சனி, 4 அக்டோபர், 2014

முன் வருவார்களா?


முன் வருவார்களா?
 
அன்புடையீர்
 
அஸ்ஸலாமு அலைக்கும்

புனிதமிகு தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளைத் தீர்மானிப்பதங்கு காலம் நேரம் இடம் ஆகிய மூன்று விடயங்கள் சம்மந்தப்பட்டிருத்தல் வேண்டும் என்பதனை நாம்  ஹஜ்ஜுப் பெருநாளை எவ்வாறு தீர்மாணிப்பது எனும் தலைப்பில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களின் ஊடாக வாசகர்களுக்கு விளங்கப்படுத்தி இருந்தோம். அதில் எமக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது.

என்றாலும் நாம் சிறுச் சிறுக் குழுக்களாகவும் இயக்கங்களாகவும் பிரிந்து வேறு வேறு தினங்களில் பெருநாள் அனுஷ்டிப்பதென்பது அனுமதிக்க முடியாத ஒரு செயலாகும் என்றே கருதுகின்றோம். ஏனெனில் இத்தகைய செயலானது எமது அறிவு ஐக்கியம் மற்றும் சகோதரத்துவம் போன்றவற்றின் பலவீனத்தினையே உலகுக்கு அறிவிப்பததாக உள்ளது.

அவ்வாறே உலக முஸ்லிம்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச தலைமை எதுவும் கிடையாது என்பதனையும் அது உலகுக்கு உணர்த்துகின்றது.

எனவே இதன்பிறகாவது பிறைவிடயத்தில் ஒரு சிறந்த ஒன்றுபட்ட முடிவுக்கு வருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன் வருவார்களா?

முனாப் நுபார்தீன்.

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...