்பதற்கு போதிய சான்றாகும்.
தொழுகையில் நிலைகள் நீளமாகின்ற போது ரக்கஅத்துக்களின் என்னிக்கை குறைவதற்க்கும் நிலைகள் சிறிதாகின்ற போது ரக்கஅத்துக்களின் எண்ணிக்கைகள் கூடுவதற்கும் வாய்புக்கள் இருக்கின்றன ஆகவே தான் நபி É ரக்கஅத்துக்களின் என்னிக்கைகளை நிர்னயிக்காது சுபஹ் வந்துவிட்டதோ என்று பயந்தால் ஒற்றையாக்கி முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்கள்
தொழுகையில் மிகற் சிறந்த நிலைகள் இரண்டு
1. 1.      . நீண்ட நிலை
நபி É அவர்கள் கூறினார்கள். : தொழுகைகளில் சிறந்தது நீண்ட நிலைகளைக் கொண்ட தொழுகையாகும் (நூல்:- முஸ்லிம்) 
2.   2.      சுஜுதடைய நிலை
நபி É அவர்கள் கூறினார்கள். : சுஜுதுகளை அதிகப்படுத்திக் கொள்வாயாக ஏனெனில் நீ ஒருவன் சுஜுது செய்யும் போது அல்லாஹ் உனக்குஅதன் மூலம் ஒரு அந்தஸ்த்தை உயர்த்துகின்றான் அவ்வறே அதன் மூலம் உன்னடைய ஒரு பாவத்தை மன்னிக்கின்றான். ( நூல் முஸ்லிம்)
நபி É அவர்கள் றபீயா Ë அவர்களிடம் றபியாவே என்னிடம் கேள் என்று கூறினார்கள் அதற்கு றபியா Ë அவர்கள் நான் சுவர்க்கத்தில் உங்களுடன் இருப்பதைக் கேட்கிறேன் என்று கூறினார்கள். பிறகு நபி É அவர்கள் அதுவல்லாத வேறு ஏதாகிலும் என்று கூறினார்கள் அதற்கு றபியா Ë அவர்கள் அதுதான் எனக்கு வேண்டும் என்று கூறினார்கள் அதற்கு நபி É அவர்கள் அப்படியாயின் நீ சுஜுதுகளை அதிகப்படுத்திக் கொள் என்று கூறினார்கள். ( நூல் முஸ்லிம்)
மேற்படி இரண்டு நபிமொழிகளும் சுஜுதுகளை அதிகப்படுத்திக் கொள்ளுமாறு கூறுகின்றன எனவே ஒருவன் சுஜுதுகளைக் கூட்டிக் கொள்ள வேண்டுமாயின் அவன் நிச்சயமாக ரக்கஅத்துக்களை கூட்டித்தான் ஆகவேண்டும். ஏனெனில் ஒரு ரக்கஅத்தில் இரண்டு சுஜுதுகளுக்கு மேல் சுஜுதுகள் இல்லை என்பதை நாம் அறிவோம்.
அவ்வாறே ரக்கஅத்துக்களைக் கூட்டுவதும் கடமையான தொழுகைகளிலும் ரக்கஅத்துக்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ள பெருநாள் மற்றும் கிரகணம் போன்ற சுன்னத்தான தொழுகைகளிலும் செய்ய முடியாது என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். அப்படி என்றால்  ரக்கஅத்துக்களை அதிகப்படுத்த முடியுமான ஒரே தொழுகை ரக்கஅத்துக்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படாத இராவணக்கம் (கியாமுல்லைல்) மற்றும் ரமழானுடைய இராவணக்கம் (தராவிஹ்) போன்ற தொழுகைகளில்தான் சாத்தியமாகும்.
தராவிஹ் தொழுகை 11 ரகாஅத்துக்கள்தான் என்று கூறுபவர்களின் ஆதாரம்.
அன்னை ஆயிஷா Ë அவர்கள் அறிவிக்கின்றார்கள் - நபி É  அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் (இரவுத் தொழுகை) 11 ரக்கஅத்துக்களுக்கு மேல் தொழுதது கிடையாது. நான்கு ரகஅத்துக்கள் தொழுவார்கள் அதன் நீளத்தையோ அழகையோ பற்றி கேட்காதீர்கள், பிறகு நான்கு ரக்கஅத்துக்கள் தொழுவார்கள் அதன் நீளத்தையோ அழகையோ பற்றி கேட்காதீர்கள் பிறகு மூன்று ரக்கஅத்துக்கள் தொழுவார்கள் அப்போது நான் இறைத் தூதர் அவர்களே வித்று தொழுவதற்கு முன்னர் நீங்கள் தூங்குவீர்களா என வினவீனேன். அதற்கு அயிஷாவே எனது கண்கள் இரண்டும் உறங்கும் என்றாலும் எனது உள்ளம் உறங்குவதில்லை என்று நபி É அவர்கள் பதில் கூறினார்கள். (நூல்:-புஹாரி )
அண்ணை ஆயிஷா Ì அவர்களின் மேற்படி அறிவிப்பு நபி É அவர்கள் 11 ரக்கஅத்துக்கள் தான் தொழுதார்கள் என்பதற்கு ஆதாரமாக அமையாது மாறாக நபி É அவர்கள் 11 ரகஅத்துக்களுக்கு அதிகமாக தொழுததில்லை என்பதற்குத்தான் அதனை நாம் ஆதாரமாகக் கொள்ள வேண்டும். ஏனெனில் நபி É அவர்கள் சில இரவுகளில் இஷாவிலிருந்து சுபஹ் வரை வெறும் இரண்டு ரக்கஅத்கள் மட்டுமே தொழுதுள்ளார்கள். என்று சில அறிவிப்புக்கள் இடம் பெற்றுள்ளன.
நாம் ரமழான் கால இரவு வணக்கம் எனும் தலைப்பின் கீழ் குறிப்பிட்டது போன்று தராவிஹ் தொழுகை என்பது ரமழானுக்கு மாத்திரம் உள்ள விஷேட தொழுகையாகும். ஆயிஷா Ì அறிவிக்கும் செய்தி நபி É அவர்களின் ரமழானிலும் ரமழான் அல்லாத ஏனைய காலங்களிலும் உள்ள வழமையான தொமுகை பற்றியதாகும்.
அவ்வாறு ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் வழமையாக 11 ரக்கஅத்கள் தொழுது வரக் கூடியவர்கள் விடயத்தில் அதுவே சிறந்த்தாகும். நாம் அவ்வாறில்லை நாம் ரமழானில் மாத்திரமே விஷேடமாக இரவில் தொழக் கூடிவர்களாக உள்ளோம். ஆதலால் எமது தொழுகைக்கு இது பொருந்தாது.
அவ்வாறே ஆயிஷா Ì அவர்கள் நபி É அவர்களின் இரவுத் தொழுகையினையும் வித்று தொழுகையினையும் பற்றி விளக்குகின்ற அறிவிப்பில் நபி É அவர்கள் 11 ரகஅத்கள் தொழுதார்கள் என்றும் வயது முதிர்ந்த போது 9 ரகஅத்துக்கள் தொழுதார்கள் என்றும் இன்னும் 7 ரக்கஅத்துக்கள் தொழுதார்கள் என்றும் கூறுகின்றார்கள்.
எனவே 11 ரக்கஅத்கள்தான் இரவுத் தொழுகை என்பது பிழையாகும் என்றாலும் நபி É அவர்கள் 11 ரக்கஅத்துக்களுக்கு கூடுதலாக தொழுகின்ற அளவுக்கு அவர்களுக்கு நேரம் இடம் கொடுக்கவில்லை என்பதே யதார்த்தமாகும். அந்த அளவு நீண்ட நிலைகளைக் கொண்ட தொழுகைகளாக நபி É அவர்களின் தொழகைகள் அமைந்திருந்த்ன.
என்றாலும் சிலபோது நிலைகளின் நீளம் குறைகின்ற போது 13 ரகஅத்துக்களும் நிலைகளின் நீளம் கூடுகின்றபோது 4 அல்லது 2 ரக்கஅத்துக்களும் தொழுதுள்ளார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இப்னு அப்பாஸ் Ê அவர்கள் ஒரு நாள் மைமூனா Ë அன்ஹா அவர்களின் வீட்டில் தங்கி இருந்த போது நபி É அவர்கள் 13 ரகஅத்துக்கள் தொழுததாக அறிவிக்கின்றார்கள்.
இப்னு அப்பாஸ் Ê அவர்கள் கூறுகின்றார்கள்: நான் ஒரு இரவு அண்ணை மைமூனா Ë அன்ஹா அவர்களின் வீட்டில் நபி É அவர்களுடன் தங்கி.ருந்தேன் அப்போது இரவில் அரைவாசி அல்லது அரைவாசியிற்கு சற்று முன்னர் வரை நபி É அவர்கள் தூங்கினார்கள் பிறகு தூக்கத்திலிருந்து விழித்து முகத்திலிருந்து தூக்கத்தைக் கலைத்தவர்களாக ஆல இம்ரான் அத்தியாயத்தின் 10 வசனங்களை ஓதினார்கள்.பிறகு தண்ணீரை எடுத்து நல்லமுறையில் வுழு செய்தார்கள் பிறகு தொழுகைக்கு எழுந்து நின்றார்கள் நானும் அவர்களுடன் இனைந்து தொழுதேன் அவர்கள் இரண்டு ரகஅத்துக்கள் தொழுதார்கள் பின்னும் இரண்டு ரகஅத்துக்கள் தொழுதார்கள் பின்னும் இரண்டு ரகஅத்துக்கள் தொழுதார்கள் பின்னும் இரண்டு ரகஅத்துக்கள் தொழுதார்கள் பின்னும் இரண்டு ரகஅத்துக்கள் தொழுதார்கள் பின்னும் இரண்டு ரகஅத்துக்கள் தொழுதார்கள் பிறகு வித்று தொழுதார்கள். (நூல்: புஹாரி)
அத்துடன் நாம் இங்குபேசுவது வழமையான ,ரவு வணக்கம் கடையாது இது ரமழான் காலத்தில் மட்டும் தொழப்படுகின்ற பிரத்தியேகமானத் தொழகையாகும்.  
எனவே ரமழான் அல்லாத காலங்களில் யாரெல்லாம் இரவில் 11 ரக்கஅத்கள் வழமையாகத் தொழுது வரக்கூடியவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் ரமழானிலும் 11 ரகஅத்துக்கள் தொழுவதே சிறந்தது. அவ்வாறே ரமழான் அல்லாத காலத்தில் ஒருவர் வழமையாக எத்தனை ரகஅத்துக்கள் தொழுது வருகின்றாரோ அதனையே ரமழானிலும் அவர் தொழுவது சிறந்ததாகும். ஏனெனில் நபி É அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதால் அதனைத் தொடராகத் தொழுவதை விரும்பக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.
என்றாலும் ரமழானில் மட்டும் யார் இரவுத் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அவர்கள்; விடயத்தில் மேற்படி அறிவிப்பு பொருந்தாது என்பதே சரியான கருத்தாகும்.
ஏனெனில் ரமழான் அல்லாத காலங்களில் தொழாமல் இருந்து விட்டு ஒருவர் ரமழானில் மட்டும் விஷேடமாகத் தொழுகின்றார் என்றால் அது ரமழானுக்குரிய விஷேடத் தொழுகை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
எனவே தராவிஹ் தொழுகை இத்தனை ரக்கஅத்துதான் என்பதற்கு எந்தவொரு வலுவான ஆதாரமும் இல்லாததனால் அது ஒருவருக்கு எத்தனை ரக்கஅத்துக்கள் தொழ முடியுமோ அத்தனை தொழலாம்.
என்றாலும் இரவு முழுவதும் தொழுத நன்மையினை அடைந்து கொள்ளும் வகையில் ஜமாஅத்துடன் இமாம் தொழுது முடியும் வரை தொழுவது சிறந்ததாகும்.
அபூதர் Ê அவர்கள் கூறுகின்றார்கள் நாம் நபி É அவர்களுடன் ரமழான் மாதம் நோன்பு நோற்றோம் நபி É அவர்கள் ரமழான் மாதத்தில் ஏழு நாட்கள் மீதம் ஆகும் வரை எமக்கு இரவில் எந்தவொரு தொழுகையையும் நடாத்தவில்லை ஏழு நாட்களே மீதமான போது இரவில் மூன்றில் ஒரு பகுதி எமக்கு தொழுகை நடாத்தினார்கள்.
பிறகு ஆறு நாட்கள் மீதமான போது எமக்கு இரவில் தொழுகை நடாத்தவில்லை மாதத்தில் ஐந்து நாட்கள் மீதமான போது இரவில் அரைவாசிப்பகுதி எமக்கு தொழுகை நடாத்தினார்கள் அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களே இவ்விரவின் எஞ்சிய பகுதியையும் எமக்கு தொழுவித்தால் என்று கூறினேன் அதற்கு நபி É அவர்கள் ஒரு மனிதன் இமாமைத் தொடர்ந்து இமாம் தொழுகையை முடிக்கும் வரை தொழுதால் அவர் இரவு முழுவதும் தொழுதவராக கனிக்கப்படுவார் என்று கூறினார்கள். (நூல்:- அபூதாவுத், இப்னுமாஜா, அஹ்மத்)
மேற்படி அறிவிப்பில் ஒரு மனிதன் இமாமைத் தொடர்ந்து இமாம் தொழுகையை முடிக்கும் வரை தொழுதால் அவர் இரவு முழுவதும் தொழுதவராக கனிக்கப்படுவார்; என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இமாம் ஜமாஅத்தாக ஜமாஅத் முடியும் வரை நாம் தொழுவதே சிறந்ததாகும்.

முனாப் நுபார்தீன்.



கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...