தூங்கியது போது துள்ளி எழுவோம்
அன்பின் சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ{
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் : ஒரு முஸ்லிம் ஒரே குழியில் இரு தடவைகள் விழ மாட்டான். (புஹாரி)
சுதந்திர இலங்கையின் கடந்த 67 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விடயங்களில் இந்த நாட்டை மாறி மாறி ஆட்ச்சி செய்து வருகின்ற இரு பேரினதவாத கடச்சிகளாலும் தொடர்ந்தும் ஏமாற்றப்ட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதுவே நமது கசப்பான வரலாற்றுண்மையாகும்.
இவ்வாறான நீண்ட ஏமாற்றம் நிறைந்த வரலாற்றைக் கொண்ட நம் சமூகத் தலைமைகள் தொடர்ந்தும் பேரினவாதக் கட்ச்சிகளுக்குப் பின்னால் நானா நீயா? என்று போட்டி போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு செல்வதில் ஆவர்வம் காட்டி வருவதன் மர்மம்தான் என்ன? என்பது பற்றி நாம் ஆழமாக சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கின்றோம்.
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் : ஒரு முஸ்லிம் ஒரே குழியில் இரு தடவைகள் விழ மாட்டான். (புஹாரி)
இந்த நபி மொழியின் அடிப்படையில் பார்கின்றபோது யார் ஒருவரிடம் பல முறைகள் ஏமாற்றப்டுகின்றாரோ அவர் உண்மையில் ஒரு உண்மையான விசுவாசியாக இருக்க முடியாது என்பதனையே எம்மால் விளங்கிக் கொள்ள முடிகின்றது. ஒருவர் ஒருவரிடம் ஒரு முறை ஏமாற்றமடையலாம் ஆனால் தொடர்ந்தும் துணைபோவதும் இடையில் ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறிக் கொண்டு வெளியில் வருவதும் பிறகு மீண்டும் அவர்களுடனையே கூட்டு சேர்வதும் மீண்டும் ஐய்யோ ஏமாற்றி விட்டார்களே என்று கூறுவதையுமே தனது வழமையாக ஆக்கிக் கொண்டவர்கள் எவ்வாறு உண்மை விசுவாகிகளாக இருக்க முடியும்.
எனவே இப்படியான பெயர்தாங்கிகளை நம்பி பயன் ஏதும் இல்லை ஆகவே தூங்கியது போதும் தாமதமின்றி துயில் எழுவோம் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளத் தயாராகுவோம். அதற்க்கான ஒரு சிறந்த களமாக எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துவோம்.
யாரெல்லாம் நமதுத் தனித்துவத்துடன் நமது உரிமைகளுக்காக நாடளாவிய ரீதியில் களமிறங்குகின்றார்களோ அத்தகையவர்களுடன் கை கோர்த்து அவர்களின் பாதங்களை பாறாளுமன்றத்தில் தடம் பதிக்கச் செய்து நமது உரிமைகளைப் பாதுகாப்போம்.
அவ்வாறே யாரெல்லாம் பேரினவாத கட்ச்சிகளிடம் தங்களது சின்னங்களை அடமானம் வைத்துவிட்டு வீராப்பு பேசுகின்றார்களோ அத்தகையோர்களை நிராகரித்து அவர்களுக்கு நல்லதொரு பாடம் புகட்ட ஒன்றுபடுவோம்.
இப்படிக்கு
முனாப் நுபார்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக