திங்கள், 15 மே, 2017

தொழுகையில் சிறந்தது வீட்டில் நிறைவேற்றப்படும் தொழுகையேயாகும்

أفضل صلاة المرء

 தொழுகையில்  சிறந்தது 
வீட்டில் நிறைவேற்றப்படும் தொழுகையேயாகும்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்னாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால் துவங்குகிறோம்.
     அகிலத்தின் அதிபதி அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் சொந்தமாகும், அவனது ஸலாத்தும் ஸலாமும் இறுதித்தூதர் முகம்மது É அவர்கள் மீதும் அவர் அன்புக் குடும்பத்தினர்கள், ஆருயிர்த் தோழர்கள், அவர் வழியில் தொடர்ந்தவர்கள் மற்றும் மறுமை வரை அவர் வழியில் வாழ்பவர்கள் அனைவர்கள் மீதும் உண்டாகட்டும் என்று வேண்டியவனாகத் தொடர்கிறேன்.
..
ஸைய்யித் பின் ஸாபித் Ê அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி É அவர்கள் மஸ்ஜிதில் பாயினால் ஓர் அறையினைத் தயார் செய்து சில மனிதர்கள் அதிலே ஒன்று சேரும் வரை சில இரவுகள் தொழுது வந்தார்கள். பிறகு ஓரு நாள் இரவு மக்கள் நபி É அவர்களின் சப்தத்தை இழந்து விட்டார்கள். ஆதலால் சில மனிதர்கள் நபி É அவர்கள் தூங்கி இருக்கலாம் என்று எண்ணிவர்களாக அன்னாரை வெளிவரச் செய்யும் வகையில் கனைத்துக் கூச்சலிட்டார்கள்.

அப்போது நபி É அவர்கள் (இத்தொழுகை) உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சும் அளவுக்கு உங்கள் செயல்கள் இருந்ததனை நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். அவ்வாறு அது உங்கள் மீது கடமையாக்கப் பட்டு விட்டால் நீங்கள் அதனை நிறைவேற்றமாட்டீர்கள். ஆகவே மனிதர்களே உங்கள் வீடுகளில் தொழுது கொள்ளுங்கள் ஏனெனில் நிச்சயமாக ஒருவனுடைய தொழுகையில் கடமையானத் தொழுகையைத் தவிர சிறந்தது அவனது வீட்டில் நிறைவேற்றப்படும் தொழுகையேயாகும் என்று கூறினார்கள். (நூல்: புகாரி)

மேற்படி நபி வழிச்செய்தியில் பல முக்கிய விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் மிவும் முக்கியமான விடயம் ஒருவனுடைய தொழுகையில் பர்ளான தொழுகையைத் தவிரவுள்ள தராவீஹ் வித்று போன்ற சுன்னத்தான நபிலான அனைத்துத் தொழுகைகளையும் மனிதர்களே உங்கள் வீடுகளில் தொழுது கொள்ளுங்கள்”  எனும் வாசகத்தின் மூலம் அவன் தனது வீட்டிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று நபி É அவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள்.

அத்துடன் ஒருவனுடைய தொழுகையில் கடமையானத் தொழுகையைத் தவிர சிறந்தது அவனது வீட்டில் நிறைவேற்றப்படும் தொழுகையேயாகும்எனும் வாசகத்தின் மூலம் இத்தொழுகைகளை மஸ்ஜிதில் தொழுவதைவிட வீட்டில் தொழுவதே மிகவம் சிறந்தது என்றும் நபி É அவர்கள் வழி காட்டியுள்ளார்கள்.

எனவே எதிர் வருகின்ற புனித ரமழானில் நமது தராவீஹ் தொழுகைகளை முடியுமானவரை நமது வீடுகளில் தொழுவதற்கு முயற்சிப்போமாக.

அல்லாஹ் மிக அறிந்தவன்

இப்படிக்கு

முனாப் நுபார்தீன்.

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...