ஞானசாரரின் ஞான சூண்யம் - 05
திருவாளர் ஞானசாரர் அவர்களின் ஞான சூண்யம் பற்றி இதற்கு முன்னய எமது 3ம் மற்றும் 4 ம் தொடர்களில்; இல.1 லிருந்து 12 வரை சுட்டிக் காட்டி இருந்தோம் எனவே இந்தத் தொடரில் இல. 13 லிருந்து தருகின்றோம்.
13 அல்-குர்ஆன் 9: 05 ல் புனித மாதங்கள் நான்கும் முடிந்ததன் பிறகு இணை வைத்து வணங்குவோர்களை கண்ட கண்ட இடத்தில் வெட்டி வீழ்தி கொலை செய்யுங்கள் அவர்களைப் பிடித்துக் கட்டி வைய்யுங்கள். அவர்கள் செல்கின்ற இடமெல்லாம் அவர்களை அடித்துத் துண்புறுத்துங்கள்.அதன்போது அவர்கள் அச்சம் கொண்டு அவர்கள் தங்களது மார்க்கத்தை விட்டு விலகி அல்லாஹ்வின் மார்க்கதைப் பின்பற்றுவவதற்கு இணங்குவார்களேயானால் அவர்களை மாத்திரம் தெரிவு செய்து விட்டு விடுங்கள். ஏனய அனைவரையும் கொலை செய்யுங்கள் அல்லாஹ் மிக மன்னிப்போனும் கிருபையுடையோனுமாவான். என்று கூறப்பட்டுள்ளதாக திருவாளர் ஞான சூண்யம் கூறுகின்றார்.
அட ஞான சூண்யமே உனது அறியாமைக்கு அளவே கிடையாதா? எங்கிருந்து இவற்றையெல்லாம் கற்பனை செய10தீர். நீர் கூறுவது போன்று ஒன்றும் கிடையாது உமக்கு அல்-குர்ஆனைப் புறிந்து கொள்ள முடியாமைக்கு நாம் பொறுப்பாக முடியாது. எம்மைப் படைத்த இறைவன்தான் உம்மையும் படைத்திருக்கின்றான் எமக்குள்ள மூளைதான் உமக்கும் வழங்கப்பட்டுள்ளது அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு உமது மனோ இச்சை உமக்கு இடம் கொடுக்காமைக்கு நாம் என்ன செய்வது.
திருவாளர் ஞான சூண்யம் அவர்களே நீர் கூறுவது போன்று உலக இஸ்லாமிய வரலாற்றில் எங்காவது நடைபெற்றதுண்டா? உலகில் எங்காவது உம்மைப் போன்று இணைவைப்பவர்கள் இணை வைப்பவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக முஸ்லிம்களால் கொலை செய்யப்பட்டார்களா? கட்டி வைக்கப்பட்டார்களா? அடித்துத் துன்புறுத்தப்பட்டார்களா? இல்லையே.
நீர் கூறுவது போலன்றி அந்த வசனத்தின் விளக்கத்தினை சரியாகப் புறிந்து கொள்ள வேண்டுமாக இருந்தால் அதன் முன் பின் உள்ள வசனங்கள் என்ன சொல்கின்றது என்று பார்க்க வேண்டும். எனவே அதனை முதலாவது வசனத்திலிருந்து தருகின்றேன் உமக்கு மூளை இருந்தால் மூளையைக் கொண்டும் உள்ளத்தைக் கொண்டும் விளங்க முயற்சி செய்யவும்.
அல்லாஹ் கூறுகின்றான் : 9:1. (முஃமின்களே!) முஷ்ரிக்குகளில் (இணைவைத்து வணங்குபவர்களில்) எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்களோää அவர்களிடமிருந்து அல்லாஹ்வும்ää அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்.
9:2. நீங்கள் நான்கு மாதங்கள் (வரையில்) இப் பூமியில் சுற்றித் திரியுங்கள்; நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதையும்ää நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை இழிவு படுத்துவான் என்பதையும் நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
9:3. அல்லாஹ்வும்ää அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (செய்திருந்த உடன்படிக்கையை) விட்டும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்; எனவே நீங்கள் (இணைவைப்பதிலிருந்து மனந்திருந்தி) விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும்; நீங்கள் (சத்தியத்தை) புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை இருக்கிறது என்று நீர் நன்மாராயம் கூறுவீராக.
9:4. ஆனால்ää நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில்ää எதையும் குறைத்து விடாமலும்ää உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதாää துல்ஹஜ்ஜுää முஹர்ரம்ää ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள்ää அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள்ää ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டுää தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும்ää கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
9:6. (நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால்ää அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்
மேற்படி வசனங்களில் முதல் வசனம் (முஃமின்களே!) முஷ்ரிக்குகளில் (இணைவைத்து வணங்குபவர்களில்) எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்களோää அவர்களிடமிருந்து அல்லாஹ்வும்ää அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர். என்று கூறுகின்றது அப்படியாயின் மேற்படி இரு தரப்புக்கும் மத்தியில் ஒரு உடன்படிக்கை நடைபெற்றிருக்கின்றது என்பது தெளிவாகின்றது.
அதே நேரம் வசனம் 4 ல் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில்ää எதையும் குறைத்து விடாமலும்ää உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர என்று கூறப்பட்டிருப்பதிலிருந்து ஏற்கனவே இரு தரப்பும் செய்து கொண்ட உடன்படிக்கையை எதிர் தரப்பினர்களில் சிலர் மீறி உள்ளார்கள் ஆதலால் அல்லாஹ்வும் அவனது தூதரும் குறித்த உடன்படிக்கையிலிருந்து வலகிக் கொண்டார்கள் எனவே முஷ்லிம்களும் அதிலிருந்து விலகிக் கொள்வதில் தவறில்லை என்பது தெளிவாகின்றது.
என்றாலும்; மேற்படி வசனம் 4ன் இறுதியில் ஒப்பந்த்தை முறிக்காது நடந்து கொண்டவர்களுக்கு எவ்வித தீங்கும் செய்யாது அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - என்ற கட்டளையும் இடப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
இவ்வாறு உடன்படிக்கைக்கு இஸ்லாம் மதிப்பளிப்பதனால்தான் உடன்படிக்கையை முறிக்காதவர்களின் உரிமைகளை மதிக்குமாறும் அதனை மீறி அநியாயம் அக்கிரமம் போன்ற செயற்களில் ஈடுபடுவோர்களை மாத்திரம்அடையாளம் கண்டு தண்டிக்குமாறும் அடுத்து வருகின்ற வசனத்தில் கூறப்பட்டிரகின்றது.
அவ்வாறே வசனம் 6ல் (நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால்ää அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்குப் பாதுகாப்பாக அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள். என்று கூறி மனித நேயம் மனிதாபிமானம் ஆகியவற்றை போதிக்கின்றது.
நீர் குறிப்பிடுவது போன்று இணை வைப்பவர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்ற ஒட்டு மொத்தமாக வெட்டி வீழ்த்துங்கள் என்று பொருள் கொண்டால் வசனம் 6 ல் (நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால்ää அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக என்றும் அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்குப் பாதுகாப்பாக அனுப்பி வைப்பீராக என்றும் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள் என்றும் கட்டளை இடப்பட்டிருப்பதன் பொருள் என்ன சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? ஞான சூண்யம் அவர்களே?
முனாப் நுபார்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக