شرح الأربعين النووية لفضيلة دكتورة ريم بنت عبد المحسن السويلم
அரபயீன நவவிய்யா விழக்கவுரை கலாநிதி ரீம் அப்துல் முஹ்சின்
அஸ்-சுவைலம்
الحديث الأول
عن أَمِيرِ المُؤمِنينَ أَبي حَفْصٍ عُمَرَ بْنِ الخَطَّابِ رَضيَ اللهُ تعالى عنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ يَقُولُ: إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلى اللهِ وَرَسُوله فَهِجْرَتُهُ إلى اللهِ وَرَسُوله، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لِدُنْيَا يُصِيْبُهَا، أَو امْرأَة يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلى مَا هَاجَرَ إِلَيْهِ)رواه البخاري ومسلم
(அல்-ஹதீஸ்) நபிமொழி : 01
ஹப்ஸாவின் தந்தை விசுவாசிகளின் தலைவர் உமர் பின் கத்தாப்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன் : செயல்கள் அனைத்தும் (நிய்யத்) எண்ணங்களைப் பொறுத்ததே. எனவே நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ணியது உண்டு. எனவே ஒருவன் அல்லாஹ்வுக்காகவும் - அவனுடைய தூதருக்காகவும் ஹிஜ்ரத் மேற்கொண்டால் அது அல்லாஹ்வுக்காகவும் - அவனுடைய தூதருக்காகவும் மேற்கொள்ளப்பட்ட ஹிஜ்ரத்தேயாகும். இன்னும் எவன் ஒருவனுடைய ஹிஜ்ரத் உலக நன்மையை அடைவதற்காகவோ அல்லது ஒருபெண்ணைத் திருமணம் செய்வதற்காகவோ என்றிருந்தால் அவனது ஹிஜ்ரத்தானது – அவன் தற்காக ஹிஜ்ரத் செய்தானோ அதற்காகவே ஆகும்!ääää நூல்: புகாரிää முஸ்லிம்
الشرح
قوله:" إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ"
الأعمال جمع عمل، ويشمل أعمال القلوب وأعمال النطق، وأعمال الجوارح، فتشمل هذه الجملة الأعمال بأنواعها.
فالأعمال القلبية: مافي القلب من الأعمال: كالتوكل على الله، والإنابة إليه، والخشية منه وما أشبه ذلك.
والأعمال النطقية: ماينطق به اللسان، وما أكثر أقوال اللسان.
والأعمال الجوارحية: أعمال اليدين والرجلين وما أشبه ذلك.
ا"لأعْمَالُ بِالنِّيَّاتِ"
النيات: جمع نية وهي: القصد.
وشرعاً: العزم على فعل العبادة تقرّباً إلى الله تعالى، ومحلها القلب، فهي عمل قلبي ولاتعلق للجوارح بها.
விளக்கவுரை:
நபி(ஸல்) அவர்களின் கூற்று : செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்ததே.
அஃமால் (செயற்கள்) எனும் அரபுச் சொல் அமல் (செயல்) எனும் சொல்லின் பண்மைச்சொல்லாகும். அது உள்ளத்தின் செயல்கள் வார்த்தைகளின் செயற்பாடுகள் மற்றும் அனைத்து அவயங்களதும் செயற்களை உள்ளடக்கும். அவ்வாறே இவ்வாக்கியமானது செயற்களையும் அவற்றின் வகைகளையும் உள்ளடக்கியுள்ளது.
உள்ளத்தின் செயற்களாவன : உள்ளத்திற்கும் குறிப்பிட்ட சில செயற்பாடுகள் இருக்கின்றன. அதாவது அல்லாஹ்மீது பொறுப்பு சாற்றுதல்ää அவன்பால் மீழுதல் மற்றும் அவனுக்கு அஞ்சி நடத்தல் போன்ற செயற்கள் உள்ளத்தின் செயற்களாகும்.
வார்த்தைகளின் செயற்களாவன : நாவினால் மொழிதலைக் குறிக்கும் நாவின் வார்த்தைகள்தான் மிக அதிகமானவையாகும்
அவயங்களது செயற்கள் : இரு கைää இரு கால்கள் மற்றும் அவை போன்ற ஏனைய அவையங்களின் செயற்களைக் குறிக்கும்.
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே:
நிய்யாத் (எண்ணங்கள்) என்ற அரபுப்பதம் நிய்யத் (எண்ணம்) என்ற அரபுச் சொல்லின் பண்மைச் சொல்லாகும். அதாவது நோக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்.
சரீஆவின் (மார்க்கம்) பார்வையில் எண்ணம்: அல்லாஹ்வின் நெருக்கத்தை அடையும் வகையிலான ஒரு செயலை செய்வதற்கு உறுதி கொள்ளுதலாகும். அதன் இடம் உள்ளமாகும் இது உள்ளம் சார்ந்த செயலாகும் அவையங்கள் இதனுடன் சம்மந்தப்படமுடியாது.
و"َإِنَّمَا لِكُلِّ امْرِئٍ " أي لكل إنسانٍ" مَا نَوَى" أي ما نواه.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எதை எண்ணினானோ அதுவே கிடைக்கும்
والمقصود من هذه النية تمييز العادات من العبادات، وتمييز العبادات بعضها من بعض.
تمييز العادات من العبادات
مثاله:
- أولاً:الرجل يأكل الطعام شهوة فقط، والرجل الآخر يأكل الطعام امتثالاً لأمر الله عزّ وجل في قوله: (وَكُلُوا وَاشْرَبُوا )(الأعراف:الآية31) فصار أكل الثاني عبادة، وأكل الأول عادة.
- ثانياً: الرجل يغتسل بالماء تبرداً، والثاني يغتسل بالماء من الجنابة، فالأول عادة، والثاني: عبادة، ولهذا لو كان على الإنسان جنابة ثم انغمس في البحر للتبرد ثم صلى فلا يجزئه ذلك، لأنه لابد من النية، وهو لم ينو التعبّد وإنما نوى التبرّد.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இந்த எண்ணத்தின் நோக்கம் வழமையான நடவடிக்கைகளிலிருந்து வணக்கங்களைப் பிரித்தறிதலும் வணக்கங்களிலும் சிலதிலிருந்து மற்றும் சிலதைப் பிரித்தறிதலுமாகும்.
வணக்கங்களிலிருந்து வழமையான நடைமுறைகளைப் பிரித்தறிதலானது :
உதாரணம்:
முதலாவது: ஒரு மனிதன் உணவை தன் விருப்பத்திற்காக மட்டும் உட்கொள்கின்றான் இன்னொரு மனிதன் “’உண்ணுங்கள்ää குடியுங்கள்” (அல்-அஃராப் :31) எனும் வல்லாஹ்வின் கட்டளைக்காக என்று உண்ணுகின்றான் எனவே இரண்டாவது நபரின் உண்ணல் வணக்கமாகவும் முதலாவது நபரின் உண்ணல் வழமையான நடைமுறையாகவும் அமைந்து விடுகிறது.
இரண்டாவது : ஒரு மனிதன் உஷ்ணத்தைக் குறைப்பதற்காகக் குளிக்கின்றான் இரண்டாம் நபர் பெருந்தொடக்கை நீக்குவதற்காகக் குளிக்கின்றான் முதலவது வழமையான நடைமுறையாகவும் இரண்டாவது வணக்கமாகவும் அமையும். ஆகவே மனிதன் பெருந்தொடக்குடையவனாக இருக்கும் நிலையில் அவன் உஷ்ணத்தைத் தவிர்ப்பதற்காக என்று கடலில் மூழ்கிக் குளித்து விட்டு பிறகு தொழுதால் அவனின் தொழுகை செல்லாதுää ஏனெனில் எண்ணம் மிக முக்கியமானதாகும் அவன் வணக்கத்தை எண்ணவில்லை உஷ்ணத்தைத் தவிர்ப்பதைத்தான் அவன் எண்ணியிருந்தான்.
تمييز العبادات بعضها من بعض
مثاله:
رجل يصلي ركعتين ينوي بذلك التطوع، وآخر يصلي ركعتين ينوي بذلك الفريضة، فالعملان تميزا بالنية، هذا نفل وهذا واجب.
واعلم أن النية محلها القلب، ولايُنْطَقُ بها إطلاقاً،لأنك تتعبّد لمن يعلم خائنة الأعين وما تخفي الصدور، والله تعالى عليم بما في قلوب عباده، ولهذا لم يَرِدْ عن رسول الله ولاعن أصحابه رضوان الله عليهم أنهم كانوا يتلفّظون بالنيّة ولهذا فالنّطق بها بدعة يُنهى عنه سرّاً أو جهراً.
வணக்கங்களில் சிலதிலிருந்து மற்றும் சிலதைப் பிரித்தறிதலானது :
உதாரணம்:
ஒரு மனிதன் அபரிமித வணக்கம் எனும் எண்ணத்தில் இரண்டு ரகஅத்துக்கள் தொழுகின்றான். அடுத்தவன் கடமையான வணக்கத்தை எண்ணியவனாக இரண்டு ரகஅத்துக்கள் தொழுகின்றான். இந்த இரு வணக்கங்களும் எண்ணத்தின் அடிப்படையிலேயே பிரித்தறியப்படும் அதாவது ஒன்று நபிலாகவும் மற்றது கடமையானதாகவும் உள்ளன.
நிச்சயமாக எண்ணத்தின் இடம் உள்ளமாகும் அது அறவே மொழியப்படக்கூடாது. ஏனெனில் நீ கண்கள் செய்யும் மோசத்தையும்ää உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் நன்கு அறிந்தவனையே வணங்குகிறாய். அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவனாவான். ஆதலால்தான் நபி (ஸல்) அவர்களிடமிருந்தோ அல்லது அல்லாஹ்வின் பொருத்தத்திற்குரிய அன்னாரி தோழர்களிடமிருந்தோ அவர்கள் நிய்யத்தை (எண்ணம்) வாயால் மொழிந்தார்கள் என்ற செய்திகள் எதுவும் பதிவாகவில்லை. ஆகவே நிய்யத்தை (எண்ணம்) மொழிதல் பித்அத் ஆகும் அது சப்தமாகவிருந்தாலும் சரி சப்தமில்லாது இருந்தாலும் சரி அது தடுக்கப்பட்டதேயாகும்.
"وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى" هذه هي نيّة المعمول له، والناس يتفاوتون فيها تفاوتاً عظيماً، حيث تجد رجلين يصلّيان بينهما أبعد مما بين المشرق والمغرب أو مما بين السماء والأرض في الثواب، لأن أحدهما مخلص والثاني غير مخلص.
وتجد شخصين يطلبان العلم في التّوحيد، أو الفقه، أو التّفسير، أو الحديث، أحدهما بعيد من الجنّة والثاني قريب منها، وهما يقرآن في كتاب واحد وعلى مدرّسٍ واحد. فهذا رجل طلب دراسة الفقه من أجل أن يكون قاضياً والقاضي له راتبٌ رفيعٌ ومرتبة ٌرفيعة،والثاني درس الفقه من أجل أن يكون عالماً معلّماً لأمة محمدٍ صلى الله عليه وسلم ، فبينهما فرق عظيم. قال النبي صلى الله عليه وسلم "مَنْ طَلَبَ عِلْمَاً وَهُوَ مِمَّا يُبْتَغَى بِهِ وَجْهُ اللهِ لا يُرِيْدُ إِلاِّ أَنْ يَنَالَ عَرَضَاً مِنَ الدُّنْيَا لَمْ يَرِحْ رَائِحَةَ الجَنَّةِ " رواه أحمد وابن ماجه وأبوداود.
‘உண்மையாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ணியதே உண்டு” இதுதான் செயற்களுக்குரிய (நிய்யத்) எண்ணமாகும். இதில்தான் அநேகமான மனிதர்கள் பெரும் அளவில் தவறிவிடுகின்றார்கள். தொழுகின்ற இரண்டு மனிதர்களைப் போல் அவர்களின் தொழுகைக்கு மத்தியில் நன்மையில் கிழக்கிற்கும் மேற்கிற்கும் போன்ற அல்லது வானத்திற்கும் பூமியிற்கும் போன்ற இடைவெளி காணப்படும். ஏனெனில் அவர்களிருவரில் ஒருவனில் எண்ணம் கலப்பற்றதாக இருந்தது மற்றவவனுடைய எண்ணம் கலப்பற்றதாக இல்லை.
ஏகத்துவம் அல்லது மார்க்கச் சட்டக் கலை அல்லது அல்-குர்ஆன் விரிவுரை அல்லது நபி மொழிகளைக் கற்கக்க கூடிய இரண்டு நபர்களில் ஒருவன் சுவர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானவனாகவும்ää மற்றயவன் சுவர்க்கத்திற்கு மிகவும் தூரமானவனாகவும் காணப்படலாம். இருவரும் ஒரே நூலையே படிக்கின்றார்கள்ää ஒரே ஆசிரியரிடமே கற்கின்றார்கள் அவர்களுள் ஒருவன் தான் ஒரு காழியாக (உயர் அதிகாரி) வேண்டும் ஒரு காழியிற்கு உயர்ந்த ஊதியமும் உயர் அந்தஸ்தும் கிடைக்கின்றன எனும் நோக்கத்தில் மார்க்கச்சட்டக் கலையைக் கற்கின்றான் மற்றவன் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களுடைய உம்மத்தினர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் எனும் நோக்கில் மார்க்கச்சட்டக் கலையைக் கற்கின்றான் அவர்கள் இருவருக்கும் இடையே மிகப் பெரும் வேறுபாடு காணப்படுகின்றன.
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வி திருப்திக்காக கற்கப்பட வேண்டி கல்வியை எவன் ஒருவன் இந்த அற்ப உலகை அடைந்துகொள்ள வேண்டும் என்று கற்கின்றானோ அவன் சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமாட்டான்” (நூற்கள்: அஹ்மத்ää இபுனு மாஜாää அபூதாவூத்)
ثم ضرب النبي صلى الله عليه وسلم مثلاً بالمهاجر فقال:
"فَمَنْ كَانَتْ هِجرَتُهُ "الهجرة في اللغة: مأخوذة من الهجر وهو التّرك.
وأما في الشرع فهي: الانتقال من بلد الكفر إلى بلد الإسلام.
அடுத்ததாக நபி (ஸல்) அவர்கள் ஒரு ஹிஜ்ரத் செய்பவனை உதாரணம் காட்டியுள்ளார்கள்: அதாவது எவரது ஹிஜ்ரத் ‘அமைகின்றதோ” என்ற வார்த்தையின் மூலம். ஹிஜரத் என்ற வார்த்தை ஹஜர என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும் அரபு மொழியில் ஹஜர என்ற சொல்லின் பொருள் விட்டு விடுதல் என்பதாகும். சரீஆவின் அடிப்படையில் காபிரான ஒரு நாட்டை விட்டு இஸ்லாமிய நாட்டுக்கு குடிபெயர்தகை; குறிக்கும்.
مسألة: هل الهجرة واجبة أو سنة؟
الجواب: أن الهجرة واجبة على كل مؤمن لايستطيع إظهار دينه في بلد الكفر، فلايتم إسلامه إذا كان لايستطيع إظهاره إلا بالهجرة، وما لايتم الواجب إلا به فهو واجب. كهجرة المسلمين من مكّة إلى الحبشة، أو من مكّة إلى المدينة.
ஒரு வினா : ஹிஜ்ரத் செய்தல் கட்டாயமா? அல்லது சுன்னத்தா?
பதில்: காபிரான நாட்டில் தனது இஸ்லாத்தினை பகிரங்கப்படுத்த முடியாத போது ஹிஜரத் செய்வது கட்டாயமாகும் ஏனெனில் ஹிஜ்ரத் செய்தாலேயன்றி அதனை பகிரங்கப்படுத்த முடியாது எனும் போது அவனது இஸ்லாம் முழுமை பெற முடியாது. எந்தவொன்று இல்லாது ஒரு கடமை முழுமை பெற முடியாதோ அந்தவொன்றும் கடமையாகும். முஸ்லிம்கள் மக்காவிலிருந்து ஹபஷாவிற்கு அல்லது மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ததைப் போன்று.
"فمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللهِ وَرَسُوْلِهِ فَهِجْرَتُهُ إلَى اللهِ وَرَسُولِهِ "كرجل انتقل من مكة قبل الفتح إلى المدينة يريد الله ورسوله،أي: يريد ثواب الله، ويريد الوصول إلى الله كقوله تعالى: (وَإِنْ كُنْتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ)(الأحزاب: الآية29) إذاً يريد الله: أي يريد وجه الله ونصرة دين الله، وهذه إرادة حسنة.
ويريد رسول الله: ليفوز بصحبته ويعمل بسنته ويدافع عنها ويدعو إليها والذبّ عنه،ونشر دينه، فهذا هجرته إلى الله ورسوله،
எனவே யாருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் - அவனுடைய தூதருக்காகவும் என்றிருக்கின்றதோ அது அல்லாஹ்வுக்காகவும் - அவனுடைய தூதருக்காகவுமே இருக்கும். அதாவது ஒரு மனிதன் மக்கா வெற்றிக்கு முன்னால் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நாடியவனாக மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்ததைப் போன்று அதாவது அல்லாஹ்வின் வெகுமதியை நாடி : ''ஆனால்ää நீங்கள் அல்லாஹ்வையும்ää அவன் தூதரையும்ää மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால்ää 33:29. என்று அல்லாஹ் சொல்வதைப் போன்று.
இங்கு அல்லாஹ்வை விரும்புதல் என்பது அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு உதவுதலையும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தினையும் விரும்புதலாகும். இத்தகைய விருப்பம் சிறந்ததாகும்.
அல்லாஹ்வின் தூதரை விரும்புதல் என்பது :
அவரது நட்பின் மூலம் வெற்றியடைதலாகும் அதாவது நபிவழியில் செயல்படல்ää அவர்களது சுன்னாவைப் பாதுகாத்தல் அதன்பால் மக்களை அழைத்தல் அவரது மார்க்கத்தினைப் பரப்புதல் போன்றவைகளாகும். எனவே இவைகள் அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் செய்கின்ற ஹிஜ்ரத்தாகும்.
وهنا مسألة: بعد موت الرسول صلى الله عليه وسلم هل يمكن أن نهاجر إليه عليه الصلاة والسلام؟
والجواب: أما إلى شخصه فلا، ولذلك لايُهاجر إلى المدينة من أجل شخص الرسول صلى الله عليه وسلم ، لأنه تحت الثرى، وأما الهجرة إلى سنّته وشرعه صلى الله عليه وسلم فهذا مما جاء الحث عليه. وذلك مثل: الذهاب إلى بلدٍ لنصرة شريعة الرسول والذود عنها. فالهجرة إلى الله في كل وقت وحين، والهجرة إلى رسول الله لشخصه وشريعته حال حياته، وبعد مماته إلى شريعته فقط.
نظير هذا قوله تعالى: ( فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرسول صلى الله عليه وسلم ِ)(النساء: الآية59) إلى الله دائماً، وإلى الرسول صلى الله عليه وسلم نفسه في حياته، وإلى سنّته بعد وفاته. فمن ذهب من بلدٍ إلى بلد ليتعلم الحديث، فهذا هجرته إلى الله ورسوله،
ஒரு கேள்வி :
நபி (ஸல்) அவர்களின் வபாத்திற்குப் பிறகு நாம் நபி (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் செய்யலாமா?
