இது கடந்த ஹிஜ்ரி 13-01-1435 க்கு சரியாக 16-11-2013 ம்திகதி சனிக்கிழமை சவூதி அரேபியா ரியாத் நகரில் இயங்கிக்கொண்டிருக்கும் அமீரா நூரா பெண்கள் பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரீம் அப்துல் முஹ்ஸின் அஸ்-சுவைலிம் அவர்கள் இலங்கை திகாரிய சுமைய்யா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கிய ஹதீஸ் விளக்கவுரையின் தமிழாக்கமாகும்.
தமழாக்கம் : முனாப் நுபார்தீன் - ஜே.பி
ஹதீஸ் விளக்கம்
இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மாலிக் அல் அஷ்அரி அறிவிக்கின்றார்கள்: “ சுத்தம் ஈமானின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும். தொழுகை என்பது ஒளியாகும். (ஸதகா)தர்மம் செய்வது ஆதாரமாகும். பொறுமை பிரகாசமாகும். குர்ஆன் உனக்கு சார்பான அல்லது எதிரான சாட்சியாகும். ஒவ்வொரு மனிதனும் காலையில் தனது ஆத்மாவுக்காக முயற்சி செய்து அதனை விடுதலை செய்யக் கூடிய அல்லது அழிக்கக் கூடிய விதத்தில் விற்பனை செய்யக்கூடியவனாக இருக்கின்றான். (ஸஹீஹ் அல்-முஸ்லிம்)
ஹதீஸின் நிலை
இந்த நபிமொழி பல முக்கிய விடயங்களை உள்ளடக்கியுள்ளது. அது தூய்மையின் பால் கட்டளையிடுகிறது. உள்ளங்கள் அiதியடையக்கூடிய இறை தியானத்தின் பால் ஆர்வமூட்டுகிறது. பிறருக்கு நன்மை பயக்கும் வகையில் தர்மத்தின் பால் தூண்டுகிறது. தௌஹீதின் (ஏகத்துவம்) பிற்பாடு மிக உன்னதமான வழிபாடுகளில் ஒன்றாகிய தொழுகையின் பால் ஆர்வமூட்டுகிறது. பொறுமையின் பால் கட்டளையிடுகிறது. அல்லாஹ்வின் வேதத்தின் பால் கவனம் செலுத்துமாறும் அதன் படி செயற்படுமாறும் தூண்டுதலளிக்கிறது. அதே போல் இறைவழிகாட்டலின் பிரகாரம் செயற்படுவதன் மூலம் ஆத்மாவை பாதுகாத்துக் கொள்ள பிரயத்தனம் செய்யுமாறு தூண்டுகிறது.
சுத்தம் ஈமானின் பாதியாகும்
இறைதூதர் (ஸல்) அவர்களின் வார்த்தை (சுத்தம் ஈமானின் பாதியாகும்).
அத்-தஹர்: இதன் முதல் எழுத்து ழம்மு செய்யப்படுமாயின் அது செயலைக் குறிக்கும். அது மூலச் சொல்லாகும். அதன் முதல் எழுத்து பத்ஹ{ செய்யப்படுமாயின் அது சுத்தம் செய்யக் கூடிய நீரைக் குறிக்கும். அது தஹாரா என்ற அறபுச் சொல்லிலிருந்து பிரிந்ததாகும். அது புலன்களுக்குத் தெரியக்கூடிய தெரியாத அழுக்குகளிலிருந்து தூய்மையாகுதல் எனப் பொருள்படுகிறது. ஷரீஆ ரீதியாக தஹ{ர் என்பது சிறிய பெரிய தொடக்குகளை அகற்றுவதற்கான செயற்பாடு என்ற கருத்தைத் தருகிறது.
ஷத்ர்: என்பது ஒன்றின் பகுதியாகும். ஷதர்துஹ{: நான் அதனை இரு பகுதியாக்கினேன். ஷாதிருஹ{ மாலஹ{: பணத்தை பங்கு பிரிப்பவன். அத்தஹ{ரு ஷத்ருல் ஈமான் என்ற கூற்றின் அர்த்தத்தில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொள்கின்றனர். அவற்றுள் சிலவற்றை இங்கு தருகிறேன்.
1. தஹருக்கான கூலி ஈமானுக்கான கூலியின் அரை பங்கோடு இரட்டிப்பாக்கப்படுகிறது. இது பிரதியின் நேரடியான அர்த்தத்திலிருந்து விலகிச் செல்கிறது. அதற்கு ஆதாரமும் இல்லை.
2. இங்கு தஹர் என்பதன் கருத்து: பாவங்கள் பெரும்பாவங்களை விட்டுவிடுவதன் மூலம் தூய்மைப் பெறுவதாகும். ஏனெனில் இதே கருத்தில் இன்னொரு குர்ஆனிய வசனமும் காணப்படுகிறது. (அவர்கள் தூய்மையான மனிதர்கள்- நஹ்ல் 56) இங்கு தூய்மை பெறுவது என்பது ஓரினச் சேர்க்கை போனற பெரும்பாவங்களிலிருந்து தூய்மை பெறுவது என்பதாகும். அதன் படி ஈமான் என்பது இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை நன்மைகளை செய்வதும் விலக்கப்பட்டவைகளை விட்டுவிடுவதுமாகும். விலக்கப் பட்டவைகளை விட்டுவிடுவது என்பது தூய்மை பெறுவதாகும். இதனால் அது ஈமானின் பாதியாகிறது. ஆனால் இக்கருத்து “வுழு ஈமானின் பாதியாகும்” என்ற அறிவிப்பின் மூலம் நிராகரிக்கப்படுவது போல் கருத்து ரீதியாகவும் நிராகரிக்கப்படுகிறது.
3. தஹ{ர் என்பது சிறிய பெரிய தொடக்குகளை நீர் அல்லது தயம்மும் செய்வதன் மூலம் நீக்குவதாகும். ஈமான் என்பது தொழுகையைக் குறிக்கிறது. ஈமான் தொழுகை என்ற அர்த்தத்திலும் வந்துள்ளது. அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ் உங்கள் ஈமானை வீணாக்குபவனல்ல” (பகரா: 143) இதன் கருத்து நீங்கள் பைதுல் முகத்திசைப் பார்த்து தொழுத தொழுகையை அல்லாஹ் வீணாக்குபவனல்ல என்தாகும். தொழுகை சுத்தமின்றி நிறைவேறாது. இந்த கருத்தின் படி சுத்தம் (தஹ{ர்) அதன் ஒரு பகுதியாகும். இமாம் நவவி குறிப்பிடும் போது : இந்தக் கூற்று மிக நெருக்கமான கூற்றாகும். ஏனக் குறிப்பிடுகின்றார்கள். (முஸ்லிமின் விளக்கம் பாடம் சுத்தம். )
4. தஹர் என்பதன் அர்த்தம் வுழு செய்வதாகும். அது சிறிய பாவங்களை மன்னிக்கச் செய்கிறது. ஈமான் பெரும்பாவங்களை மன்னிக்கச் செய்கிறது அதனால் ஈமானின் பாதியாக ஆகிவிட்டது. இது ஹதீஸின் வெளிப்படையான கருத்திலிருந்து தூரச் செல்கிறது. அதனை நியாயப்படுத்த முடியாது.
5. சொல் செயல் ஆகியவற்றில் ஈமானின் பண்பு யாதெனில் உள்ளத்தை தூய்மைப்படுத்துகிறது. நீரினால் சுத்தம் செய்வது உடம்பை சுத்தப் படுத்துகிறது. இதனால் ஈமானின் பண்புகள் இரு வகைப்படுகின்றன. ஒன்று வெளிப்பகுதியை சுத்தப்படுத்துவது மற்றையது உட்பகுதியை சுத்தப் படுத்துவதாகும். அவை இரண்டும் இரு பகுதிகளாகும்.
அல்லாஹ்வை நினைவுபடுத்துவதன் பால் தூண்டுதல்:
இறைதூதர் (ஸல்) கூறினார்கள்: (அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும்.)
இந்த ஹதீஸ் இந்த சிறந்த வார்த்தைகளுக்கு உயர்ந்த கூலியை உள்ளடக்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை மறுமை நாளில் ஒரு அடியானின் தராசியை பாராமாக்குகிறது. அல்லாஹ் எம்மீது சொறிந்துள்ள உள்ளக வெளியக அருள்களுக்காக அவனுக்காக சிறந்த புகழை உள்ளடக்கியுள்ளது. அதே போன்று சுப்ஹானல்லாஹ் என்ற வார்த்தைக்கு உயர்ந்த கூலி உண்டு. சில அறிஞர்கள் கூறினார்கள்ää: அவை இரண்டினதும் கூலியை அளவிட்டால் அது வானம் பூமிக்கு இடைப்பட்டவற்றை நிரப்பி விடும்.
தஸ்பீஹ்: (துதித்தல்)
குறைபாடுகளை விட்டும் அல்லாஹ்வை தூய்மைப்படுத்துவதை உள்ளடக்கியுள்ளது. இவ்விரு வார்த்தைகள் பால் ஆர்வமூட்டும் பல ஹதீஸ்கள் காணப்படுகின்றன. அதில் அபூ ஹ{ரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “இரண்டு வார்த்தைகள் அவை நாவுக்கு மிக இலகுவானவை. தராசியில் மிக பாரமானவை. அல்லாஹ்வுக்கு விருப்பமானவை. அவை தான்: சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹிää சுபஹானல்லாஹில் அழீம்” என்றார்கள். (புகாரிää முஸ்லிம்).
தராசி (மறுமைநாளை) விசுவாசம் கொள்வது கட்டாயமாகும்.
இறைதூதரின் கூற்று: “அவை தராசியை நிரப்பும்”
தராசியை ஈமான் கொள்வது அஹ்லுஸ் ஸ{ன்னா வல்ஜமாஅத்தின் நம்பிக்கைக் கோட்பாடாகும். அபூ ஜவ்பர் அல் தஹாவி குறிப்பிடும் போது: ( மறுமை நாளின் மீண்டெழுதல்ää செயல்களின் கூலிää காண்பித்தல்ää விசாரணைää பட்டோலை வாசிக்கப்படுதல் கூலி கொடுத்தலும் தண்டனை வழங்கலும்ää சிராத் (நேரான பாதையில் செல்லல்) தராசி (நன்மை தீமையை அளவீடு செய்தல்) ஆகியவற்றை நாம் விசுவாசம் கொள்கின்றோம்) .(தஹவிய்யா-456). இது குர்ஆனில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறும் போது: “நாம் மறுமைய நாளைக்காக நீதி எனும் தராசியை வைத்;துள்ளோம். ஒரு ஆத்மா எவ்விதத்திலும் கடுகளவேனும் அநியாயம் செய்யப்பட மாட்டாது. விசாரணை செய்ய நாம் போதுமானவர்கள்”. (அன்பியா-47) எனக் கூறுகிறான்.
இன்னும் அல்லாஹ் கூறும் போது: “எவரது தராசு கணதியாக இருக்கிறதோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள். எவரது தராசு கணதி குறைந்ததாக இருக்கிறதோ அவர்கள் தான் தங்களது ஆத்மாக்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியவர்கள். அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். (முஃமினூன்:102-103). ஏன்று கூறுகின்றான்.
மேலும்: “அந்நாளில் கூலிகளை நிறுவை செய்வது உண்மையாகும். எவரது தராசு பாரமா இருக்கிறதோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள்.” (அஃராப் 8).
சுன்னாவில் இதனை உறுதிப்படுத்துவதற்காக இறைதூதர் (ஸல்) கூறினார்கள்: “அல்லாஹ் மறுமை நாளில் படைப்புகளுக்கு முன்பாக எனது உம்மத்திலிருந்து ஒருவனை வெளியெடுப்பான். அவனுக்கு 99 பதிவுகள் விரித்துக் காட்டப்படும். ஒவ்வொரு பதிவும் பார்வையின் நீளமாக இருக்கும். பின்னர் கூறுவான்: இதில் ஏதாவது ஒன்றை நீர் நிராகரிக்கிறாயா? எனது பாதுகாவல்களான எழுத்தாளர்கள் (பதிவாளர்கள்) உனக்கு அநீதி இழைத்தார்களா? அவன் இல்லை இறiவா எனக் கூறுவான். உனக்கு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா? என இறைவன் கேட்பான். அதற்கு அவன் இல்லை இறைவா என்பான். அதற்கு அல்லாஹ் அனால் உமக்கு எம்மிடத்தில் ஒரு நன்மை உண்டுää இன்று உமக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது எனக் கூறுவான். ஒரு காகித அட்டை வெளிக்கொனரப்படும் அதில் أشهد أن لاإله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله என்றிருக்கும். அதாவது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனின் அடிமையும் தூதுவருமாகும் என காணப்படும். நான் உமது நிறுவையைக் கொண்டுவருகிறேன் என அல்லாஹ் கூறுவான். அம்மனிதன் இந்த பதிவுகளோடு இந்த அட்டை என்ன? என வினவுவான். அதற்கு அல்லாஹ்: நீர் அநியாயம் செய்யப்படமாட்டீர் எனக் கூறுவான். பிறகு அந்த பதிவேடுகள் தராசின் ஒரு தட்டிலும் அந்த சிரிய காகிதத்துண்டு ஒரு தட்டிலும் வைக்கப்படும்;. பதிவுகள் வெறுமையாகிப் போய் அட்டை பாரமாக இருக்கும். இது அல்லாஹ்வின் திருநாமத்தை விட எதுவும் பாரமாக இருக்காது என்பதனாலாகும். (அல்பானியின் ஸஹீஹான ஹதீஸ்களின் தொடர்ச்சி.)
தொழுகை ஒளியாகும்
இறைதூதரின் கூற்று: (தொழுகை என்பது ஒளியாகும். ஓளியினால்; நாம் இருளில் வெளிச்சம் பெறுகிறோம். அதன் மூலம் நாம் நன்மைபயக்கக்கூடிய தீமை செய்யக்கூடியவற்றை பிரித்தறியவும் சரியான வழியை பெறவும் முடிகிறது. ஆவ்வாறே ஒரு அடியான் அல்லாஹ் கட்டளையிட்டவாறு தொழுகையை நிறைவேற்றும் போது அவனது இதயம் நேர்வழி எனும் ஒளியைப் பெறுகிறது. சத்தியம் அசத்தியத்தைப் பிரித்தறியும் நிலை ஏற்படுகிறது. அல்லாஹ் கூறுனிறான்: (நிச்சியமாக தொழுகை மானக்கேடான வெறுக்கத்தக்கக் காரியங்களிலிருந்து தடுக்கிறது. (அன்கபூத்: 45).
அதே போன்று தொழுகிறவரின் முகத்தில் உலகில் பிரகாசம் உண்டாகிறது. அல்லாஹ் கூறுகின்றான்: (அவர்களது முகங்களில் சுஜுதின் அடையாளங்கள் தென்படும) (பத்ஹ்-29)
தொழுபவர் மறுமை நாளையிலும் ஒளியுடையவராகக் காணப்படுவார். அல்லாஹ் கூறுகின்றான்: ( அவர்களிடத்திலும் அவர்களது வலது கரங்களிலும் ஒளி காணப்படும்- ஹதீத்-12)
இதனால் தான் நபியவர்கள் தொழுகை அதனை நிறைவேற்றுபவருக்கு ஒளியாக இருக்கும் என்றார்கள். இங்கு கடமையான உபரியான தொழுகையின் பால் பெரருமளவு ஆசையூட்டப்படுகிறது. ஒரு அடியான் தனது உள்ளம் தூய்மைபெற அழுக்குகளிலிருந்து தூய்மையடைய ஏவப்பட்டது போல் அதனை நிறைவேற்ற வேண்டும். இதனால் நல்லடியார்களோடு சேர்ந்து சுவர்க்கம் நுழைய இலகுவாக இருக்கும்.
தர்மம் ஆதாரமாகும்
நபியவரகளின் கூற்று: தர்மம் ஆதாரமாகும்
புர்ஹான் என்து: தெளிவான பிரித்துக் காட்டக் கூடிய ஆதாரமாகும்
மனித உள்ளங்கள் செல்வத்தின் பால் ஆசை கொள்கின்றன. இறைவன் கூறுகின்றான்;: “மனிதர்களுக்கு பெண்கள்ää குழந்தைகள் தங்கம் வெள்ளியால் குவிக்கப்பட்ட குவியல்கள்ää பயிற்றப்பட்ட குதிரைகள் கால்நடைகள்ää விளைச்சல் என்பவற்றின் பாலான மோகம் ஆசை அலங்காரமாக்கப்பட்டுள்ளன) (ஆலு இம்ரான்:14)
அல்லாஹ் கூறுகின்றான்: (நீங்கள் சொத்தின் பால் அதிக மோகம் கொள்கின்றீர்கள்) பஜ்ர்: 20) அடியான் கருமித்தனம் கொண்டவனாக இருக்கும் நிலையில் ஒரு அடியான் தனது எஜமானின் கட்டளைக்குப் பணிந்து மறுமை நாளில் தர்மம் செய்வோருக்கு அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ள நற்கூலியை எதிர்பார்த்தவனாக தனது உள்ளத்தைக் கட்டுப்படுத்தி ஆசையை அடக்கி கடமையாக்கப்பட்ட ஸகாதை அல்லது ஸதகாவை வெளியே எடுத்து தனது சக சகோதரனுக்கு வழங்கும் போது இச்செயற்பாடு அவனது விசுவாசம்ää நிலைத்திருத்தல்ää தூய்மையான உலகப் பொருள் என்பவற்றின் ஆதாரமாக இருக்கிறது.
பொறுமை பிரகாசமாகும்
நபியவர்களின் கூற்று: (பொறுமை பிரகாசமாகும்) பொறுமை: பதட்டப்படுவதிலிருந்து உள்ளத்தைக் கட்டுப்படுத்துவதாகும்.
பிரகாசம்:
இப்னு ரஜப் அவர்கள் கூறும் போது: (பிரகாசம் என்பது சூரியனின் பிரகாசத்தையொத்த வெப்பம்ää எரிதன்மை கொண்ட ஒரு வகையான ஒளிச் சுடராகும். அது சந்திரனின் ஒளிக்கு மாற்றமானது. அது எரியும் தன்மையற்ற வெறும் பிரகாசமேயாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்: “அவன் தான் சூரியனை பிரகாசமாகசும் சந்திரனை ஒளியாகவும் ஆக்கினான். (யூனுஸ்:5)
மேலும் அவர் கூறுகிறார்: ( பொறுமை உள்ளங்களுக்கு கஷ்;டமாகவும் அது உளப்போராட்டத்தை அதன் கட்டுப்பாட்டை ஆசைகளிலிருந்து அதனை தடுப்பதை வேண்டி நிற்கும் காலமெல்லாம் பிரகாசமாக இருக்கும். (ஜாமிஉல் உலூம் வல் ஹிகம்)
பொறுமை என்பது பிரகாசமாகும் என்பதன் அர்த்தம் பற்றி இமாம் நவவி கூறும் போது :(பொறுமை புகழப்படக்கூடியது அதனைக் கொண்டுள்ளவன் எப்போதும் பிரகாசமுடையவனாக நேர்வழி பெற்றவனாக சரியானதில் இருப்பவனாகக் காணப்படுவான்) (முஸ்லிமின் விளக்கம்ää தூய்மை என்ற பாடம்.)
இங்கு கீழ்வரும் விடயங்களில் தெளிவு பெறுவது அவசியமாகும்:
1. அல்லாஹ் பொறுமையின் பால் கட்டளையிட்டுள்ளான்
அல்லாஹ் கூறுகின்றான்: (விசுவாசிகளே நீங்கள் பொறுமையாக இருங்கள்ää பரஸ்பரம் பொறுமை கொள்ளுங்கள் ஒன்றிணைந்திருங்கள்ää அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்) (ஆலு இம்ரான்:200)
அதே போன்று அல்லாஹ் நபியவர்களுக்கு இறை நிராகரிப்பாளர்கள்ää நயவஞ்சகர்களின் தீங்குகளிலிருந்து பொறுமையாக இருக்குமாறு கட்டளையிட்டான். (அவர்கள் கூறும் விடயங்களில் பொறுமையாக இருப்பீராகää காலையிலும் மாலையிலும் அவனது புகழை துதி செய்வீராக) (காப்: 40)
2. பொறுமையின் சிறப்பு: பொறுமைக்கான கூலி நிலையான அருள்கள் நிறைந்த சுவர்க்கமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: (அவர்கள் பொறுமையாக இருந்தமைக்காக சுவர்க்கத்தில் தனியான அறை வழங்கப்படும் அங்கு அவர்கள் பாதுகாப்புää ஸலாம்ää வாழ்த்துக்களைப் பெறுவார்கள். நிரந்தரமாக இருப்பார்கள். அது நிலையான சிறந்த இடமாகவும் தங்குமிடமாகவும் இருக்கிறது) (புர்கான்:76)
அல்லாஹ் கூறுகின்றான்: (பொறுமையாளர்களைத் தவிர அதனை அடைந்து கொள்ள மாட்டார்கள். இன்னும் மகத்தான அதிரஷ்டசாலிகளைத் தவிர அதனை அடைந்து கொள்ள மாட்hர்கள்) (புஸ்ஸிலத்: 35)
அல்லாஹ் கூறுகின்றான்: (அவர்களின் பொறுமைக்குக் கூலி சுவர்க்கமும் பட்டுமாகும் (அல்இன்சான்:12)
அல்லாஹ் கூறுகின்றான்:( பொறுமையாளர்களின் கூலிகள் கணக்கின்றி நிரப்பமாக வழங்கப்படும்) ஸ{மர்:10)
3. பொறுமையின் வகைகள்:
அ. அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதில் பொறுமை கொள்ளல்:
ஒரு அடியான் கடமைகளை நிறைவேற்ற தனது உள்ளத்தைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். கட்டுப்படுதலை தடுக்கும் தடைகள் நிறைய காணப்படுகின்றன. அவற்றுள் ஷைத்தான்ää ஆத்மாää மனோ இச்சைää உலக ஆபாசங்களளும் அதன் மோகங்களும் முக்கியமானவை.
அல்லாஹ் கூறுகின்றான்: (தொழுகையைக் கொண்டு உமது குடும்பத்தை ஏவுவீராகää அதில் நீர் பொறுமையாக நிலைத்திருப்பீராக) (தாஹா:132)
அல்லாஹ் கூறுகின்றான்: ( உமக்கு வஹீயாக அறிவிக்கப்பட்டவற்றை பின்பற்றுவீராகää அல்லாஹ் தீர்ப்பு வழங்கும் வரை பொறுமை கொள்வீராக) (யூனுஸ்:109)
அல்லாஹ் கூறுகின்றான்: ( அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியவர்களாக தமது இரட்சகனை காலையிலும் மாலையிலும் அழைப்பவர்களோடு உமது உள்ளத்தைக் கட்டுப்படுத்துவீராக) (கஹ்ப்:28)
அல்லாஹ் கூறுகின்றான்: (வானங்கள் பூமி அவற்றுக்கிடைப்பட்டவற்றின் இரட்சகனை வழிபட்டு அவனை வழிப்படுவதில் பொறுமை கொள்வீராக) (மர்யம்:65)
ஆ. பாவங்களை விட்டுவிடுவதில் பொறுமை கொள்ளல்:
பாவங்களை ஷைத்தான் அலங்கரித்து மக்களுக்கு நல்லதாகக் காண்பிக்கிறான். அவற்றின் பால் பிழையான வழிகளில் அழைக்கின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்: (நிச்சியமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாகும். அவனை நீங்கள் எதிரியாகக் கொள்ளுங்கள். அவன் தனது கூட்டத்தை அழைப்பதெல்லாம் நரகத்திற்குரியவர்களாக இருப்பதற்காகும்.) (பாதிர்:6)
இ. சோதனைகள தாங்கிக் கொள்ள பொறுமை கொள்ளல்:
சோதனைகள் அடியார்கள் மீதான அல்லாஹ்வின் நியதிகளில் உள்ளவை. அல்லாஹ் கூறுகின்றான்: அலிப் லாம் மீம் - மனிதர்கள் சோதனைகளைச் சந்திக்காது நாம் ஈமான் கொண்டு விட்டோம் எனக் கூறினால் விட்டுவிடப்படுவார்கள் என நினைக்கின்றார்களா?. அவர்களுக்கு முன்சென்றோரையும் நாம் சோதித்திருக்கிறோம். உண்மைபடுத்தியோரையும் பொய்யர்களையும் அல்லாஹ் நன்கறிவான்) (அன்கப10த்:1-2)
ஒருவன் தனது உடம்புää சொத்துää பிள்ளைகள்ää குடும்பத்தால் சோதனைக்குட்படுத்தப்படுவான். அல்லாஹ் நாடியிருந்த இந்த சோதனை மீது அவன் பொறுமை கொள்வது அவசியமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: “நாம் உங்களை அச்சம்ää பசிää சொத்துக்கள்ää உயிர்கள்ää பயிர்களின் நஷ்டம் என்பவற்றால் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நன்மாறயாம் கூறுவீராக. அவர்களுக்கு ஏதாவது சோதனை துன்பம் நேரிட்டால்ää நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள்ää அவன் பக்கமே மீள்கிறோம் என்று கூறுவார்கள். அவர்கள் மீது அவர்களது இரட்சகனின் கிருபையும் அருளும் உண்டு. அவர்கள் தான் நேர்வழி பெற்றவர்கள்). (பகரா- 157.)
குர்ஆன் அடியார்களுக்கான அல்லாஹ்வின் ஆதாரமாகும்
நபியவர்களின் கூற்று: (குர்ஆன் உனக்கு சார்பான அல்லது உமக்கெதிரான ஆதாமாகும்). யார் அல்லாஹ்வின் வேதத்திலிருந்து சிலவற்றைக் கற்று அதில் கடமையானவற்வை செயற்படுத்தியும் தடுக்கப்பட்டவற்றை விலக்கியும் அதன் வரையறைகளோடு நின்று கொள்கின்றாரோää குர்ஆன் அவருக்கு மறுமைநாளில் ஆதாரமாகவும சிபாரிசு செய்யக் கூடியதாகவும் இருக்கும்.
அபூ உமாமா அல்பாஹிலி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். (குர்ஆனை ஓதுங்கள். அது மறுமை நாளில் அதனை ஓதியவருக்கு சிபாரிசு செய்யக் கூடியதாக வரும். ஸஹ்ராவைன் என அழைக்கப்படும் சூறா பகராää ஆலு இம்ரான் ஆகிய இரு சூறாக்களையும் ஓதுங்கள். அவையிரண்டும் மறுமை நாளில் மேகமாக அல்லது இறக்கைகளை விரித்த பறவையாக வரும் அவை தமது தோழர்களை மூடிக்கொள்ளும். சூறா பகராவை ஓதுங்கள் அதனை எடுத்துக் கொண்டால் அது பரகத்தாக அமையும். அதனை விட்டுவிட்டால் கைசேதமாகும். அதனை எந்த சூனியக் காரியாலும் வெற்றி கொள்ள முடியாது) முஆவியா கூறும் போது: பதலா என்பது சூனியக்காரியாகும் என்றார். (ஸஹ{ஹ் முஸ்லிம்).
யார் அதன் படி செயற்பட வில்லையோ அதன் படி வழிநடக்கவில்லையோää இன்னும் அதனை எவர் பரகத்துக்காக மற்றும் இறந்து போனவர்களுகான வைபவங்களுக்காகவும் மாத்திரம் ஓதியுள்ளார்களோ. அப்போது குர்ஆன் அவருக்கெதிராக ஆதாரமாக அமையும். உலகத்திற்கு முன்னால் மறுமையில் அது அவருக்கு கடிவாளமிடும். இப்னு மஸ்ஊம் கூறும் போது: “யார் அதனை முதுகுக்குப் பின்னால் வைக்கிறாரோ அது அவரை நரகத்தின் பால் இட்டுச் செல்லும். மேலும்: மறுமைநாளில் குர்ஆன் வந்து அதன் தோழனுக்கு சிபாரிசு செய்யும். சுவர்க்கத்தின் பால் இட்டுச் செல்லும். அல்லது அவருக்கெதிராக சாட்சிகூறி அவரை நரகத்திற்கு இட்டுச் செல்லும். (ஜாமிஉல் உலூம் வல்ஹிகம்).
நிச்சயமாக உங்கள் முயற்சிகள் பலதரப்பட்டவையாகும்.
நபியவர்களின் கூற்று: ஒவ்வொரு மனிதரும் காலையில் தனது ஆத்மாவுக்காக முயற்சி செயது விரைகிறார்கள். சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு அதனை விடுவிப்பவராக அல்லது அழிப்பவராக இருக்கின்றார்) ஒவ்வொரு மனிதரும் காலை மாலையை அடைகின்றார்கள். உலக விவகாரங்களுக்காக முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கலல்லர். அவர்களில் சிலர் தமது ஆத்மாவை இம்மை மறுமையின் தண்டனைகளிலிருந்து விடுவித்துக் கொள்கிறார்கள். அதாவது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவதனூடாக. இன்னும் சிலர் அந்த ஆத்மாவை அழித்து இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகிறார்கள். அதாவது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்வதனூடாக அவனது கட்டளைக்கு மாற்றமாக நடப்பதனூடாக. அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் முயற்சிகள் பலதரப்பட்டவையாகும். (லைல்: 4).
இப்னு ரஜப் கூறுகிறார்: இந்த ஹதீஸ் ஒவ்வொறு மனிதனும் தனது ஆத்மாவை அழித்துக் கொள்ள அல்லது விடுவிக்க முயற்சிக்கின்றான். யார் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட முயற்சிக்கிறாரோ அவர் தனது ஆத்மாவை அல்லாஹ்வுக்காக விற்று அவனது தண்டனையிலிருந்து அதனை விடுவித்துக் கொண்டார். யார் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் முயற்சிக்கிறாரோ அவர் தனது ஆத்மாவை பொடுபோக்காக விற்று அதனை அல்லாஹ்வின் தண்டனைக்குரிய பாவங்களில் அழித்து விட்டார். ((ஜாமிஉல் உலூம் வல்ஹிகம்)
ஹதீஸின் பயன்கள்:
1. ஈமான் என்பது சொல் செயல் சார்ந்தது. கட்டுப்படுவதனால் கூடும் மாறு செய்வதால் குறையும்.
2. அதிகமாக திக்ர் செய்ய தூண்டுதல்.
3. தூய்iமாக இருக்க தூண்டுதல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக