அல்-ஹதீஸ் விளக்கம் (தொடர் - 04)
மனிதன் தனது ஆண்மாவை விற்பனை செய்து கொண்டிருக்கின்றான் - அல்-குர்ஆன் மனிதனுக்குச் சாட்சியாகும்.
இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மாலிக் அல் அஷ்அரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ சுத்தம் ஈமானின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும். தொழுகை என்பது ஒளியாகும். (ஸதகா)தர்மம் செய்வது ஆதாரமாகும். பொறுமை பிரகாசமாகும். குர்ஆன் உனக்கு சார்பான அல்லது எதிரான சாட்சியாகும். ஒவ்வொரு மனிதனும் காலையில் தனது ஆத்மாவுக்காக முயற்சி செய்து அதனை விடுதலை செய்யக் கூடிய அல்லது அழிக்கக் கூடிய விதத்தில் விற்பனை செய்யக்கூடியவனாக இருக்கின்றான். (ஸஹீஹ் அல்-முஸ்லிம்)
மேற்படி நபி வழிச் செய்தியின் சுத்தம் ஈமானின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும். தொழுகை என்பது ஒளியாகும். (ஸதகா)தர்மம் செய்வது ஆதாரமாகும். பொறுமை பிரகாசமாகும். என்பது வரை கடந்த எமது தொடர் 1-3 வரையிலான தொடர்களில் விளக்கி இருந்தோம் எனவே அதன் இறுதிப் பகுதியாகிய குர்ஆன் உனக்கு சார்பான அல்லது எதிரான சாட்சியாகும். ஒவ்வொரு மனிதனும் காலையில் தனது ஆத்மாவுக்காக முயற்சி செய்து அதனை விடுதலை செய்யக் கூடிய அல்லது அழிக்கக் கூடிய விதத்தில் விற்பனை செய்யக்கூடியவனாக இருக்கின்றான். என்பகைவள் பற்றி இந்தத் தொடரில் பார்ப்போம்.
குர்ஆன் அடியார்களுக்கான அல்லாஹ்வின் ஆதாரமாகும்
நபியவர்களின் கூற்று: (குர்ஆன் உனக்கு சார்பான அல்லது உமக்கெதிரான ஆதாரமாகும்) அதாவது யார் அல்லாஹ்வின் வேதத்திலிருந்து சிலவற்றைக் கற்று அதில் கடமையானவற்றை செயற்படுத்தியும் தடுக்கப்பட்டவற்றை விலக்கியும் அதன் வரையறைகளோடு நின்று கொள்கின்றாரோää அவருக்கு குர்ஆன் மறுமை நாளில் ஆதாரமாகவும சிபாரிசு செய்யக் கூடியதாகவும் இருக்கும்.
அபூ உமாமா அல்பாஹிலி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். (குர்ஆனை ஓதுங்கள். அது மறுமை நாளில் அதனை ஓதியவருக்கு சிபாரிசு செய்யக் கூடியதாக வரும். ஸஹ்ராவைன் என அழைக்கப்படும் சூறா பகராää ஆலு இம்ரான் ஆகிய இரு சூறாக்களையும் ஓதுங்கள். அவையிரண்டும் மறுமை நாளில் மேகமாக அல்லது இறக்கைகளை விரித்த பறவையாக வரும் அவை தமது தோழர்களை மூடிக்கொள்ளும். சூறா பகராவை ஓதுங்கள் அதனை எடுத்துக் கொண்டால் அது பரக்கத்தாக அமையும். அதனை விட்டுவிட்டால் கைசேதமாகும். அதனை எந்த சூனியக் காரியாலும் வெற்றி கொள்ள முடியாது) (ஸஹீஹ் முஸ்லிம்).
யார் அதன் படி செயற்பட வில்லையோ அதன் படி வழிநடக்கவில்லையோää இன்னும் அதனை எவர் பரகத்துக்காக மற்றும் இறந்து போனவர்களுகான வைபவங்களுக்காகவும் மாத்திரம் ஓதியுள்ளார்களோ. அப்போது குர்ஆன் அவருக்கெதிராக ஆதாரமாக அமையும். உலகத்திற்கு முன்னால் மறுமையில் அது அவருக்கு கடிவாளமிடும். இப்னு மஸ்ஊம் கூறும் போது: “யார் அதனை முதுகுக்குப் பின்னால் வைக்கிறாரோ அது அவரை நரகத்தின் பால் இட்டுச் செல்லும். மேலும்: மறுமை நாளில் குர்ஆன் வந்து அதன் தோழனுக்கு சிபாரிசு செய்யும். சுவர்க்கத்தின் பால் இட்டுச் செல்லும். அல்லது அவருக்கெதிராக சாட்சிகூறி அவரை நரகத்திற்கு இட்டுச் செல்லும். (ஜாமிஉல் உலூம் வல்ஹிகம்).
நிச்சயமாக உங்கள் முயற்சிகள் பலதரப்பட்டவையாகும்.
நபியவர்களின் கூற்று: ஒவ்வொரு மனிதரும் காலையில் தனது ஆத்மாவுக்காக முயற்சி செய்வதன் பால் விரைகிறார்கள். சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு அதனை விடுவிப்பவராக அல்லது அழிப்பவராக இருக்கின்றார்) ஒவ்வொரு மனிதரும் காலை மாலையை அடைகின்றார்கள். உலக விவகாரங்களுக்காக முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கலல்லர். அவர்களில் சிலர் தமது ஆத்மாவை இம்மை மறுமையின் தண்டனைகளிலிருந்து விடுவித்துக் கொள்கிறார்கள். அதாவது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவதனூடாக. இன்னும் சிலர் அந்த ஆத்மாவை அழித்து இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக்குகிறார்கள். அதாவது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்வதனூடாக அவனது கட்டளைக்கு மாற்றமாக நடப்பதனூடாக. அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் முயற்சிகள் பலதரப்பட்டவையாகும். (சூரத்துல் லைல்: 4).
இப்னு ரஜப் கூறுகிறார்: இந்த ஹதீஸ் ஒவ்வொறு மனிதனும் தனது ஆத்மாவை அழித்துக் கொள்ள அல்லது விடுவிக்க முயற்சிக்கின்றான். யார் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட முயற்சிக்கிறாரோ அவர் தனது ஆத்மாவை அல்லாஹ்வுக்காக விற்று அவனது தண்டனையிலிருந்து அதனை விடுவித்துக் கொண்டார். யார் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் முயற்சிக்கிறாரோ அவர் தனது ஆத்மாவை பொடுபோக்காக விற்று அதனை அல்லாஹ்வின் தண்டனைக்குரிய பாவங்களில் அழித்து விட்டார். ((ஜாமிஉல் உலூம் வல்ஹிகம்)
முடிவுரை.
மேற்படி ஹதீஸின் ஆரம்பம் சுத்தம் பற்றிக் குறிப்பிடுகின்றது சுத்தம் எனும் போது அது அகபுறச் சுத்தம்; ஆகிய இரண்டையும் குறிக்கும். இஸ்லாம் எவ்வாறு புறச் சுத்தத்தை வலியுறுத்துகின்றதோ அவ்வாறே அகச் சுத்தத்தையும் கடுமையாகவே வலியுறுத்துகின்றது.
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் நபித் துnhழர்கள் சகிதம் இரண்டு மண்ணறைகளைக் கடந்து சென்றார்;கள் அப்போ அந்த இரண்டு மண்ணறைவாசிகளும் வேதனைச் செய்யப்பட்டுக் கொண்டிருப்பது நபி (ஸல்) அவர்களுக்குக் காண்பிக்கப்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரும் வேதனைச் செய்யப்படுவது பெரும்பாவங்களுக்காக அன்றி சிறுபாவங்களுக்காவே என்று கூறிவிட்டு இருவருள் ஒருவர் சிறுநீர் கழித்து விட்டுச் சுத்தம் செய்யாத காரணத்திற்க்காகவும் மற்றவர் பிறரைப் பற்றிப் புறம் பேசித்திரிந்ததன் காரணத்திற்க்காகவுமே வேதனை செய்யப்படுகின்றார்கள் என்று கூறினார்கள்.
மேற்படி சம்பவத்திலிருந்து ஒருவர் சிறுநீர் கழித்து விட்டுச் சுத்தம் செய்யாது புறச்சுத்தத்தில் கவனயீனமாக இருந்ததற்க்காகவும் மற்றவர் பிறரைப் பற்றிப் புறம் பேசியதன் மூலம் அகச்சுத்தத்தில் கவனயீனமாக இருந்ததன் காரணமாகவும் அவர்கள் இருவரம் தண்டிக்கப்பட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.
தண்ணீர் நமது உடல் உறுப்புக்களையும் ஆடைகளையும் ஏனையவைகளையும் சுத்தம் செய்வது போன்று நமது உள்ளங்களைச் சுத்தம் செய்யும் வகையில் இறைத் துதியின்பால் ஆர்வமூட்டப் பட்டடுள்ளது. அடுத்து மனிதனை மானக்கேடான தீய செயல்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் தொழுகை அவனது வாழ்வில் ஒளியாக இருக்க வேண்டும்.
அவ்வாறே மேற்கூறப்பட்ட அத்தனையையும் மனிதன் செயல்படுத்துவதற்கு அவனுக்கு பொறுமை எனும் பேரொளி அவசியமாகும். இந்த இடத்தில் பொறுமை சூரியனுக்கு ஒப்பாகும். சூரியனின் ஒளி இன்றி சந்திரன் உட்பட எந்தவொன்றும் ஒளி பெற முடியாது அவ்வாறே பொறுமை எனும் பேரொளியின் துணை இன்றி அவனால் எதனையும் சாதிக்க முடியாது. அனைத்துக்கும் மிகவும் இன்றியமையாதத் தேவையாக இருப்பது பொறுமைதான் ஆதலால்தான் தொழுகையை ஒளி என்றும் பொறுமையை அதற்கும் மேலான பேரொளி என்றும் நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.
அடுத்ததாக மனிதன் தனது வாழ்க்கைப் பயணத்தில் தனது ஆண்மாவிற்குப் பாதகமான அல்லது சாதகமான வகையில் தன்னை விற்பனை செய்து கொண்டிருக்கின்றான் அவ்வாறு விற்பனை செய்யும் விடயத்தில் யார் அல்-குர்ஆனைத் தனது முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுகின்றார்களோ அவர்களுக்கு அல்-குர்ஆன் சாதகமாகச் சாட்சி கூறும் யார் அல்-குர்ஆனைப் புறக்கணித்து வாழ்தார்களோ அவர்களுக்கு அல்-குர்ஆன் பாதகமாக சாட்சி கூறும்.
முனாப் நுபார்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக