திங்கள், 9 ஜூன், 2014

சவூதி ஈத்தம் பழமும் ஷரீஆவின் நிலைப்பாடும்.

بسم الله الرحمن الرحيم

சவூதி ஈத்தம் பழமும் ஷரீஆவின் நிலைப்பாடும்.

அன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹு

இலங்கை முஸ்லிம்களுக்கு நோன்புத் திறப்பதற்கு விநியோகிப்பதற்க்காக சவூதி அரசால் அனுப்பி வைக்கப்பப்பட்ட ஈத்தம் பழங்கள் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமிழ் சிங்க சமுகங்களுக்கு பகிர்ந்தழிக்கப்பட்டதாகவும் மற்றும் அமைச்சர்களுக்குப் பகிர்ந்தழிக்கப்பட்டு சந்தையில் விற்க்கப்படுவதாகவும் பல் வேறு தரப்பினர்களும் பல்வேறு கருத்துக்களைக் கடந்த சில வாரங்களாக அல்லது மாதங்களாக இணைய ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு வருவதனைப் பார்கின்றோம்.

இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் கேள்விகளும் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளை இன்னும் சில சகோதரர்கள் இதனை ஒரு சாதாரண விடயமாகவும் நோன்புக் கஞ்சி மற்றும் பெருநாள் விருந்து போன்ற ஒரு செயலாகவும் ஊடகங்களில் எழுதி வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்நிலையில் குறித்தப் பிரச்சினைத் தொடர்பான ஷரீஆவின் நிலைப்பாடு என்ன ஷரீஆவின் கண்ணோட்டத்தில் அது எந்த அளவு பாரதூரமான ஒரு குற்றம் என்று நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்;. அவ்வாறு நாம் ஷரீஆவின் கண்ணோட்டத்தில் அதன் நிலை பற்றி அறிந்து கொள்ள முற்படுகின்ற போது முதலில் பின் வரும் சில முக்கிய விடயங்கள் பற்றி எமது கவனத்தைச் செலுத்துதல் வேண்டும்.

1. குறித்த அன்பழிப்பின் நோக்கம் புரியப்படுதல் வேண்டும்.

சவூதி அரசு அல்லது வேறு ஒரு அரசு எமக்கு ஈத்தம் பழம் அன்பளிப்புச் செய்கின்றதென்றால் வெறுமனே நாமனைவரும் ஏழைகள் வெறும் 250 கிராம் ஈத்தம் பழம் வாங்கி நோன்பு திறந்து கொள்ளும் அளவுக்குக் கூடத் தகுதியற்றவர்கள் எனும் நோக்கில் அவ்வாறு வழங்குவதில்லை.

ஒரு நோன்பாளிக்கு நோன்புத் திறக்கச் செய்வதால் குறித்த நோன்பாளியின் கூலியில் எவ்வித குறையுமின்றி நோன்புத் திறக்கச் செய்தவருக்கும் முழுமையாகக் கூலி அதாவது நன்மை வழங்கப்படும் எனும் நபி (ஸல்) அவர்களின் ஆர்வமூட்டலுக்கிணங்க நன்மைகள் பன்மடங்காக கிடைக்கப் பெறுகின்ற புனித மாதமாகிய ரமழானில் அபரிமிதமான நன்மைகளை அடைந்து கொள்ள வேண்டும் எனும் உயர் நோக்கத்தின் அடிப்படையில்தான் அந்த ஈத்தம் பழங்கள் எமக்கு அன்பழிப்புச் செய்யப்படுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஒரு நோன்பாளிக்கு நோன்புத் திறக்கச் செய்கின்றானோ அவனுக்கு குறித்த நோன்பாளியின் கூலியைப் போன்ற கூலி வழங்கப்படும் இதனால் அந்த நோன்பாளியின் கூலியில் எவ்வித குறையும் ஏற்ப்படாது. (நூல் : இபுனு மாஜா)

எனவே முஸ்லிம்களுக்கு நோன்பு திறப்பதற்காக வழங்கப்படுகின்ற ஒரு உணவு அல்லது பாணம் என்பது ஏனைய தானதர்மங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு வணக்கமாகும் ஆகவே அதனை நோன்பாளிகல் அல்லாத வேறு யாருக்கும் அன்பழிப்பு செய்வதென்பது அவர்கள் முஸலிம்களாக இருந்தாலும் நமது ஷரீஆவின் பார்வையில் மிகப்பெரும் குற்றமாகும் என்றிருக்கும் போது முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் கொடுப்பதென்பது எந்த அளவு பாரதூரமான குற்றமாக இருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

அத்துடன் குறித்த ஈத்தம் பழங்கள் சவூதி அரசு அல்லது ஏனைய அரசுகள் ஈத்தம் பழ விவசாயம் செய்து தனது விவசாய நிலத்திலிருந்தோ அல்லது தனது அரச கழஞ்சியத்திலிருந்தோ அல்லது அரச நிதியிலிருந்து கொள்வனவு செய்தோ அனுப்புவதுமில்லை. மாறாக அங்குள்ள தனவந்தர்களிடம் வசூல் செய்துததான் அனுப்புகின்றது என்பதும் இந்த இடத்தில் கவனத்தில் கெகாள்ளப்படல் வேண்டும்.

2. குறித்தத் குற்றத்தின் தண்மை.

இந்தப் புணிதமான மாதத்தில் ஒரு மனிதனுக்கு நோன்புத் திறக்கச் செய்ய வேண்டும் அதன் மூலம் அதிகமான நன்மைகளை அடைந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் கொடுக்கப்படுகின்ற ஒரு உணவு அல்லது பாணத்தை மோசடி செய்வதென்பது நமது ஷரீஆவின் கண்ணோட்டத்தில் மிகப் பெரும் குற்றமாகும். ஆத்துடன் இந்தச் செயல்; அதிகார துஸ்பிரயோகம் நிருவாக மோசடி போன்ற கடுமையானக் குற்றத்தைச் சாரும். 

எனவே இதற்க்கு நம் சமூகத்தைச் சார்ந்த ஒருசிலரின் ஒப்புதல் நிச்சயமாக இருந்திருக்க வேண்டும் எனும் கருத்தோட்டம் பரவலாகக் காணப்படுகின்றது ஆகவே அவ்வாறு எவரேனும் சம்மந்தப்பட்டிருந்தால் அவ்வாறு சம்மந்தப்பட்டவர்கள் பொறுப்புதாரிகள் அதிகாரிகள் போன்ற அனைவரும் நிச்சயமாக நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எந்தவொரு அடியானுக்கு அல்லாஹ் ஒரு நிருவாகப் பொறுப்பைக் கொடுத்து அவன் தனது நிருவாகத்தில் மோசடி செய்தவனாக மரனித்தால் அல்லாஹ் அவனுக்கு சுவர்க்கத்தை ஹராமாக்கி விடுவான். (நூல் : புஹாரி)

பிரிதோர் அறிவிப்பில் : தனது நிருவாகத்தில் மோசடி செய்த நிலையில் தூக்கத்திற்க்குச் செல்லுகின்ற ஒவ்வொரு பொறுப்புதாரிக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தின் வாடையையே ஹராமாக்கி விடுகின்றான்.(நூல் : தபகாத்துல் குப்ரா) என்று பதிவாகி உள்ளது

மேற்படி இரு நபி வழிச் செய்திகளுள் முதல் நபி வழிச் செய்தி தனது பொறுப்பில் மோசடி செய்த ஒருவன் தனக்கு மரணம் வருமுன் அதற்கான பரிகாரத்தினைத் தேடிக்கொள்ள வேண்டும் அவ்வாறின்றேல் மறுமையில் சுவர்க்கம் பிரவேசிப்பது கேள்விக் குறியாகி விடும் என்று கூறுகின்றது.

அவ்வாறே இரண்டாவது நபி மொழி தனது பொறுப்பில் மோசடி செய்த ஒருவன் உடனடியாக தான் தூக்கத்திற்குச் செல்லும் அன்றய நாளின் கடைசி நேரத்திற்க்குள் அதற்க்கானப் பரிகாரத்தினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் இன்றேல் சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று கூறுகின்றது.

மேற்படி நபி மொழிகளின் அடிப்படையில் பார்குகின்ற போது நம்மில் அநேகரின் நிலை கவலைக்கிடமானதாகவே தெரிகின்றது.

எனவே இந்த மாபெரும் குற்றத்துடன் தொடர்புடைய நம் சமூகத்தைச் சார்ந்த பொறுப்புதாரிகள் அதிகாரிகள் போன்ற அனைவரும் இதற்க்கு மாற்றீடாக எந்த அளவு ஈத்தம் பழத் தொகை தமிழ் சிங்கள சமூகங்களுக்குப் பகிர்ந்தழிக்கப்பட்டதோ அதே அளவு ஈத்தம் பழங்களைக் கொள்வனவு செய்து நோன்பாளிகளுக்கு விநியோகித்தல் கட்டாயமாகும். அப்போதுதான் அவர்கள் அல்லாஹ்வின் விசாரனையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். 

3. குறித்தத் தவறு தடுக்கப்படல் வேண்டும்.

குறித்தப் பிரச்சினையுடன் சும்மந்தப்பட்டவன் தனது சகோதர முஸ்லிமாகவிருந்தால் அவனை அதிலிருந்துத் தடுத்து நிறுத்தி நேர்வழிக்குக் கொண்டுவர வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்குண்டு.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உனது சகோதரன் அநியாயம் இழைக்கப்படக்கூடியவனாக இருந்தாலும் அல்லது அநியாயம் இழைப்பவனாக இருந்தாலும் அவனுக்கு உதவிடு. அதன் போது அல்லாஹ்வின் திருத் தூதர் அவர்களே ஒருவன் அநியாயம் இழைக்கப்படக்கூடியவனாக இருந்தால் அவனுக்கு உதவலாம் என்றாலும் அநியாயம் செய்யக்கூடியவனாக இருந்தால் அவனுக்கு எவ்வாறு உதவுவது என்று கேட்க்கப்பட்டது அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவனை அதிலிருந்து நிறுத்த அல்லது தடுக்க வேண்டும்.( நூல் : புஹாரி )

முனாப் நுபார்தீன்.

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...