பதில்: அவர் ஒரு நபர் என்றவகையில் இன்று மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய கூடாது. ஏனெனில் அவர் (உயிருடன் இல்லை) மண்ணுக்கடியில் உள்ளார். என்றாலும் அவர்களது சுன்னத்திற்காகவும் சரீஆவுக்காகவும் ஹிஜ்ரத் செய்யலாம் அதன் மீது ஆசையும் காட்டப்பட்டுள்ளது. இது நபி (ஸல்) அவர்களின் சரீஆவிற்கு உதவுவதற்காகவும் அதனைப் பாதுகாப்பதற்காகவும் ஒரு ஊருக்குச் செல்வதைப் போன்றதாகும். அவ்வாறே அல்லாஹ்விற்காக ஹிஜ்ரத் செய்தல் எப்பொழுதும் எவ்வேளையிலும் உண்டு. ஆனால் நபி (ஸல்) அவர்களையும் அவர்களது சரீஆவையும் நோக்கிய ஹிஜ்ரத் அவர்கள் உயிரோடு இருக்கும் போது மட்டுமேயாகும். அவர்கள் வபாத்தானதன் பின் அன்னாரது சரீஆவின் பால் மாத்திரமே ஹிஜ்ரத் செய்யலாம்.
" فمَنْ كَانَتْ هِجْرَتُهُ لِدُنْيَا يُصِيْبُهَا "بأن علم أن في البلد الفلاني تجارة رابحة فذهب إليها من أجل أن يربح، فهذا هجرته إلى دنيا يصيبها، وليس له إلا ما أراد. وإذا أراد الله عزّ وجل ألا يحصل على شيء لم يحصل على شيء.
"أَو امْرأَة يَنْكِحُهَا " من هاجر من بلد إلى بلد لامرأة يتزوّجها، بأن خطبها وقالت لاأتزوجك إلا إذا حضرت إلى بلدي فهجرته إلى ماهاجر إليه.
எவன் ஒருவனுடைய ஹிஜ்ரத் உலகத்திற்காகவும் அதன் நன்மையை அடைவதற்காகவும் என்றிருந்தால் :
அதாவது ஒருவன் இன்ன ஊரில் இலாபகரமான ஒரு வியாபாரம் இருப்பதாக அறிந்து இலாபம் பெற வேண்டும் எனும் நோக்கில் அங்கு செல்கின்றான் இந்த அவனது ஹிஜ்ரத்தானது உலக நன்மையை அடைவதையே நோக்காகக் கொண்டதாகும். அவன் நாடியதைத் தவிர அவனுக்கு வேறொன்றும் கிடைக்கப்போவதில்லை. இன்னும் அல்லாஹ் அவனுக்கு எதுவும் கிடைக்கக் கூடாதென்று நாடினால் அப்போது அவனுக்கு எதுவும் கிடைக்காது.
அல்லது ஒருபெண்ணைத் திருமணம் செய்வதற்காக” (என்பதன் பொருள்) ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்கா ஒரு ஊரிலிருந்து வேறொரு ஊருக்குச் செய்யும் ஹிஜ்ரத்தாகும்ää உதாரணமாக ஒருவனுக்குத் திருமணம் பேசப்பட்டப் ஒரு பெண் அவனை அவனது ஊரைவிட்டுவிட்டு தனது ஊருக்கு வந்தால்தால்தான் திருமணத்திற்கு சம்மதிப்பதாகக் கூறியமைக்காக ஒருவன் மேற்கொள்ளும் ஹிஜ்ரத் இந்த ஹிஜ்ரத் அவன் எதற்காக மேற்கொண்டானோ அதற்காகவே ஆகும்.
من فوائد هذا الحديث:
1. هذا الحديث أحد الأحاديث التي عليها مدار الإسلام، ولهذا قال العلماء:مدار الإسلام على حديثين: هما هذا الحديث، وحديث عائشة:" مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلِيْهِ أَمْرُنَا فَهُوَ رَدّ" فهذا الحديث عمدة أعمال القلوب، فهو ميزان الأعمال الباطنة، وحديث عائشة: عمدة أعمال الجوارح، مثاله:
رجل مخلص غاية الإخلاص، يريد ثواب الله عزّ وجل ودار كرامته، لكنه وقع في بدع كثيرة. فبالنظر إلى نيّته:نجد أنها نيّة حسنة. وبالنظر إلى عمله: نجد أنه عمل سيء مردود، لعدم موافقة الشريعة.
இந்த நபி மொழியின் சில பயன்கள்.
இந்த நபிமொழயானது இஸ்லாம்; சுழன்றுகொண்டிருக்கும் நபி மொழிகளுள் ஒன்றாகும். எனவேதான் இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றார்கள்: இரண்டு நபி மொழிகள் மீதே இஸ்லாத்தின் சுழற்ச்சி உள்ளது. அவ்விரண்டில் ஒன்று இந்த நபி மொழியாகும்ää மற்றயது அண்ணை ஆயிஷா (ரழி) அன்ஹா அவர்கள் அறிவிக்கும் “’ யார் ஒரு செயலைச் செய்து அதில் எமது கட்டளை இல்லையோ? அது நிராகரிக்கப்படும்” என்ற நபி மொழியாகும்.
இந்த நபி மொழி உள்ளங்களின் செயற்பாடுகளின் அடிப்படையாகும்ää எனவே இது மறைவான செயற்பாடுகளின் அளவுகோலாகக் கொள்ளப்படும்.
அண்ணை ஆயிஷா (ரழி) அன்ஹா அவர்களின் அறிவிப்பு அவயங்களின் செயற்பாடுகளின் அடிப்படை பற்றியதாகும்.
உதாரணமாக : மிகவும் தூய எண்ணங்கொண்ட ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நற்கூலியையும் சங்கைமிகு சுவர்க்கத்தையும் எதிர்பார்க்கின்றான்ää என்றாலும் அதிகமான நூதன செயல்களில் வீழ்ந்து விடுகின்றான் அவனது எண்ணத்தின் அடிப்படையில் பார்க்கும் போது அது சிறந்த எண்ணமாக இருக்கின்றதுää அதே வேளை அவனது செயற்பாட்டின் அடிப்படையில் பார்க்கும் போது அது மிக மோசமான நிராகரிக்கப்படதக்கதாக காணப்படுகின்றது காரணம் அது சரீஆவுடன் உடன்பட்டதாக இல்லை.
2. من فوائد الحديث: أنه يجب تمييز العبادات بعضها عن بعض، والعبادات عن المعاملات لقول النبي صلى الله عليه وسلم : إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ ولنضرب مثلاً بالصلاة، رجل أراد أن يصلي الظهر، فيجب أن ينوي الظهر حتى تتميز عن غيرها.
2. நபி மொழியின் சில பயன்;கள் : நபி (ஸல்) அவர்களின் செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்ததே எனும் கூற்றிற்கிணங்க வணக்கவழிபாடுகளில் சிலதில் இருந்து சிலதைப் பிரித்தறிதல் கட்டாயமாகும். இன்னும் நடைமுறைகளிலிருந்து வழிபாடுகளையும் பிரித்தறிதல் அவசியமாகும் இதற்கு நாம் ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். அதாவது ஒரு மனிதன் ழுஹர் தொழ விரும்புகின்றான் என்றால் அவன் ஏனையத் தொழுகைகளிலிருந்து அதனை வேறுபடுத்திக் காட்டும் வகையில் ழுஹர் தொழுவதாக எண்ணுதல் கட்டாயமாகும்.
3. من فوائد الحديث : الحثّ على الإخلاص لله عزّ وجل، لأن النبي صلى الله عليه وسلم قسّم الناس إلى قسمين:
قسم: أراد بعمله وجه الله والدار الآخرة.
وقسم: بالعكس، وهذا يعني الحث على الإخلاص لله عزّ وجل .
والإخلاص يجب العناية به والحث عليه، لأنه هو الركيزة الأولى الهامة التي خلق الناس من أجلها، قال تعالى: (وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْأِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ) (الذاريات:56)
3. நபி மொழியின் சில பயன்கள்: அல்லாஹ்வுக்காக என்று மட்டும் கலப்பற்ற எண்ணம் பற்றி தூண்டப்பட்டுள்ளது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இங்கு மனிதர்களை இருபிரிவாகப் பிரிக்கின்றார்கள்:
ஒரு பிரிவு: தனது கல்வியின் மூலம் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் மறுமையின் வீட்டையும் விரும்புபவர்கள்.
மற்ற பிரிவு: அதற்கு நேர் மாற்றமானதாகும். இங்குதான் அல்லாஹ்வுக்காக என்று கலப்பற்ற தூய எண்ணம் வலியுறுத்தப்படும்.
கலப்பற்ற தூய எண்ணம் பற்றி தூண்டப்படுதலும் அதனைக் கவனித்தலும் கட்டாயமாகும். ஏனெனில் மனிதன் படைக்கப்பட்டதன் மிக முக்கிய நோக்கம் அதுவாகும் அல்லாஹ் கூறுகின்றான்: நான் மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை. (51: 56)
4. ومن فوائد الحديث : أن الهجرة هي من الأعمال الصالحة لأنها يقصد بها الله ورسوله، وكل عمل يقصد به الله ورسوله فإنه من الأعمال الصالحة لأنك قصدت التقرّب إلى الله والتقرب إلى الله هو العبادة.
5. நபி மொழியின் சில பயன்கள்: நிச்சயமாக ஹிஜ்ரத் நற்செயற்களில் நின்றும் உள்ளதாகும்ää ஏனெனில் அதன் மூலம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நோக்கமாகக் கொள்ளப்படுகின்றதுää அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நோக்கமாகக் கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு செயலும் நிச்சயமாக நற்செயற்களில் நின்றும் உள்ளதாகும் நிச்சயமாக நீ அல்லாஹ்வுடைய நெருக்கத்தை நாடினால் அல்லாஹ்வின் பக்கம் நெருங்குதலே வணக்கமாகும்.
مسألة: هل الهجرة واجبة أم مستحبة ؟
الجواب: فيه تفصيل ،إذا كان الإنسان يستطيع أن يظهر دينه وأن يعلنه ولايجد من يمنعه في ذلك، فالهجرة هنا مستحبة. وإن كان لايستطيع فالهجرة واجبة وهذا هو الضابط للمستحبّ والواجب.
والله أعلم
وصلى الله وسلم على نبينا ورسولنا محمد وعلى آله وصحبه أجمعين
والحمد لله رب العالمين
ஒரு வினா: ஹிஜ்ரத் செய்தல் கட்டாயமா அல்லது விரும்பத்தக்கதா?
பதில்: அது விரிவாக விளக்கப்படல் வேண்டும். அதாவது மனிதன் தனது மார்க்கத்தை பகிரங்கப்படுத்தவும்ää அதனை அறியப்படுத்தவும் முடியும்ää அதனை யாரும் தடுப்பதில்லை என்றால் இந்நிலையில் ஹிஜ்ரத் விரும்பத்தக்கதாகும். இவைகள் முடியாது என்றிருந்தால் அப்போது ஹிஜ்ரத் கட்டாயமாகும் கட்டாயத்திற்கும் ää விரும்பத்தக்கதற்கும் இதுவே அடிப்படையாகும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
அல்லாஹ் நம் நபியும் தூதருமாகிய முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் தோழர்கள் அனைவர் மீதும் அமைதியும் கருனையும் அருள்வானானகவும்
அனைத்துப் புகழும் அகிலத்தாரின் அதிபதி அல்லாஹ்வுக்கே உரித்தாகும்.
ترجمها: نبار الدين بن منابو (قاضي للصلح)
مدير
مركز التوعية الإسلامية بسريلانكا.
பணிப்பாளர்
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக