சனி, 18 அக்டோபர், 2014

நாம் சமுதாயச் சண்டைக் கோழிகளே உங்களைத்தான்.

நாம் சமுதாயச் சண்டைக் கோழிகளே உங்களைத்தான்.

•    எங்கிருந்து எப்படி எதைக் கொண்டு ஆரம்பிப்பது?

•    பேரினவாத பாசிச கும்பல்களின் இஸ்லாமிய விரோத போக்கைக் கொண்டா?

•    அல்லது அரக்கன் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கும் அரசைக் கொண்டா?

•    அல்லது அதிகாரத்திற்காகவும் அற்ப்ப சலுகைகளுக்காகவும் சமூகத்தைப் பலிக்கடாவாக்கி பொளப்பு நடாத்திக்  கொண்டிருக்கும் நம் அரசியல் தலைமைகளைக் கொண்டா?

•    அல்லது சுவர்க்கத்திற்க்கு உரிமை கொண்டாடி சமூகத்தைப் பிளவுக்கு மேல் பிளவுப் படுத்தி அழகு பார்த்துக் கொண்டிருக்கும் நம் சமூக இயக்கங்கள் குழுக்களைக் கொண்டா?

•    அல்லது அனைத்தையும் கை கட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்மீக அறிஞர்களைக் கொண்டா?

என்று ஒன்றும் புறியாத ஒரு குழப்பம் நிறைந்த தெளிவற்ற நிலையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

பொது பள சேனாவின் சர்வதேச மாநாடு கடந்த 28-09-2014 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொழும்பு சுகதாச அரங்கில் நடைபெற்றதை நாமறிவோம் குறித்த மாநாட்டைப் பற்றிப் பலரும் பலதரப்பட்டக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். என்றாலும் மேற்ப்படி மாநாட்டைப் பொறுத்த வரை அங்கு ஆற்றப்பட்ட உரைகளைப் பார்க்கின்ற போது அந்த மாநாடு குறிபாக முஸலிம்களுக்கெதிரான ஒன்று கூடல் எனும் கருப்பொருளைக் கொண்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

மேற்படி மாநாட்டில் உரையாற்றிய ஞானசாரர் உட்ப்பட அனைத்துப் பேச்சாளர்களும் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் முன்வைத்தக் கருத்துக்கள் அத்தனையிலும் முஸ்லிம் விரோதப் போக்கு தாராளமாகச் செல்வாக்குச் செலுத்தியதைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. குறித்த மாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகள் அத்தனையிலும் எந்த அளவுக்கு இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான இனவாதத்தைக் கக்க முடியுமோ அந்த அளவுக்குக் கக்கிக் கொட்டினார்கள். அல்-குர்ஆனிலும் அல்-ஹதீதிலும் இல்லாததையெல்லாம் இருப்பதாகக் கூக்குரலிட்டார்கள்.

அந்தக் கூக்குரல்களிலிருந்து அதன் கதாநாயகனின் குளறுபடிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அவரால் பிழையாக புறியப்பட்டுடதுடன் திரிபுபடுத்தப்பட்டு கருத்து மோசடி செய்யப்பட்டு முன் வைக்கப்பட்ட சில நபி வழிச் செய்தி மற்றும் அல்-குர்ஆன் வசனங்களை மட்டும் இங்கே சுட்டிக்காட்டுகின்றோம்.இவைகளுக்கு நம் சமுதாய சண்டைக் கோழிகளில் எத்தனை பேர் பதிலழித்துள்ளார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
ஞான சாரரின் ஞானசூண்யங்கள்.

1.    புஹாரி எனும் நூலில் பதிவாகியுள்ளது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறி இஸ்லாத்தை ஏற்கும் வரை மனிதர்களுடன் போராடுமாறு நான் அல்லாஹ்வால் கட்டளைப் பிறப்பிக்கப் பட்டுள்ளேன் என்றும் அவ்வாறு யார் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்களோ அவர்களின் உயிரும் உடமைகளும் பாதுகாப்பு பெறும் என்றும் முகம்மத்; (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்;. இதற்க்கு உங்கள் பதில் என்ன? இதனை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? இது இங்கு செல்லுபடியாகுமா? இல்லையா? இதனை நீங்கள் இங்கு செயல்படுத்துகின்றீர்களா ? இல்லையா?

2.    அல்-குர்ஆன் 2:193 ல் முஸ்லிம்களே அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் தவிர ஏனைய அனைத்து மதங்கள் மற்றும் அவற்றை வழிபடுபட்டு பூமியை நாசம் செய்பவர்கள் இல்லாதொழிந்து ஒரே மார்க்கம் இஸ்லாம் எனும் நிலை தோன்றும் வரை அவர்களுக்கு எதிராக கலகத்தையும்; போரையும் ஏற்படுத்துங்கள் என்று கூறப்பட்டுள்ளது. தயவு செய்து இது உங்கள் குர்ஆனில் இருக்கின்றதா? இல்லையா? என்பதை எமக்குத் தெளிவு படுத்துங்கள் அப்போது எம்மால் சகவாழ்க்கையை ஏற்படுத்த முடியும் அப்போது நாம் எமது இழம் சகோதரிகளையும் இன்னும் வேண்டிய அனைத்தையும் விட்டுத் தருவோம்.

3.    அல்-குர்ஆன் 9: 05 ல் புனித மாதங்கள் நான்கும் முடிந்ததன் பிறகு இணை வைத்து வணங்குவோர்களை கண்ட கண்ட இடத்தில் வெட்டி வீழ்தி கொலை செய்யுங்கள் அவர்களைப் பிடித்துக் கட்டி வைய்யுங்கள். அவர்கள் செல்கின்ற இடமெல்லாம் அவர்களை அடித்துத் துண்புறுத்துங்கள்.அதன்போது அவர்கள் அச்சம் கொண்டு அவர்கள் தங்களது மார்க்கத்தை விட்டு விலகி அல்லாஹ்வின் மார்க்கதைப் பின்பற்றுவவதற்கு இணங்குவார்களேயானால் அவர்களை மாத்திரம் தெரிவு செய்து விட்டு விடுங்கள். ஏனய அனைவரையும் கொலை செய்யுங்கள் அல்லாஹ் மிக மன்னிப்போனும் கிருபையுடையோனுமாவான்.

4.    அல்-குர்ஆன் 2 : 216 ல் ஜிஹாத் என்பது அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் முஸ்லிம் அல்லாதார்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் புனிதப் போராகும் இது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாய கடமையாக்கப் பட்டுள்ளது. அதனை நீங்கள் வெறுத்த போதிலும் அது உங்களுக்கு கட்டாயக் கடமையாக்கப் பட்டுள்ளது.

5.    அல்-குர்ஆன் 05: 33 ல் அல்லாஹ்வுக்கும் அவனுடைய பிரதிநிதிக்கும் எதிராகவும் அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் விடுத்து வேறு கடவுளையோ  அல்லது மதத்தையோ வழிபடுகின்ற பாவிகளுக்கான தண்டனை அவர்களைக் கொலைசெய்தல் அல்லது சிலுவையில் அறைதல் அல்லது அவர்களின் ஒரு பக்கத்து கையையும் அதற்க்கு எதிர் பக்கத்துக் காலையும் வெட்டுதல் அல்லது அவர்களை பூமியில் நாடு கடத்துதல் ஆகும் இவ்வாறான இந்த தண்டனை மூலம் அவ்வாறானவர்களை இவ்வுலகில் இழிவுக்கு உட்படுத்தலாம்.

மேற்படி ஞானசாரர் அவர்களின் புலப்பல்களில் எந்த அளவு நபி மொழிகளையும் இறை வசனங்களையும் பாமர மாற்று மதத்தவர்களின் உள்ளங்களில் இனவாதத் தீயை பற்ற வைக்கும் நோக்கில் தவறாக சித்தரித்துள்ளார் என்பதனை நன்றாகக் காணக்கூடியதாக உள்ளது.

இவற்றை அனைத்து ஊடகங்களும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருந்தது. இவை அத்தனை நடந்தும் நம் சமுதாயச் சண்டைக் கோழிகள் வாய் திறந்ததாகத் தெரியவில்லை ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் அவர்களின் பெயர்களும் பிரயோகிக்கப்பட்டதன் காரணமாக ஒரு சில கண்டண அறிக்கைகளுடன் மாத்திரம் மறைந்து விட்டார்கள்.

சமுதாயச் சண்டைக் கோழிகளே சுவர்க்கத்தின் ஏகபோக உரிமையாளர்களே இஸ்லாத்தின் அறங்காவலர்களே உங்களைத்தான் கேட்குகின்றேன் எங்கே நீங்கள் இவை ஒன்றும் உங்களுக்குத் தெரியவில்லையா?

சமுதாயத்திற்குள் சமூக உயர்வுக்காகவும் சமய மேண்பாட்டுக்காகவும் என்று தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்கள் குழுக்கள் மற்றும் அற்பணிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தனி நபர்கள் மனித பலவீனத்திற்குட்பட்டு தவறுதலாக சற்றேனும் சறுக்கி விட்டால் அல்லாஹ்வே அதனைப் பொருட்படுத்தாது மன்னிப்பழிப்பேன் என்று கூறியிருந்தும் இஸ்லாத்தின் பண்பாடுகளுக்கப்பால் சென்று இஸ்லாம் போதிக்கும் சகோதரத்துவம் புறிந்துணர்வு சகிப்புத் தண்மை விட்டுக் கொடுப்பு போன்றவைகள் அத்தனையையும் புறக்கணித்து விட்டு மேடை போட்டு ஒருவரையொருவர் ஆக்ரோஷமாக அநாகரியமான வார்த்தைகளைப் பயன்படுத்தி மிகவும் கீழ்தரமான முறையில் வாய் கிழிய கத்துவீர்களே உங்களது அந்த ஆக்ரோஷம் அன்னிய காபிர்கள் விடயத்தில் எங்கே ஓடி ஒழிந்ததோ. 

இதனை நாம் கூறும் போது சிலர் நாம் கண்டணம் தெரிவித்தோம் விவாதத்திற்கு அழைப்பு விடுத்தோம் என்று கூறுவார்கள் நாம் இங்கு அவற்றைப் பற்றி பேசவில்லை மாறாக இவ்வளவெல்லாம் சமூகத்துடன் சண்டையிடும் நாம் நம் சகோதர முஸ்லிமைப்பற்றிப் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கும் நாம் ஏன் பொது பளசேனாவின் கேள்விகளுக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக பதிலளிக்கக் கூடாது என்றுதான் கேட்குகின்றோம்.

முனாப் நுபார்தீன்

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...