புதன், 11 ஜூன், 2014

நமது வெற்றியின் இரகசியம் தேசிய ஒற்றுமை

بسم الله الرحمن الرحيم

நமது வெற்றியின் இரகசியம் தேசிய ஒற்றுமை

அன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹு

நமது தேசிய ஒற்றுமையின் அவசியம் பற்றி இதற்கு முன்னரும் நாம் பல ஆக்கங்களை பல இணையதள ஊடகங்களில் பதிவிட்டிருந்தோம் என்பதை வாசகர்கள் அறிந்திருப்பீர்கள் என்று கருதுகின்றோம். என்றாலும் தொடர்ந்தும் அது வலியுறுத்தப்பட வேண்டியத் தேவை இருப்பதனைத் தாங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் எனும் பெருந்தன்மையினாலே இதனையும் தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

எமது இந்த ஆக்கத்தின் நோக்கம்; யாரையும் குறைகாண வேண்டும் அல்லது விமர்சிக்க வேண்டும் என்பதல்ல நாம் இதுகாலம் வரைக்கும் யாரையும் விமர்சித்ததும் கிடையாது அவ்வாறு விமர்சிப்பதை அங்கீகரித்ததும் கிடையாது என்றாலும் நம் சமூகத்தின் குறிப்பாக அப்பாவிகளான பொது மக்களின் எதிர்காலம் பற்றிய கவலையே இந்த ஆக்கத்தை எழுதத் தூண்டியது. எனவே இதன் மூலம் எவருடையயாவது உள்ளம் பாதிக்கப்பட்டால் அல்லாஹ்வுக்காக எம்மை மன்னித்துக் கொள்ளுங்கள்.

இன்று இலங்கை முஸ்லிம்களின் உரிமைகள், பாதுகாப்பு, வணக்க வழிபாடுகள், மதக்கிரியைகள், மதக்கலாச்சாரம், மதஸ்தலங்கள் மொத்தத்தில் இஸ்லாமிய வரையறைக்குள் வாழ்தல் என்பது போன்ற அத்தனைக்கும் எதிரான அச்சுறத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றதைப் பார்க்கின்றோம். கடந்த இரண்டு வருடங்களுக்குள் சுமார் 280 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்று அவை தொடர்பான முறைப்பாடுகள் காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் தேங்கிக்கிடக்கும் இதே நேரம் தற்பொழுது ஜெய்லானி பள்ளிவாயலின் மீது பெரினவாதம் அதன் கோரப் பார்வையைச் செலுத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது இவ்வாறு இருக்க ஒரு சில தினங்களுக்கு முன் பதுள்ளையில் 14 வயதே ஆன பள்ளிச் சிறுவன் ஒருவன்; தொப்பி அணிந்து கொண்டு பாதையில்; சென்றான் என்ற ஒரே காரணத்திற்காக சிறுவன் என்று கூட பாராது இனவாத பாசிசப் பேய்களால் தாக்கப்பட்டான் என்பதுவும் நாம் அறிந்ததே அத்துடனாவது அவர்களின் அடாவடித்தனம் அங்கு முடிவுற்றதா என்றால்  அதுவும் இல்லை இந்த ஆக்கத்தினை எழுதிக் கொண்டிருக்கும் போதே (2014-06-10) பதுள்ளையில் முஸ்லிம் ஒருவரின் கடை ஊழியர்; காவிக் காடையர்கள் உள்ளிட்ட கயவர்களால் தாக்கப்பட்டதாகவும் கடை முற்றுகையிடப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இவைகளுக்கும் நாம் செய்யப் போகும் எதிர் நடவடிக்கை அறிந்ததே வழமை போல் ஒரு அறிக்கை, பத்துடன் பதினொன்றாக ஒரு முறைப்பாடு அவ்வளவுதான் அதற்க்கப்பால் ஒரு அடி கூட எடுத்து வைக்கத் தயங்கிக் கொண்டிருக்கும் நாதியற்ற ஒரு சமூகமாகத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் இந்நிலையில் இப்படியான கோழைத் தனமான ஒரு கேடு கெட்ட வாழ்க்கை இப்புவியில் நாம் வாழத்தான் வேண்டுமா? என்று சிந்திக்கத் தோன்றுகின்றது. ஆண்டாண்டு காலம் கோளைகளாக வாழ்வதை விட வீரனாக ஒரு வினாடி வாழ்ந்து மடிவது ஏற்புடையதே. 

இவை இத்தனை நடந்தும் நம் சமூகம் இன்னும் தனது பிரிவினைவாத அரிசியல் மற்றும் இயக்கவாத வறட்டுப் பிடிவாதம் போன்ற ஜாஹிலிய்யா நிலையிலிருந்து ஒரு அங்குலமேனும் அசைந்ததாக, நகர்ந்ததாகத் தெரியவில்லை என்பதை நினைக்கும் போது நாம் உண்மையில் முஸலிம்கள்தானா? என்ற கேள்வியும் கூடவே எழுகின்றது.

நாம் இங்கு ஜாஹிலியத் என்று குறிப்பிடுவது சிலருக்கு அஜீர்ணமாகக் கூட இருக்கலாம் என்றாலும் அதுதான் உண்மை என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்திருப்பான் என்றே நம்புகின்றோம் ஏனெனில் இயக்கவாதமும் பிரிவினைவாதமும் ஜாஹிலிய்யாக் கால செயல்களிள் உள்ளதாகும். நபி (ஸல்) அவர்கள் தங்களது தஃவா வழிமுறையில் ஈமானுக்கு அடுத்ததாகச் செய்த பணி இந்த இரண்டு ஜாஹிலிய்யத்தையும் சமூகத்திலிருந்து வேரறுத்ததுத் துடைத்தெறிந்ததுதான்.

எனவே நம் சமூகத்தின் அரசியல் மற்றும் சமயத் தலைமைகளிடம் ஒரு வேண்டுகோள், தயவு செய்து உங்களுடைய அரசியலையும் அதிகாரங்களையும் பட்டங்களையும் பதிவிகளையும் வறட்டு இயக்க கௌரவங்களையும் சொத்து சுகங்களையும் நீங்கள் தக்க வைத்துக் கொள்ளுங்கள் அதனை நாம் தடுக்கவில்லை என்றாலும் இன்று நம்மை சூழ்து கொண்டிருக்கும் இந்தப் பேரினவாத நச்சுப் புகை மண்டளத்திற்க்கு நாம் இப்பொழுதே முற்றுப்புள்ளி வைத்து முடிவு காணத் தவறின் அது நம் சமூகத்தின் வருங்கால சந்ததியினர்கள் அதன் கொடுரமானத் தாக்குதலிலிருந்து வெளியேற முடியாத ஒரு சூழ்நிலையைத் தோற்றுவித்து விடும் என்பதில் சந்தேகமில்லை. இந்த வரலாற்றுத் தவறை நாம் செய்து விடக் கூடாது என்று உங்களைப் பணிவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

எனவே தயை கூர்ந்து நம் வருங்கால சந்ததியினர்களைக் கருத்தில் கொள்ளுங்கள், ஆதலால் உங்களுடைய அரசியல் பிரிவினை மற்றும் சமயப் பிரிவினையிலிருந்து சற்று அல்லாஹ்வுக்காக வெளியேறுங்கள். வாருங்கள் நாமனைவரும் முஸ்லிம் என்ற ஒரே அடிப்படையின் கீழ் ஒன்று படுவோம்;;. காலத் தாமதமின்றி அவசரமாகக் ஒரு தேசிய தலைமையைக் கட்டியெழுப்புவோம் அந்தத் தலைமையை நமது ஒற்றுமையின் மூலம் பலப்படுத்துவோம். அதன் ஊடாக நமது உரிமைகளைப் பாதுகாப்போம் இழந்தவைகளை மீட்டெடுப்போம்.

நாம் இன்று சிறு சிறு இழப்புக்களை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுவதானது நம்மை மென்மேலும் பலவீனப்படுத்தி நாளை பெரும் இழப்புக்களைச் சந்திக்கச் செய்து விடும் என்பதில் சந்தேகம் கிடையாது. எனவே இன்றே தயாராகுங்கள் இந்த எமது உரிமைப் போராட்டத்திற்கு எம்மால் முடிந்தத் தியாகங்களைச் செய்வோம் அதில் ஏற்படுகின்ற அத்தனைத் தடைகளையும் உடைத்தெறிவோம். நாம் தயாரானால் நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி நம்மை நோக்கி விரைந்து வரக்காத்திருக்கின்றது.

அல்லாஹ் கூறுகின்றான் : ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்.(அல்-குர்ஆன் : 47 : 7)

அவ்வாறு அல்லாஹ் நமக்கு உதவினால் நிச்சயமாக நம்மை எந்தவொரு சக்தியும் ஒன்றும் செய்து விட முடியாது 

அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை யாரும் மிகைத்து விட முடியாது. (அல்-குர்ஆன் : 3: 160)

இந்த அறப் போராட்டத்தில் நாம் அடைய இருப்பது வெற்றி அல்லது வீர மரணமாகக்கூட இருக்கலாம் நாம் இன்று முஸ்லிம்களாக இருப்பதற்கும் இஸ்லாம் இப்பூமியில் வாழ்வதற்கும் நம் முன்னோர்களின் உதிரமும் உயிருந்தான் உரமாக்கப்பட்டது என்பதை நினைத்துப் பார்ப்போம் நம் முன்னோர்கள் செய்யாத தியாகங்களையா நாம் செய்யப் போகின்றோம் என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

நம் முன்னோர்கள் இஸ்லாம் இந்தப் பூமியில் வாழ வேண்டும் அது உலகை ஆள வேண்டும் என்பதற்காக உயிருடன் நெருப்பிலிடப்பட்டார்கள் இரண்டாகக் கிழிக்கப்பட்டார்கள். இரும்பு சீப்புக்களால் வாரப்பட்டார்கள் பாலைவணத்தில் நெருப்பாகக் கொதிக்கும் சுடு மணலில் படுக்க வைத்து பாறாங்கற்கள் ஏற்றப்பட்டார்கள் பெரும் கிடாரங்களில் கொதிக்கும் எண்ணையில் போடப்படார்கள் இத்தனை இத்தனைத் தியாகங்களைத் தாங்கிக் கொண்டு வந்ததுதான் இந்த இஸ்லாம் இதுதான் நமது வரலாறு.

இந்த வரலாற்றை நோக்கித்தான் இன்று இஸ்லாம் மீண்டு கொண்டிருக்கின்றது. இதைத்தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு முன்னறிவித்தல் செய்துள்ளார்கள். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக இஸ்லாத்தின்;; தோன்றம் விசித்திரமானதே அது எவ்வாறு தோன்றியதோ அவ்வாறே விசித்திரமான நிலைக்கு மீண்டு விடும். 
அப்போது அந்த விசித்திரமானவர்களுக்கு நற்செய்தி உண்டாகட்டும். 
அவர்கள் அதிகமான கெட்ட மனிதர்களுக்கு மத்தியில் காணப்படும் குறைவான நல்ல மனிதர்களாவார்கள்.
அவர்கள் மனிதர்கள் வழிகேட்டில் செல்லும் போது அவர்களை நேர்வழிப் படுத்துபவர்களாவார்கள்' (முஸ்லிம், அஹமத் அல்-இபானத்துல் குப்ரா)

ஆம் இன்றய நம் சமூகம் இந்த சிறுபாண்மையினர்களான நன்மக்களைத்தான் வேண்டி நிற்கின்றது அவர்களால்தான் இந்த சமூகத்தைச் சீர் பெறச் செய்ய முடியும். அவர்களால்தான் இந்த சமூகத்தை ஒன்று படுத்தி ஓரணித்திரட்ட முடியும். எங்கே அவர்கள்? ஏன் அவர்கள் களமிறங்கும் காலம் இன்னும் வரவில்லையா? அல்லது அத்தகய நன்மக்கள் எவருமே நமக்குமத்தியில் இல்லையா?

இல்லாமலில்லை அவர்கள் நம்மத்தியில் இல்லாமல் இதன் பிறகு பிறந்து வரக்கூடியவர்கள் அல்ல, மாறாக நமக்குள்ளேதான் இருக்கின்றார்கள் என்றாலும் அவர்கள் அவர்களைப் பற்றி இன்னும் புரிந்து கொள்ளத் தயங்குகின்றார்கள் நாம் தௌபா செய்து இதன் பிறகு அவ்வாறானப் பாவங்களில் ஈடுபடாது எம்மைப் பாதுகாத்துக் கொள்ள, நல்லறங்களில் எம்மை ஈடுபடுத்த மக்களை நல்வழிப் படுத்த உறுதி பூனுவோமாகவிருந்தால் நாம்தான் அந்த நன்மக்கள். இன்னும் ஏன் நாம் அந்த நன்மக்களில் எம்மை ஆக்கிக் கொள்ள  தயக்கம் காட்ட வேண்டும்.

தயங்கியது போதும் சகோதரர்களே இன்றேத் தயாராகுங்கள்;  நாம் அல்லாஹ்விடம் தௌபா செய்து நம்மை பாவத்திலிருந்து பரிசுத்தமாக்குவோம், சாலிஹான நல்லமற்களில் நம்மை ஈடுபடுத்துவோம் மக்களை நேர்வழிப்படுத்துவோம். அப்போது நமது கடந்த கால பாவங்களெல்லாம் மன்னிக்கப்படுவது மட்டுமின்றி அவைகள் நமக்கு நன்மைகளாகவும் மாற்றப்படும் என்று அருளாளன் அல்லாஹ் வாக்களிக்கின்றான். அப்போது நாமும் மேற்கூறப்பட்ட அந்த நன்மக்களாகி விடலாம்.

அல்லாஹ் கூறுகின்றான் : தௌபா செய்து (அல்லாஹ்வை) விசுவாசித்து நற்கருமங்கள் செய்யக்கூடிய அவர்களுக்கு அவர்களது பாவங்களை அல்லாஹ் நன்மைகளாக மாற்றிக் கொடுக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பாளனகவும் அருளாளனாகவும் இருக்கின்றான் (அல்-குர்ஆன் : 25 : 70)

எமது இந்த அழைப்பானது இஸ்லாத்தின் எதிரிகளை நிலை குலையச் செய்யும்; எமது வெற்றி என்பது நிச்சயமாக எண்ணிக்கையிலோ படைப் பலத்திலோ அல்லது ஆயுதப் பலத்திலோ கிடையாது மாறாக ஈமானிய பலத்திலும் ஒற்றுமையிலும்தான் நமது வெற்றியின் இரகசியம் அமையப் பெற்றிருக்கின்றது. இது இரண்டையும்தான் நாம் இன்று இழந்து விட்டு எதுவெதுவோ பேசிக் கொண்டிருக்கின்றோம்.

பேசிப்பேசி காலம் கடத்தியது போதும் வாருங்கள் நமது விரோதிகளுக்கெதிராக நம்மைத் தயார் படுத்திக் கொண்டு ஒரே அணியாய் களமிறங்குவோம். 

அல்லாஹ் கூறுகின்றான் : நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது. (அல்-குர்ஆன் : 9:41,42)

எனவே யாரெல்லாம் அரசியல் இலாபம் மற்றும் சமூகப் பிரபல்யம் போன்ற குறுகிய நோக்கங்களின்றி இதய சுத்தியுடன் அல்லாஹ்வுக்காக என்று மட்டும் நம் சமூகத்தைப் பற்றிக் கவலைப் படுகின்றார்களோ அவர்கள் அனைவரும் நம் சமூக வெற்றிக்குத் தடையாக விளங்கக் கூடிய அத்தனையையும் தனது முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்து விட்டு சமூகத்தைப் பாதுகாக்க முன் வர வேண்டும்.

அவ்வாறின்றேல் நமது சமூகம் பற்றியக் கவலை மற்றும் கரிசனை என்பதுவெல்லாம் வெறும் சந்தர்ப்ப வாதமானதும் போலித்தனமானதும் மட்டுமின்றி கூடவே நயவஞ்சகத்தனமானதுமாகவே அமையும் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை.

அல்லாஹ்வே அனைத்துக்கும் போதுமானவன். அவனுக்கே அனைத்துப் புகழும்   
 الحمد لله


முனாப் நுபார்தீன்.

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...