cyfshtpa
K];yPk;fspd; ,d;iwa mty epiyf;fhd fhuzq;fs;;.(njhlH : 03)
''நாங்கள் ஈமான் கொண்டோம்"" என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள்ää ''நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் 'நாங்கள் வழிபட்டோம்" (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. ''ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை மேலும்ää நீங்கள் அல்லாஹ்வுக்கும்ää அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில்ää எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்"" நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன். (அல்-குர்ஆன்: 49:14)
நிச்சயமாகää (உண்மையான) முஃமின்கள் யார் என்றால்ää அவர்கள் அல்லாஹ்வின் மீதும்ää அவனுடைய தூதர் மீதும்ää ஈமான் கொண்டுää பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாதுää தம் செல்வங்களைக் கொண்டும்ää தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள். (அல்-குர்ஆன்: 49:15)
மேற்படி அல்குர்ஆனின் 49:14-15 ஆகிய இரு வசனங்களும் உண்மையான முஃமின் யார் முஸ்லிம் யார் என்பதனைத் தெளிவு படுத்துகின்றது. அதாவது ஈமான் கொண்டு விட்டு வெறுமனே வணக்கவழிபாடுகளுடன் தங்களது வாழ்வை சுருக்கி கொண்டபவர்கள் முஸ்லிம்கள் என்றும் தங்களது உயிர் உடல் பொருள் மற்றும் காலநேரலங்கள் போன்ற வளங்களால் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்பவர்கள்தான் உண்மையான முஃமின்கள் என்றும் எம்மால் விளங்கிக்கொள்ள முடிகின்றது.
நிச்சயமாக இவ்விரு பிரிவினர்களும் சமமாக மாட்டார்கள்.
ஈமான் கொண்டவர்களில் (நோய்ää பலஹீனம்ää முதுமைää பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும்ää தங்களுடைய சொத்துக்களையும்ää தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக)அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாகமாட்டர்கள் தங்களுடைய பொருட்களையும் தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அறப்போர் செய்வோரைää உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்;. எனினும்ää ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்;. ஆனால் அறப்போர் செய்வோருக்கோää (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான். (அல்-குர்ஆன்: 4:95)
ஈமானின் கடைசித் தரத்திறகான அடையாளம்; இதற்கப்பால் ஈமான் கிடையாது
நபி (ஸல்லள்ளாஹ{ அலைஹி வஸல்லம்;) அவர்கள் கூறினார்கள்:-
உங்களில் எவர் தீமையைக் காண்கின்றாரோ அவர் தனது கரத்தால் அதனைத் தடுக்க வேண்டும்ää அதற்கு அவர் சக்தி பெறாவிட்டால்; நாவினால் அதைத் தடுக்க வேண்டும்ää அதற்கும் அவரால் முடியாவிட்டால் மனதால் அதனை வெறுத்துக்கொள்ள வேண்டும். இதுவே ஈமானின் பலவீனமான இறுதி நிலையாகும். ஆதாரம்: முஸ்லிம்.
பிரிதோர் அறிவிப்பில் இதற்கு அப்பால் ஈமானின் படித்தரமொன்று கிடையாது என்று வந்துள்ளது.
இந்த நபி மொழியில் எம்மை சற்று உரசி பார்ப்போம் எம்மிடம் ஈமான் இருக்கின்றதா? என்பதை நாமே அறிந்து கொள்ளலாம்.
எம்மைச் சூள எத்தனை தீமைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன இவற்றைப்பற்றி நாம் எந்த அளவு கரிசனை காட்டுகின்றோம் என்பதை சிந்தித்துப்பாருங்கள்.
குறைந்த பட்சம் எம்மால் அத்தீமைகளை கையினாலும் நாவினாலும் தடுக்க முடியா விட்டாலும் மனதாலாவது எம்மில் எத்தை பேர் வெறுக்குகின்றோம்.
மனதாலாவது வெறுக்காத ஒரு மனிதனிடம் ஈமான் அறவே இருக்க முடியாது என்றுதான் நபி (ஸல்லள்ளாஹ{ அலைஹி வஸல்லம்;)அவர்கள் மேற்படி பொன் மொழி மூலம் தெளிவு படுத்துகின்றார்கள்.
ஈமான் உடையோரின் அடையாளம்
.
1. தான விரும்புவதை தன் சகோதரமுஸ்லிமுக்கும் விரும்புதல்.
நபி (ஸல்லள்ளாஹ{ அலைஹி வஸல்லம்;) அவர்கள் கூறினார்கள்:-
எனது உயிர் எவன் கைவசத்தில் இருக்கிறதோ அ(ந்த இறைவன்)வன் மீது சத்தியமாக! தமக்கு விருப்பமான ஒன்றைத் தமது சகோதரனுக்கும் விரும்பும் வரை உங்களில் எவரும் இறைநம்பிக்கை கொண்டவர் ஆகமாட்டார். (அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல்:புகாரிää முஸ்லிம்)
2. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு காட்டுதல்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை சுவர்க்கதினுள் நுழையமாட்டீர்கள்; இன்னும் ஒருவருக்கொருவர் சினேகம் கொள்ளும்; வரை இறைநம்பிக்கை கொண்டவர்களாகமாட்டீர்கள். நீங்கள் எந்த செயலை செய்தால் உங்களிடையே அன்பு ஏற்படுமோ அத்தகு செயல்முறை (திட்டத்தை) அறிவிக்க வேண்டாமா? உங்களிடையே 'ஸலாம்' கூறுவதை பரவலாக்குங்கள்'' (அறிவிப்பவர்: அப10ஹ{ரைரா (ரழி) நூல்: முஸ்லிம்)
முதல் நபி மொழியில் தான் விரும்புவதை தன் சகோதர முஸ்லிமுக்கு விரும்பாதவன் முஃமினாக மாட்டான் என்பதனை நபி (ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள்.
இரண்டாம் நபி மொழி கூறுகின்றது முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சினேகம் கொள்ளாதவரை முஃமின்களாக முடியாது என்று. எனவே முதலில் நாம் விரும்புவதை நம் சகோதர முஸ்லிமுக்கும் விரும்பவேண்டும் அவ்வாறே நாம் ஒருவருக்கொருவர் அன்பு கொள்வதும் நாம் உண்மை விசுவாசியாக ஆவதற்கு மிகவும்; அவசியமாகும்.
இந்த இருபண்புகளும் நம்மிடம் இல்லை என்றால் உண்மையில் நாம் முஃமீன்கள் இல்லை என்பதுதான் பொருளாகும்.
இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம் மேற்படி நபி மொழியின் ஒளியில் நம்மை சற்று எடைபோட்டு பார்ப்போம். நாம் உண்மையில் இறை விசுவாசிள்தானா? அப்படி என்றால் எந்த அளவு நாம் விரும்புவதை நம் சகோதர முஸ்லிமுக்கு விரும்புகின்றோம்? அப்படி விரும்பாதவரை நாம் உண்மையில் (முஃமின்கள்) இறைவிசுவாசிகள் ஆகமுடியுமா? என்று பார்க்கும் போது மனிதர்களில் அதிகமானோர் பெயரளவில் (முஃமீன்கள்) இறைவிசுவாசிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் உண்மையில் அவர்கள் இறைவிசுவாசிகள் (முஃமின்கள்) அல்லர்.
இறைவிசுவாசிகள் (முஃமின்கள்) ஆகாத வரை நிச்சயமாக இம்மையில் வெற்றி பெறவோ அல்லது நாளை மறுமையில் சுவர்க்கம் செல்லவோ முடியாது.
இந்த தலைப்பின் கீழ் அதிகமான நபி மொழிகள் காணப்பாட்டாலும் இந்த இரண்டு நபி மொழிகளும் போதும் எனகருதுகின்றேன்.
தொடர் 02 யைப் படிக்க இதன் கீழ் தரப்பட்டுள்ள தலைப்பை சொடுக்கவும்
SRILANKA ISLAMIC GUIDANCE CENTRE :
உலகளாவிய முஸ்லீம்களின் இன்றைய அவல நிலைக்கான காரணங்கள்;.(தொடர்: 02)
aslislamguide.blogspot.com
தொடர் 02 யைப் படிக்க இதன் கீழ் தரப்பட்டுள்ள தலைப்பை சொடுக்கவும்
SRILANKA ISLAMIC GUIDANCE CENTRE :
உலகளாவிய முஸ்லீம்களின் இன்றைய அவல நிலைக்கான காரணங்கள்;.(தொடர்: 02)
aslislamguide.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக