சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸே இது உனது கடமை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ{
முஸ்லிம்கள் மத்தியில் கடந்த 5-6 மாதங்களுக்கு முன் நாளாந்தப் பேச்சுப் பொருளாக இருந்து வந்த தேசிய தலைமைத்தவம் ஒற்றுமை சகோதரத்தவம் அனைத்தும் கடந்த 2015-01-08- ம் திகதியுடன் முற்றுப் பெற்று விட்டதைப் பார்கின்றோம். இது ஒன்றும் எமக்குப் புதிதல்ல இது இலங்கை முஸ்லிம்களின் வரலாறு நெடுகிலும் அவ்வப்போது முஸ்லிம்களக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான சக்திகள் களம் இறங்கும் போது பேசப் பட்டு பிறகு வெகு விரைவிலேயே மறந்து விடுவதுதான் நமது வழக்கம்.
ஆதலால்தான் இன்றளவும் அதனை நம்மால் அடையப் பெற முடியாது போய் உள்ளது அவ்வாறே அதனை எவ்வாறு அடைந்து கொள்வது என்பதனை ஆராய்ந்து அறிந்து அதற்கான ஆக்கபூர்வமானதும் அறிவூபூர்வமானதுமான வழிதுமுறைகள் என்ன என்பதனையும் யாரும் முன் வைத்ததாகவும் தெரியவில்லை.
1986-87 காலப்பகுதியில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வாழுகின்ற கிழக்கு மாகானத்தில் விடுதலைப் புலிகளின் அராஜகங்களால் உந்தப்பட்ட அம்மாகான மக்கள் மறைந்த தலைவர் மர்ஹ{ம் அஷ்ரப் அவர்களின் தலைமையின் கீழ் அரசியல் ரீதியாக அணி திரண்டாhகள். அதன் பின் அந்தத் தலைமைத்துவம் தேசிய அளவில் அரசியல் ரீதியாக இரு பெரும் பிரிவுகளாக பிரிந்திருந்த நம் சமூகத்தை ஒரே தலைமையின் கீழ் ஒன்று படுத்தும் முயற்ச்சியில் கவனம் செலுத்தியதன் காரணமாக நாடளாவிய ரீதியில் கனிசமான மக்களின் அங்கிகாரத்தினைப் பெற்றது.
அப்படி அரசியலின் அடிப்படையில் இரு பெரும் பிரிவுகளாக பிரிந்திருந்த நம் சமூகத்தை ஒரே தலைமையின் கீழ் ஒன்று படுத்த வேண்டும் எனும் இலச்சியத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட அந்தத் தலைமைத்துவம் அவரின் மறைவுக்குப் பின் ஏற்கனவே இரண்டு பிரிவாக இருந்த நம் சமூகத்தை இன்று பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளாகப் பிரித்துள்ளது. ஆளுக்கு ஆள் கட்ச்சி என்றும் தலைவர் என்றும் வெளியாகத் தலைப்ட்டு விட்டார்கள்.
இந்நிலையில் மீண்டும் ஒரு முறை அரசியல் ரீதியில் ஒன்றுபடுத்துவதென்பது இதன் பிறகு சாத்தியமற்ற ஒன்றாகும் என்றே கருத வேண்டியுள்ளது.
அப்படியானால் அரசியலை முற்றாகத் தவிர்த்து ஆண்மீகத் தலைமையின் கீழ் ஒன்றுபடுத்தலாமா? என்றால் அதுவும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் மத்ஹபுகளின் பெயரால் பிரிந்திருந்த சமூகத்தை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஒன்று படுத்தவென்று உதயமான இயக்கங்கள் ஒன்று இரண்டாகி இரண்டு நான்காகி இன்று எத்தனை எத்தனையோ எண்ணில் அடங்கா குழுக்களாகப் பிரிந்தே காணப்படுகின்றது. ஏற்கனவே அரசியல் ரீதியாக இரு பெரும் பிரிவினர்களாகவும் ஆண்மீகரீதிPல் நான்கு மத்ஹப்புகளை உடையவர்களாகமு; இருந்த போதிலும் அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமை சகோதரத்துவம் மேலோங்கிக் காணப்பட்டன. இன்றோ நம் சமூகத்தின் நிலை மிகவும் பரிதாபகரமாகவுள்ளது இயக்கங்கள் மற்றும் கட்ச்சிகளின் பெயரால் ஏற்படும் முறுகல் நிலையும் குழுச் சண்டைகளும் நாளாந்தம் ஊடகங்களில் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அவர்களுக்குள்ளேயே புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் சகிப்புத் தன்மையும் இல்லாத அவர்களால் எவ்வாறு முழு சமூகத்தையும் வழி நடாத்த முடியும் எனும் நியாயமான கேள்விகள் எழுகின்றன.
இப்படிப்பட்ட நம் தலைவர்களினதும்; சமயக் குழுக்களினதும் தூரப்பார்வையற்ற இத்தகைய குருட்டுத்தனமான குறுகிய சிந்தனைகளின் வெளிப்பாடே இன்றைய நம் சமூகத்தின் தலைவிதியாக பரினாமம் கொண்டுள்ளது எனலாம்.
எது எப்படி இருந்தாலும் இந்த நாட்டில் மீண்டும் ஒரு முறை நமது பெறுமதியினைப் பதிவு செய்து கொள்வதற்கான அரியதோர் சந்தர்ப்பத்தினை வல்ல அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான் எனவே அவற்றின் மீது மண்ணை வாரி விடாது இவ்வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொள்ள முன் வருமாறு நம் தலைமைகளை வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
அதிலும் குறிப்பாக இந்த நாட்டு முஸ்லிம்களை முதற்தடவையாக நாடளாவிய ரீதியில் விழிப் ப10ட்டி அரசியல்மயப்படுத்திய சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது கடமையிலிருந்து எந்நிலையிலும விடுபட முடியாது எனவே மீண்டும் ஒரு முறை அது முழு முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப் படுத்த முன்வர வேண்டும் இல்லையேல் பொறுப்புதாரிகள் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
இப்படிக்கு
முனாப் நுபார்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக