திங்கள், 13 அக்டோபர், 2014

ஞானசாரரின் ஞான சூண்யம் - 2


ஞானசாரரின் ஞான சூண்யம் - 2

இலங்கையில் அண்மையில் பூதாகரமாகத் தோன்றியிருக்கும் பொதுபள சேனா எனும் பாசிச அமைப்பு இலங்கை  ஒரு பல்லின மக்கள் வாழும் மக்கள் ஆட்சியைக் கொண்ட ஜனநாயக நாடு என்பதனை இல்லாது செய்து அதனை ஒரு பௌத்த நாடாகப் பிரகடணப்படுத்துவத்ற்கு அண்மைக் காலமாகப் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

அவர்களின் கணவுகளெல்லாம் சவுதி அரேபியாவில் போன்று ஆட்சியாளர்களுடன் பௌத்த மதத்தலைவர்களும் ஒன்றிணைந்து ஆட்சியாளர்களை மதத்தலைவர்கள் வழிநடாத்த வேண்டும் என்பதுதான். இதனை ஞானசார அவர்கள் ஒரு முறை ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலழிக்கும் போது பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

ஆதலால்தான் இவர்கள் எடுத்ததெற்கெல்லாம் சவூதி அரேபியாவையே உதாரணம் கூறுவதைப் பார்க்கின்றோம்.

சவுதி அரேபியாவுக்குள் எம்மால் ஒரு சிலையையேனும் கொண்டு செல்ல முடியுமா?

அதனை எமக்கு அனுமதிப்பார்களா?

அங்கு எமக்கு மதச்சுதந்திரம் இருக்கின்றதா?

அதனை எம்மால் கேட்கவாவது உரிமை இருக்கின்றதா?

இந்த எமது நாட்டில் நாம் முஸ்லிம்களுக்குத் தேவைக்கு அதிகமாகவே மதசுதந்திரம் வழங்கியுள்ளோம் அல்லவா?

இன்னும் எமது பெண்கள் அங்கு பணிப்பெண்களாகச் சென்று அவர்களின் கலாச்சாத்தின் அடிப்படையில் ஆடை அணிய வேண்டும் என்றால் ஏன் இங்குள்ள முஸ்லிம்கள் எமது கலாச்சாரத்தின் அடிப்படையில் ஆடை அணியக் கூடாது? போன்ற பல்வேறு கேள்விகளை சவூதி அரேபியாவுடன் ஒப்பிட்டுக் கேட்கின்றார்கள்.

இந்த ஞான சூண்யங்கள் முதலில் ஒரு விடயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் அதாவது சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை அங்குள்ள பூர்விகர்கள் தனி முஸ்லிம்களே அங்கு பல்லினங்கள் கிடையாது அங்கு பல்லினம் என்பது அடிமையையொத்த தற்காலிகக் கூலித்தொழிலாளிகளே. அவர்களுக்கு அங்கு குடியுரிமையோ வாக்குரிமையோ அரசியல் அதிகாரங்களோ கிடையாது.

அத்துடன் அங்கு மக்கள் ஆட்ச்சி கிடையாது அங்கு நடைபெற்றுக் கொண்டிருப்பது மண்ணர் ஆட்ச்சியாகும் ஆதலால்தான் அது சவூதி அரேபிய இராஜ்யம் என்று அழைக்கப்படுகின்றது அங்கு இரண்டு பிரதான குடும்பங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றது அந்த இரண்டு குடும்பத்தினர்களும் அவர்களைச் சார்ந்த அவர்களுக்கு வேண்டியவர்களும்தான் அந்த நாட்டை ஆட்சி செய்து வருகின்றார்கள்

அந்த இரண்டு குடும்பங்களாவன.

1.    ஆலி சுஊத் இவர்கள்தான் அந்த நாட்டின் அரசர்களாகவும் இழவரசர்களாகவும் கவர்ணர்களாகவும் இருப்பார்கள் சவூதி அரேபியாவுக்கு இந்தப் பெயரே அவர்களின் குடும்பப் பெயர்தான்.அத்துடன் ஏனையக் குடும்பங்களைச் சார்ந்த கற்றறிந்தவர்கள் நீதியரசர்களாகவும் அமைச்சர்களாகவும் பிராந்திய பிரதேசச் செயலாளர்களாக மற்றும் தலைவர்களாகவும் மேலதிகாரிகளாகவும் இருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதே.

2.    ஆலி சேக் இவர்கள்தான் அந்த நாட்டின் பிரதானமான மார்க்க அறிஞர்கள் பரம்பரையாவார்கள் 

மேற்படி இந்த இரண்டு குடும்பங்களும் இணைந்தே அந்த நாட்டை ஆழ்கின்றார்கள் அதற்கான பிரதான காரணம் அந்த நாட்டின் அரசியல் யாப்பு மனிதர்களால் உருவாக்கப்பட்ட பல குறைபாடுகளையும் முறண்பாடுகளையும் கொண்டதன்றி படைப்பாளனாகிய அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்-குர்ஆனும் அதனை மனிதகுலத்திற்குத் தெளிவுபடுத்தியவரான மாநபி (ஸல்) அவர்களுடைய வழிகாட்டலுமாக இருப்பதுதான் என்பதனையும் இந்த ஞான சூண்யங்கள் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

ஞானசார அவர்களே அப்படி உங்களுக்கு ஏதும் இறைவனால் அருளப்பட்ட யாப்பு இருக்கின்றதா? அதன் அடிப்படையில்தான் ஆட்சி செய்கின்றீர்களா? அப்படி என்றால் இந்த நாட்டில் இத்தனை ஆயிரம் சாராயக் கடைகள் சூதாட்ட நிலையங்கள் விபச்சார விடுதிகள் இன்னும் இது போன்ற எத்தனை எத்தனையோ அநாச்சார நிலையங்கள் இவைகள் அனைத்தும் எவ்வாறு எங்கிருந்து வந்தது இவை அனைத்தும் பௌத்த மதத்தைப் பாதுகாக்க வேண்டிய உங்கள் சமூகத்தைச் சார்ந்தவர்கதானே செய்கின்றார்கள் உங்கள் அரசுதானே அவைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எனவே பல்லின சமூகங்களை பூர்வீகக் குடிகளாகக் கொண்ட மக்களாட்சியை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி புரியும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு தனியொரு சமூகத்தைக் கொண்ட மண்ணராட்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாட்டை உதாரணம் காட்டுவதென்பது வடிகட்டிய முட்டாள் தனமாகும்.

ஏன் இவர்களுக்கு அயலில் உள்ள பல்லினம் வாழும் முஸ்லிம் நாடாகிய பங்களாதேஸ் தெரியவில்லையா? அங்கு பௌத்தர்கள் சிறுபாண்மையாக வாழவில்லையா? அவர்களுக்கு அந்த நாட்டில் மதச்சுதந்திரம் வழங்கப்படவில்லையா? பௌத்த வழிபாட்டுத்தளங்கள் நிர்மாணிக்கப்படவில்லையா? பௌத்த மதத்தலைவர்கள் இல்லையா? அத்தனையும் இருக்கின்றன. இவ்வாறிருக்க அவர்கள் ஏன் எடுத்ததெற்கெல்லாம் சவூதி அரேபியாவை உதாரணம் காட்ட வேண்டும். இது இவர்களின் அறியாமையின் வெளிப்பாடில்லையா? சிந்தித்துப் பாருங்கள்.
ஞானசார அவர்களே அல்லாஹ்வின் ஒளியை வாயால் அணைக்கலாம் என்று நினைக்கின்றீர்களா? அது உங்கள் முட்டாள்தனத்தின் அதி உச்சகட்டமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் : மேலும்ää எவன் இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்ட நிலையில்ää அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? அன்றியும்ää அநியாயக்கார சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்ää ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும்ää அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். (இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும்ää மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டுää அவனே தன் தூதரை நேர்வழியுடனும்ää சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான்.(அல்-குர்ஆன்: 61: 7-9)

முனாப் நுபார்தீன்

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...